தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..! Empty நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..!

Thu Feb 14, 2013 9:23 pm
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..! 603929_341223719316468_673858359_n



பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால்
குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால்
தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம்
கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால்,
பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும்
பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு
எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல்
பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும்,
தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால்
அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால்
மருந்து!

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க
மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும்
சக்தியும் இதற்கு இருக்கிறது.

எருமைப்பால் பசும்பாலை விடக்
குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம்
எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக்
கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


ஆட்டுப்பால்
விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால்,
அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப்
பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த
சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.
கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!

***

சரி... பாலை எப்படிச் சாப்பிடுவது?

பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக
ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும்.

அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து,
சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது!

காலையில் வெறும் வயிற்றில் பால் சாப்பிடுவது நல்லது. அதன்பின், பசி நன்றாக
எடுத்த பிறகுதான் டிபன் சாப்பிடவேண்டும். இருமலோ, தொண்டையில் கிச்...கிச்
தொந்தரவோ உள்ளவர்கள், பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டுச்
சாப்பிடலாம்.


பால் சாப்பிட்ட பிறகு, புளிப்பான பழங்கள்
எதுவும் சாப்பிடக்கூடாது. இரவில் இட்லி, புளிப்பான சாம்பார் என டிபன் சாப்
பிட்டபிறகு, உடனே பால் சாப்பிடுவதும் ஆபத்தான பழக்கம்!

பாலில்
ரெடிமேட் சத்து பவுடர்களைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கும் பழக்கம்
இப்போது அதிகமாகி இருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டம் தர, இந்தச்
சத்துபானங்கள் அவசியம்என நினைக்கிறார்கள் பலர்.

பாலில் இந்த
பவுடர்கள் சேர்த்தபிறகு, அதன் கடினத்தன்மை மேலும் அதிகரிப்பதால் அது
செரிமானம் ஆகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதற்கேற்றாற் போல,
மற்ற சாப்பாடு அயிட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

காலை
டிபன் கூடவோ, இரவு டிபன்கூடவோ இந்தப் பானத்தைத் தருவதைத் தவிர்க்கவேண்டும்.
அதிகாலை அல்லது மாலை என உணவு வேளைக்கு இடைப்பட்ட நேரங்களில்தான்
குடிக்கத்தரவேண்டும்.


'வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பிடுவேன்'
என அப்பாவிகளைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். இப்போது வெளுப்பாக வரும்
எதையுமே பால் என்று நம்பிவிடக்கூடாது.


முன்பெல்லாம் 'பால்
சாப்பிட்டால் செரிக்காது' என்ற ஒரே பிரச்னை மட்டும் தான் இருந்தது. இப்போது
'பால் அலர்ஜி' என்ற புதுப் பிரச்னையும் சேர்ந்துகொண்டு விட்டது!


பசு மனசு நிறைந்து கொடுக்கும் பால்தான் அருமருந்து. இப்போது ஹார்மோன்
ஊசிகளை எல்லாம் போட்டு, பசுவின் மடியிலிருந்து பாலை உறிஞ்சி
எடுக்கிறார்கள். பாலைத் தரும் பசுவைப் புனிதமாக கருதுவது இந்திய கலாசாரம்.

சரி... தயிர், வெண்ணெய், நெய் பற்றி... பால்காரர் எடுத்து வருவதும்,
பாக்கெட் பாலும்தான் பெரும்பாலான நகரங்களில் கிடைக்கின்றன. அது பசும்பாலா,
எருமைப் பாலா அல்லது இரண்டும் கலந்ததா... எதுவுமே தெரியாது!

பலர்
இந்தப் பாலை வெறுமனே பொங்கும்வரை கொதிக்க வைத்தால்போதும் என நினைத்து,
பொங்கி நுரை கிளம்பி வந்ததுமே அடுப்பில் இருந்து இறக்கிவிடுகிறார்கள்.

இது தவறு! பால் கொதித்தால் மட்டும் போதாது... ஒரு பங்கு பாலுக்கு நான்கு
பங்கு தண்ணீர் ஊற்றிப் பாலைக் காய்ச்ச வேண்டும். 'அதுதான் ஏற்கெனவே
பால்காரரே தண்ணீரைக் கலந்துவிடுகிறாரே' என ஆதங்கப்படுகிறவர்கள்
வேண்டுமானால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தண்ணீர்
சுத்தமாகச் சுண்டி, பழைய ஒரு பங்கு அளவு ஆகும்வரை கொதிக்கவிட வேண்டும்.
(ஆனால், இன்றைய அவசரயுகத்தில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்கிறீர்களா?
இதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம்!) கொதித்ததும் ஸ்டவ்வை
நிறுத்திவிடக்கூடாது.

ஐந்து முதல் பத்து நிமிடங்கள் லேசான
சூட்டில் அப்படியே வைத்திருந்து, அதன்பிறகே ஸ்டவ்விலிருந்து பாலை எடுக்க
வேண்டும். ஆனால், அதற்காகப் பாலை எந்நேரமும் அடுப்பிலேயே கொதிக்கவைப்பதும்
தவறு.

டீக்கடைகளில் எப்போதும் அடுப்புச் சூட்டிலேயே இருக்கும் பால் வயிற்றுக்கு ஏகப்பட்ட உபாதைகள் தரும்.

மேலு‌ம் ‌சில த‌னியா‌ர் பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ள், பா‌லி‌‌ல் ப‌ல்வேறு
ரசாயன‌ங்களையு‌ம் கல‌ந்து ‌வி‌ற்பனை செ‌ய்‌கி‌ன்றன. எனவே, ந‌ல்ல தரமான
பா‌ல் ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் பொரு‌ட்களை ம‌ட்டு‌ம் வா‌ங்குவது உடலு‌க்கு
ந‌ல்லது.

டாக்டர் கே.ஜி.ரவீந்திரன்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum