முகநூலில் பாதுகாப்பாக இருக்க பெண்கள் என்ன செய்யவேண்டும்.?
Fri Jul 11, 2014 1:07 pm
சமீபத்தில் ஒரு பதிவைக்கண்டேன் அதில்..........
பெண்களே புகைபடம் போடதீர்கள்... அதை சிலர் தவறான வலைதளங்களில் போட்டு உங்களை களங்கப்படுத்த வாய்ப்புள்ளது என்று சொல்லுபவர்கள், ஏன் பெண்களின் புகைப்படங்களை அப்படி தவறாகப்பயன்படுத்தாதீர்கள் என்று அவர்களுக்கு சொல்வதில்லை?” என்று கேட்கப்பட்டிருந்தது.
அது புலி உலவும் இடம் அங்கே போகாதே நீ வேட்டையாடப்படுவாய் என்று சொன்னால்....... எங்களை வேட்டையாடக்கூடாது என்று புலியிடம் சொல்லாமல் ஏன் எங்களிடம் அங்கே செல்லாதே என்று சொல்கிறீர்கள் என்று கேட்பதை போலல்லவா இருக்கிறது இந்த வாதம்.
முகநூலுமொரு வனம்தான்..... இங்கே உலவும் மான்களுக்கு தன்னை வேட்டையாடத்துடிக்கும் விலங்குகளிடமிருந்து தன்னைக்
காத்துக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அம்மிருகத்திற்கு இறையாகவேண்டியிருக்கும். அப்படி காத்துக்கொள்ள என்ன வழி......... இங்கே பார்போம். இவையெல்லாம் என்னை சுற்றி உள்ள தோழிகளுக்கு நடந்த சம்பவங்களைக் கண்டு அந்த அனுபவத்தில் நான் எழுதுவது.
1. புகைப்படம் போடுதல்.
தன் சொந்த முகத்தை மறைத்து போலி முகத்தோடு நாம் இங்கே உலவ வேண்டாம். போட்டோ போடலாம் ஆனால் அதை நம் நட்புக்கள் மட்டுமே பார்க்குமாறு போடவேண்டும் அதற்கு முன் நட்புவட்டம் நம்பத்தகுந்ததா என்று கவனியுங்கள் . இல்லை என்றால நம்பிக்கையான சில முக்கிய நட்புக்கள் மட்டுமே பார்க்கும்படி போடலாம்.... அதுவும் இல்லை என்றால் யாருமே போட்டோவை திறக்கமுடியாதபடியும் பதிவிறக்கம் செய்யமுடியாதபடியும் போடலாம் அது மிகவும் சிறந்தது.
2. நட்பு அழைப்பு.
நம்பகமான நட்புவட்டம் என்பது மிக மிக முக்கியம். ஒருவரை இணைக்கும்பொழுது அவரது சுவருக்கு சென்று ப்ரொஃபைல், லைக்ஸ், பதிவுகள் போன்றவைகளை பார்த்து இணைக்க வேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று வரும் நட்புக்கள் அனைத்தையும் இணைக்காமல் இருப்பது நல்லது.
அதிக நட்புகள் இருந்தால் அதிக கமண்ட் வரும் என்று, லைக்குக்கும் கமண்ட்டுக்கும் ஆசைப்பட்டு அனைவரையும் இணைத்து பிரச்சனையில் சிக்க வேண்டாம்.
3. ச்சேட்டிங்.
இங்கு மிக முக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது ஒன்று “ச்சேட்.”!!!! பெரும்பாலும் யாருடனும் ச்சேட் செய்வதை தவிருங்கள். அதுவே பிரச்சனையின் முதல் கட்டம். முன்பின் தெரியாத ஒருவரிடம் தன் குடும்பக் கதைகளையும் பிரச்சனைகளையும் சொல்லாதீர்கள் உங்கள் முன் நல்ல விதமாக பேசும் சிலர். பிறரிடம் உங்களை தவறாக பேசவும் நீங்கள் அவருடன் பேசியதை பிற நணபர்களுக்குக் காப்பி பேஸ்ட் செய்து அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.
உங்களிடமிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை வைத்து உங்களின் பலவீனம் தெரிந்து அந்த நபரே வேறு ஒரு ஐடியில் வந்து உங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கலாம். எனவே ச்சேட் செய்வதை கண்டிப்பாக தவிருங்கள்.
4.கைப்பேசி எண் பரிமாற்றம்.
அவசரப்பட்டு யாருக்கும் போன் நம்பர் குடுத்து பேச வேண்டாம். நம் வீட்ட்டிலுள்ளவர்களுக்குத்தெரிந்தே நாம் பேசினாலும் கூட ஒரு சமயம் போல ஒரு சமயமிருக்காது.... இதனால் வீட்டில், குடும்பத்தில் குழப்பங்கள் வர வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல.இன்று நட்புடன் இருந்து உங்களிடம் அன்பாக பேசியவர் நாளைக்கு கருத்து வேறுபாடு கொண்டு பிரிய நேரிட்டால உங்கள் கைப்பேசி எண்ணை தவறாகப்பயன்படுத்தலாம். உங்களுக்கு தொல்லைகள் கொடுக்கலாம்.
உங்களுக்கு நன்கு அறிமுகமான நண்பர்களின் தோழமைகள் என்றபோதும் அவர்களிடம் யோசித்து நம்பர் தருவதே சிறந்தது. காரணம் அந்த நபர் உங்கள் தோழமையிடம் பேசுவது போலவே கண்ணியமாக உங்களிடமும் நடந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்திரவதமும் இல்லை.
எனவே கைப்பேசி எண்கள் பறிமாற்றத்தை முற்றிலும் தவிருங்கள்.
5. சந்திப்பு.
முதலில் ச்சேட்டிங்கில் தொடங்கி, நம்பர்கொடுத்து பேசி அடுத்டு நேரில் சந்தித்து பிரச்சனையில் சிக்கித்தவித்த தோழிகளும் நிறைய உண்டு இங்கே.
நட்பு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நேரில் தனியாக சென்று பார்ப்பதை தவிருங்கள். இப்போதெல்லாம் போட்டொ எடுக்க மொபைல் கூட தேவை இல்லை ஒரு பேனாவோ ஒரு கூலினங்கிளாசோ கூட போதும் அதிலேயே கேமெரா இருக்கிறது. உங்களுக்குத்தெரியாமல் உங்களை எந்த கோணத்தில் வேண்டுமானாலும் போட்டோ எடுக்க முடியும்.
எனவே ரொம்ப அவசியம் என்றால் மட்டுமே..... பலநட்புக்கள் ஒன்று கூடும்பொழுது ஒரு கெட்டூகெதரிலோ அல்லது விழாவிலோ அல்லது நூற்றுக்கணக்கானோர் கூடியிருக்கும் பொது இடங்களிலோ சந்திக்கலாம் அதுவும் தனியே கூடாது.
6. பதிவுகள்
நமது பதிவுகள் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஒருபோதும் இருக்கக்கூடாது, இன்று வீட்டில் சண்டை, கோபமாக இருக்கிறது அழுகையாக வருகிறது, நான் இப்போது இந்த இடத்தில் இருக்கிறேன். போன்ற நம் குடும்ப விஷயங்களை பதிவிட வேண்டாம். நம் எழுத்துக்களைக் கொண்டே நம் மனநிலையை கணக்கிட்டுவிடுவார்கள். எந்த இடத்திலும் நம் பலவீனத்தை வெளிக்காட்டக்கூடாது. நான் மிகவும் தைரியமானவள் சந்தோஷமானவள் என்பதை காட்டும்படியாகவே நம் பதிவுகள் இருக்க வேண்டும்.
நள்ளிரவு தாண்டி வெகு நேரம் பெண்கள் முகநூலில் இருப்பது நல்லதல்ல. நம்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை அது தூண்டிவிடும்.
குடும்பம் , கணவன் குழந்தைகள் இதைத்தாண்டி வாழ்வில் எதுவும் பெரிதில்லை. எனவே முகநூலில் உள்ளவைகளை முகநூலிலேயே விட்டுவிடவேண்டும் அதை குடும்பத்தில் நுழைத்தால் வீண் பிரச்சனைகள் உருவாகி குடும்ப நிம்மதி அடியோடு கெட்டுவிடும். குடும்ப வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு முகநூலில் வாழ்க்கை நடத்த முடியுமா.?
மொத்தத்தில் முகநூல் ஒரு கானல் நீர் இங்கே காணும் எதுவும் உண்மை இல்லை எனபதை புரிந்துகொண்டு மேற்சொன்னவைகளை பின்பற்றினால் இங்கே நல்ல பேருடனும் நல்ல நட்புக்களுடனும் நிலைத்திருக்கலாம்.
(முகநூலில் உள்ள அனைவருமே கெட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை....... நல்லவர்களும் நிறைய உண்டு ஆனால் அதை பிரித்து அறியும் பக்குவம் வரும்வரை..... கவனமாக இருப்பது நல்லதல்லவா?)
நன்றி: சுபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum