வட மாநிலத்துக்காரர்கள்
Wed Jul 02, 2014 9:45 pm
வடமாநிலத்துக்காரர்கள், தமிழ்நாட்டில் ஏராளம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றிலும் வடநாட்டுக்காரர்கள் ஏராளம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். உணவு விடுதி களில் எல்லாம் பரவலாகக் காணப்படுகிறார்கள்!
வங்கிக் கொள்ளை, பாலியல் வன்முறை உள்பட பல்வேறு குற்றங்களில் அவர்களில் சிலர் ஈடு பட்டார்கள் என்பதற்காக வடநாட்டுக்காரர்களைத் தமிழ்நாட்டுக்காரர்கள் சென்று தாக்குவதில்லை. வட இந்தியர்களுக்கு எதிராக வன்முறைகளிலும் ஈடுபட்டதில்லை.
தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருந்தொழில்களில் மார்வாடிகள், குஜராத்திகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள் குடி யிருக்கும் பல அடுக்கு மாடிகளில் மற்றவர்களுக்கு இடம் கொடுப்பதும் கிடையாது.
எழும்பூர் போன்ற பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்வதில் அவர்கள் எண்ணிக்கைதான் முக்கியமானதாக இருக்கிறது. என்றாலும், எந்தப் பிரச்சினையும் இன்றி, அமைதி யான சூழல்தான் இங்கு நிலவி வருகிறது.
அதேநேரத்தில், ஒரு பேட்டை ரவுடி கொல்லப் பட்டான் என்பதற்காக, தமிழர்கள் அடித்து நொறுக் கப்படுகிறார்கள் - விரட்டப்படுகிறார்கள் என்றால், அதன் விளைவு வேறு வகையாக திரும்பிவிடாதா?
அந்த ரவுடி பி.ஜே.பி.யைச் சார்ந்தவன் என்பதற்காக அரசும், காவல்துறையும் அதீதமாக நடந்துகொள்வதாகத் தெரிகிறது. இந்த நிலை தொடரக்கூடாது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனையை அனுபவிக்கட்டும். அதில் ஒன்றும் அட்டியில்லை. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் களையே அடித்து விரட்டுவது என்றால், அதைக் கேட்டு வாளாயிருந்து விடவும் முடியாது.
தமிழ்நாடு அரசும் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, குஜராத் அரசுடன் தொடர்புகொண்டு, குஜராத்தில், குறிப்பாக சூரத்தில் வாழும் தமிழர் களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மற்ற பகுதிகளில் தாக்கப்படுகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும். இந்த நிலை தொடரக்கூடாது. தேசியம்பற்றிப் பேசும் அரசியல் கட்சிகளும் இதில் கவனம் செலுத்தட்டும்!
Read more : http://goo.gl/sffx2x ViduthalaiEpaper

Permissions in this forum:
You cannot reply to topics in this forum