தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஈவ்லின் அம்மையார் (1879-1974)  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஈவ்லின் அம்மையார் (1879-1974)  Empty ஈவ்லின் அம்மையார் (1879-1974)

Tue Jul 22, 2014 7:28 pm

முதிர்வயதிலும் கொல்லிமலையில் நற்செய்தியை அறிவித்த ஈவ்லின் அம்மையார்

1911- ம் ஆண்டு கொல்லிமலையை குறித்த ஜெசிமெனின் கட்டுரை அநேகருக்கு ஆத்தும ஆதாய பாரத்தை ஏற்படுத்தியது. அதில் ஒருவர் திருமதி. எல்னா என்ற விதவை மற்றொருவர் ஈவ்லின்: ஒரு செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர், ஜெசிமெனைப் போல எல்லா செல்வத்தையும் உதறி விட்டு இந்தியாவில் தேவப்பணி செய்ய தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பாரத்தோடு இந்தியா நோக்கி பயணம் செய்தார்கள். ஈவ்லின், நீலகிரி மலையில் உள்ள குன்னூரில் தமிழ் மொழி கற்க அனுப்பபட்டார்கள். ஜெசிமனுக்கோ சென்னையில் இருந்து ஊழியம் செய்வதோடு, பாப்டிஸ்ட் சங்கத்தின் மற்ற பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. எல்லா மிஷனரிகளுக்கும் சங்கத்தின் செய்திகளை கடிதம் அனுப்பும் வேலையும் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஈவ்லினை கடிதங்கள் மூலம் தேற்றினார் ஜெசிமென். தேவனிடமிருந்து பெற்ற “TRUST and TRIUMPH’ என்ற வார்த்தையை ஈவ்லினோடு பகிர்ந்து கொண்டு குணமடைய உதவி செய்தார் ஜெசிமென். 1913-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் சேந்தமங்கலத்தில் ஜெசிமெனுக்கும் ஈவ்லினுக்கும் SBM ஆலயத்தில வைத்து திருமணம் நடந்தது. திருமணம் நடந்த அன்று மாலையே திருமனதம்பதியினர் கொல்லிமலையை நோக்கி பிரயாணத்தை ஆரம்பித்தார்கள். ஏற்கனவே ஜெசிமென் வாழவந்தி என்ற இடத்தில் கட்டியிருந்த மரவீட்டிர்க்கு பல கிலோ மீட்டர்கள் நடந்தும், டோலியிலும் வந்து சேர்ந்தார்கள். பின்னர் அநேக மெடிக்கல் கேம்ப்கள் மூலம், கிராமங்களை சந்தித்தனர். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு பகுதியில் தங்கி மெடிக்கல் கேம்ப்கள் நடத்தினர். அந்த நேரத்தில் அந்த கிராமங்களில் இருக்கும் ஆடு அல்லது மாட்டு கொட்டகைகளே அவர்களுக்கு தங்குமிடமாக இருந்தது. 

கொல்லிமலையில் இயேசுவின் நற்செய்தி

கொல்லிமலை தமிழ் நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலையை சார்ந்தது. இங்கு காராளர் என்ற மலை ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். இது கடல் மட்டத்திலிருது 3000 முதல் 4000 அடி உயரமுள்ளது. 40Km நீளமும் 16Km அகலமும் கொண்ட காடுகள் அடர்ந்த பிரதேசம். இங்கு கரடி, செந்நாய் போன்ற மிருகங்கள் காணப்படுகிறது. இது பதினான்கு நாடுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் பல கிராமங்கள் இருந்தது. மேலும் கொல்லிமலையானது கொடிய மலேரியா பிரதேசமாக இருந்தது. எந்த ஒரு மிஷனரியும் கால் வைத்திராத கிராம்கள் இருந்தது. ஒரு கிறிஸ்த்தவன் கூட இல்லாதிருந்தது. எந்த பள்ளி கூடமும் இல்லாதிருந்தது. குழந்தை திருமணம் அதிகளவில் காணப்பட்டது. ஒரு பெண்ணும் ஆணும் விபச்சாரத்தில் பிடிபட்டால், அந்த விபச்சாரத்தில் ஈடுபட்ட மனிதன், ஊர் மக்களுக்கு, கேள்விறகு கழி செய்து, பன்றி இறைச்சியோடு விருந்து கொடுக்க வேண்டும். அப்பொழுது அவன் பாவம் மன்னிக்கப்பட்டு அவன் விபச்சாரத்தில் ஈடுபட்டவளோடு சேர்ந்து வாழலாம். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தால், அவளுடைய பழைய புருஷனுக்கு அவன் பணம் கொடுக்க வேண்டும். பழைய கணவர் மேலும் அந்த பெண்ணை உரிமை கூற முடியாது. ஆனால் அவன் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். இந்த மலை மக்கள் ஆவி வணக்கத்தை உடையவர்கள், இவர்கள் பேய்களின் தலைவன் இருசிக்கருப்பனுக்கு பன்றியின் இரத்தத்தை ஊற்றிவிட்டு, பன்றி இறைச்சியை சாப்பிடுவார்கள். இங்கு வாழும் மக்கள் பூசாரிகளிடம் குறிகேட்பதர்க்கும், வியாதி வந்தாலும் செல்வார்கள். ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு பூசாரியின் ஆளுகைக்கு உட்பட்டது. ரோடு வசதி என்பது முற்றிலும் இல்லாததால் வெளிஉலகத்துடன் முற்றிலும் தொடர்பில்லாதிருந்தது. இப்படிப்பட்ட மலைபகுதியில் யார் சென்று ஊழியம் செய்ய முடியும், யார் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க கூடும். 1913-ம் ஆண்டு ஜெசிமென், ஈவ்லின் தம்பதியினர், பாடுகளும் கடினமானதுமான கொல்லிமலைக்கு இயேசுவின் அன்பை எடுத்து சென்றார்.

ஜெசிமென் மரணமும் ஈவ்லின் அம்மையாரின் இங்கிலாந்து பயணமும்

கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலை என்ற 5 மலைகளில் கிறிஸ்துவை அறியாமல் வாழும் மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என்று உறுதிமொழி செய்திருந்தனர் ஜெசிமென், ஈவ்லின் தம்பதியினர். ஆனால் எதிர்பாராத விதமாக ஜெசிமென் மரித்துபோனதால் கொல்லிமலை மற்றும் பச்சைமலைக்கு மட்டுமே சென்று கிறிஸ்த்துவை அறிவிக்க முடிந்தது. இந்நிலையில் தகப்பனை இழந்த தமது பிள்ளைகளை பார்க்க இங்கிலாந்து சென்றார் ஈவ்லின் அம்மையார். சில நாட்கள் பிள்ளைகளோடு செலவழித்த பின் மீண்டும் கொல்லிமலைக்கு வந்து ஊழியத்தை தொடர ஸ்ட்ரிக்ட் பாப்டிஸ்ட் மிஷனில் விண்ணபித்தார். ஆனால் தனியாக, வயதான காலத்தில் ஈவ்லின் கொல்லிமலைக்கு செல்லுவதை விரும்பாத ஸ்ட்ரிக்ட் பாப்டிஸ்ட் மிஷன், ஈவ்லினுடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. தொடர்ந்து அந்த மிஷனில் பணி செய்த ஈவ்லின் அம்மையார் தனக்கு கிடைக்கும் சிறு சம்பளைத்தை கொல்லிமலை ஊழியத்திற்காக சேர்த்து வைக்க தொடங்கினார். தான் தனது கணவரோடு, கொல்லிமலையில் செய்துவந்த ஊழியத்தை எப்படியாவது தொடர வேண்டும் என்று பலமுறை முயற்சி செய்தாலும் பாப்டிஸ்ட் மிஷன் அதற்க்கு ஒத்துழைக்கவில்லை. மிஷனுடைய அனுமதி பெற்றபின் தான் அவரால் இந்தியாவிற்கு மீண்டும் வர முடியும். ஈவ்லின் இப்படியாக 18 வருடம் இங்கிலாந்தில் இருக்க நேரிட்டது. தனது 68-ம் வயதில் தன்னை ஒரே ஒரு முறை இந்தியாவிற்கு அனுப்பும் படியாகவும், மிஷன் கொடுக்கும் இடத்தில தங்கி ஒரு வருடம் மாத்திரம் தங்கி ஊழியம் செய்து, ஓய்வுபெற்ற பின் மீண்டும் இங்கிலாந்து வந்து விடுவதாகவும், மிஷனுக்கு தாழ்மையோடு தெரிவித்தார். இந்தியா சென்று ஒரு வருடம் ஊழியம் செய்ய மிஷன் அனுமதி அளித்தது. ஈவ்லின் அம்மையார் தனது 68-ம் வயதில் இறுதியில் 1947-ம் வருடம் ஜனவரி மாதம் சென்னை வந்தார். 

கொல்லிமலையில் ஈவ்லின் அம்மையாரின் ஊழியம் 

ஒரு வருட ஊழியத்தை சென்னை பாப்டிஸ்ட் மிஷனில் செய்த ஈவ்லின் அம்மையார், தனது 70-ம் மிஷனில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பை புறக்கணித்து, ஜெசிமென் விட்டு சென்ற கொல்லிமலை ஊழியத்தை தொடர கொல்லிமலை சென்றார். ஐந்து மலைகளுக்கு இயேசுவை அறிவிக்க வேண்டும் என்று தம்பதியினர் எடுத்திருந்த காரியத்தை நிறைவேற்ற 70 வயது நிரம்பிய ஈவ்லின் அம்மையார் கிறிஸ்த்துவின் பெலத்தொடு மரண மலையாகிய கொல்லிமலைக்கு சென்றார். 

ஜெசிமென் இறந்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பின்பு கொல்லிமலைக்கு வந்த ஈவ்லின் அம்மையார் தமது கனவரின் கடைசி வார்த்தையாகிய “கொல்லிமலை கர்த்தருடைய மலை ஆகுவதாக” என்ற ஆசையை நிறைவேற்ற துரிதமாய் செயல்பட்டார். குதிரை சாவரி செய்தும், டோலியில் சென்றும், அனுதினமும் 20 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்து, பல கிராமங்களை சந்தித்து கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். டோலி என்பது 9 அடி நீளமுள்ள இரண்டு மூங்கில்கள், மத்தியில் துணியிருக்கும். இதில் ஆட்கள் ஏறி உட்கார்ந்து கொள்ளுவார்கள். இதை முன்னால் இருவரும் பின்னால் இருவருமாக தூக்கிசெல்வார்கள். இவ்வாறாக ஒருமுறை டோலியில் செல்லும் பொழுது, தூக்கி சென்றவர்கள் தவறி விழுந்ததால், ஈவ்லின் அம்மையார் பாறையில் விழுந்து, தலையில் அடிபட்டு, எலும்பு முறிவுடன் உயிர் தப்பினார். அந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து வந்தார். கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைதிருக்கும் கொல்லிமலை, பச்சமலை, கல்வராயன் மலைகள், போதமலை, பைத்தூர் மலையில் வசிக்கும் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை முதலாவதாக அறிவிக்கும் சிலாக்கியத்தை பெற்றார். கொல்லிமலைக்கு மிஷனரியாக அர்பணித்திருந்த. ஈவ்லினுடைய அண்ணன் மகள் ரூத் ஹாரிஸ், அம்மையாருக்கு இந்த காலகட்டத்தில் உருதுணையாக இருந்தார். 70 வயதில் ஊழியத்தை தொடங்கிய ஈவ்லின் அம்மையார் தனது 95-ம் வயதில், 1974-ல் மரணத்தை சந்திக்கும் வரை மலைமக்ளுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து தனது கணவர் திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்களின் கல்லறை அருகினில் கொல்லிமலையிலேயே கோதுமை மணியாக விதைக்கப்பட்டார்.
44 வயதே வாழ்ந்த திரு. ஜெசிமென் பிராண்ட் அவர்கள் தமது வாழ்நாளில் 17 வருடங்களை கொல்லிமலை மக்களுக்காக தியாகம் செய்து மலைமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இன்றளவும் மலைமக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகிறார். 70 வயதில் ஊழியத்தை துவங்கிய ஈவ்லின் அம்மையார் அவர்கள் கொல்லிமலையின் 14 நாடுகளிலுமே கிறிஸ்துவின் அன்பை கொண்டுசென்ற முதல் மிஷனரியாக மாறினார். அம்மையாரின் முதிர் வயதிலும், தனது சரீர பெலவீனத்தின் மத்தியிலும் கர்த்தருக்காய், ரோடு வசதிகள் இல்லாத மலைப்பகுதிகளுக்கு கிறிஸ்த்துவின் அன்பை எடுத்து சென்றார். இன்றைக்கு அத்திருப்பணியை அருட்திரு. எலியாஸ் ஐயா அவர்களும், மற்றும் 15 ஊழியர்களும் கொல்லிமலை மக்களுக்காக ஊழியம் செய்து வருகின்றனர்.

இளைஞர்களாகிய ஆண்களே, வாலிப பெண்களே இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் செய்ய துணிந்து நிற்கும் காலம் முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள். தேவ ஊழியர்கள் கால் வைக்காத இடங்களும், சுவிசேஷம் செல்லாத இடங்களும் இன்னும் அனேகம் உண்டு. எங்கோ பிறந்த திரு. ஜெசிமென் பிராண்ட் ஐயா தமிழகம் வந்து, கொல்லி மலை மக்களுக்காக அரும்பாடு பட்டு கிறிஸ்துவின் அன்பை அந்த ஆதிவாசி ஜனங்களுக்கு கொண்டு சென்றாரே. ஈவ்லின் அம்மையார் தனக்கிருந்த செழிப்பான வாழ்கையை உதறித்தள்ளி 95 வயது வரை சரீர பெலவீனத்தின் மத்தியிலும் கிறிஸ்துவின் அன்பை அந்த ஆதிவாசி ஜனங்களுக்கு கொண்டு சென்றாரே. நீங்கள் கிறிஸ்துவின் அன்பை எடுத்துரைக்க திட மனதோடு ஆயத்தமாய் இருகீன்றீர்களா?



ஈவ்லின் அம்மையார் (1879-1974)  1475935_1441480596074074_1620476200_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum