வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864)
Tue Jul 22, 2014 7:11 pm
வேதநாயகம் சாஸ்திரியார் நெல்லையை சார்ந்தவர் என்றாலும், பொதுவாக மக்கள் சாஸ்திரியாரை,அவர் வளர்ந்ததும்,வாழ்ந்ததுமான தஞ்சாவூரையே அடையாளமாய் வைத்து இன்றும் அவரை தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் என்றே அழைக்கின்றனர். வேதநாயகம் சாஸ்திரியார் மூலமாய் கிறிஸ்துவ சமுதாயம் பெற்ற பாடல்களை நாம் இன்றளவும் சபைகளில் பாடி வருகின்றோம். இவர் 1774 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் தேதி ஞானப்பூ அம்மையாருக்கும், கவிஞர் அருணாசலம் என்ற தேவசகாயம்பிள்ளைக்கும் மகனாக பிறந்தார். அருணாசலம் கிறிஸ்தவராகி தனது பெயரை தேவசகாயம் என்று மாற்றிகொண்டார். வேதநாயகத்திற்கு அவர்களுடைய பெற்றோர் வைத்த பெயர் "வேதபோதகம்" என்பதாகும்.ஆனால் அந்நாளில் அவருடைய சபையின் குருவுனுடைய பெயரும் "வேதபோதகம்" என்றிருந்ததால் குருவின் பெயரை உச்சரிக்க கூடாது என்று குரு பக்தியின் அடிபடையில் அவரை வேதபோதகம் என்று அழைக்காமல் "வேதநாயகம்" என்று அழைத்தனர்.
தனது மாணவனின் தந்தை அருணாசலம் கிறிஸ்தவராகி, தேவசகாயமானதால் கொண்ட வெறுப்பை, ஆசிரியர் வேலுப்பிள்ளை, மாணவன் வேதநாயகத்திடம் “எமனுக்குப் படிப்பு வந்தாலும் உனக்கு படிப்பு வராது!” என்று கடிந்து கொண்டார். அழுதவண்ணம் வேதநாயகம் தன் தந்தையிடம் சென்றார். அவரோ, மிஷனரிப் போதகர் சுவார்ட்ஸின் போதனையில், மெய் மறந்து உரையாடிக் கொண்டிருந்தார். ஊர்ப்பகையால், சிறுவனுக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்ணுற்ற சுவார்ட்ஸ், “அழாதே ! பராபரன் உன்னை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவார்” எனத் தேற்றினார்.
சுவார்ட்ஸ் ஐயரின் இந்த ஆறுதல் ஆசியை, சிறுவன் வேதநாயகம் தன் வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. தனது 12-வது வயதிலேயே கவிஞனானான். பத்தொன்பதாம் வயதில் தலைமை ஆசிரியரானான். பின்னர் தன் வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து பாடி, “சுவிசேடக் கவிராயர்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றான்!. பிற்காலத்தில் அவருடைய ஆசிரியர் சொன்ன வார்த்தை வேதநாயகனுடைய வாழ்கையில் பொய்யாகிவிட்டது. பழமொழிகள் அறிந்த பண்டிதனாகவும், சாஸ்திரங்கள் பல கற்ற சாஸ்திரியகவும் சர்வ வல்லமையுள்ள தேவன் வேதநாயகனை உருவாக்கினார்.

Re: வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864)
Tue Jul 22, 2014 7:40 pm
தஞ்சையை அந்நாட்களில் ஆண்டுவந்த சரபோஜி மன்னன், சாஸ்திரியாரின் சிறுவயது நண்பரானார். அவர் சாஸ்திரியாரின் புலமையைப் பாராட்டித் தன் அரசவைக் கவிஞராக வைத்துக் கொண்டார். அவருக்கு மானியமும் வழங்கினார். “குற்றாலக் குறவஞ்சி” என்ற நாடகத்தின் அடிப்படையில் வேதநாயக சாஸ்திரியார், “பெத்லெகேம் குறவஞ்சி” என்ற பாடல் நூலைத் தனது 25-வது வயதிலேயே எழுதி, இயேசு தெய்வத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். இப்பாடல் நூலைத் தன் நண்பன் சரபோஜி மன்னனிடம் பாடிக் காட்டினார். மன்னனும் கேட்டு மகிழ்ந்தார்.
பின்னர் 1820-ம் ஆண்டு சரபோஜி, மன்னனாக முடிசூட்டப்பட்டபோது, சாஸ்திரியார் அவருக்கு வாழ்த்துப் பா ஒன்றைப் பாடினார். மகிழ்ந்த மன்னன் தான் வணங்கும் தஞ்சைப் பிரகதீஸ்வரர் மீது ஒரு குறவஞ்சி படைக்க, சாஸ்திரியாரை வேண்டினான். இதை எதிர்பாராத சாஸ்திரியார் திடுக்கிட்டார். ஏனெனில், அவர் இயேசு ஒருவரையன்றி, வேறொருவரையும் துதித்து ஆராதிப்பதில்லை. தன் பக்தி வைராக்கியத்தின்படி அரசரிடம் அமைதியாகத் தன் நிலையை எடுத்துக் கூறினார். ஆனால், சரபோஜியோ விடுவதாக இல்லை. பாடல்கள் நிறைந்த முழுநூலைப் பாடாவிட்டாலும், ஒரு பல்லவி போன்ற, காப்புச் செய்யுளையாவது, வினாயகர் மீது பாடிக்கொடுக்க வற்புறுத்தினான்.
வேதநாயக சாஸ்திரியாருக்கு மிகவும் இக்கட்டான நிலை. தன்னை மிகவும் மதித்து, ஆதரவளித்துவரும் அரசனின் வேண்டுகோள் ஒருபுறம், ஆனால் மற்றொருபுறம், தன்னையே தியாகம் செய்து, அவரைப் பாவத்திலிருந்து மீட்டெடுத்த அன்பர் இயேசு ஒருவருக்கே செலுத்த வேண்டிய புகழ் ஆராதனை. மிகுந்த மனப் போராட்டத்துடன், சாஸ்திரியார் தன் வீடு திரும்பினார். வேதனையோடு தனது தர்ம சங்கடமான நிலையை மனைவியிடம் மெதுவாக எடுத்துச் சொன்னார். “ஆண்டவரைப் பாடும் வாயால், இப்படியும் ஒன்றைப் பாடப் போகிறீர்களா?” என்று கவலையுடன் அவர் மனைவி கேட்டார். ஆனால், சாஸ்திரியாரின் உள்ளமோ, ஒரே தெய்வமாகிய, நிகரற்ற இறைவன் இயேசுவின் மீதுள்ள பக்தி வைராக்கியத்தால் பொங்கிப் பாடலாக வழிந்தது. அப்பொழுது எழுதிய பாடலே “இயேசுவையே துதி செய் நீ மனமே இயேசுவையே துதி செய்” என்ற பாடலாகும். அடுத்த நாள் மன்னர் அவையில் மிகப்பெரிய கூட்டம் கூடியிருந்தது. சாஸ்திரியார் என்ன பாட்டுப்பாட போகிறார் என்று கேட்பதற்காக. எல்லாரும் சூழ நின்று பார்த்திருக்க, மன்னர் சரபோஜி அவரையே நோக்கி கொண்டிருந்தார். மன்னர் கேட்டுக்கொண்ட படியே அவர்கள் தெய்வத்தை பற்றி ஒரு பல்லவியையாவது சாஸ்திரியார் பாடுவார் என்று எதிர்பார்த்திருக்க முன்தினம் இரவில் கர்த்தர் கொடுத்த காலத்தால் அழியாத அந்த பாடலை தைரியமாய் தன்னுடைய கணீர் குரலால் கிறிஸ்துவை உயர்த்தி பாட ஆரம்பித்தார்
இயேசுவையே துதிசெய் - நீ மனமே
இயேசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே துதிசெய்
நீ மனமே இயேசுவையே துதிசெய்
மாசணுகாத பராபர வஸ்து
நேசக்குமாரன் மெய்யான கிறிஸ்து
இயேசுவையே துதிசெய் நீ மனமே
இயேசுவையே துதி செய்
என்று தொடர்ந்து மூன்று அடிகளை மனமுருக பாடி முடித்தார். உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த மன்னரிடமிருந்து கைத்தட்டல் ஆரம்பித்தது. இறைவன் இயேசுவின் மீது சாஸ்திரியார் கொண்டிருந்த ஆழ்ந்த விசுவாசப் பற்றைப் பெரிதும் பாராட்டினான் மன்னர் சரபோஜி. “உம் தெய்வத்தைப் பற்றி நீர் எங்கும் தடையின்றி எடுத்துக் கூற, என் அனுமதி உமக்குண்டு”. என்று கூறினான். இன்றளவும் சபைகளில் இந்த பாடல் பாடப்பட்டு, தேவனுடைய நாமம் மகிமைப்பட்டு வருகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum