வேகம் - விவேகம்
Wed Jul 02, 2014 8:06 am
சஞ்சய், ஒரு பணக்கார இளைஞன், வேகமாக கார் ஓட்டுவதில் விருப்பம் உள்ளவன். அதற்காகவே தன் வீட்டில் விலை உயர்ந்த கார்கள் சிலவற்றை வைத்துள்ளான். வேகமாக கார் ஓட்டும் போது வேக வரம்பு பற்றி அவன் கவலைப் படுவதே இல்லை. இந்த வேகத்தால் பலமுறை அவன் போக்குவரத்து காவல் துறையிடம் மாட்டினாலும், அபராதத்தை கட்டி விட்டு சென்று விடுவான். ஆனால் அதைப்பற்றி கவலைப் படாமல் மீண்டும் வேகமாக கார் ஓட்டுவதிலேயே கவனம் இருந்தது.
ஒரு நாள் இதே போல் மிக வேகமாக கார் ஓட்டிச் செல்லும் போது ஒரு போலீஸ்காரர் தன்னை பின் தொடர்வதைக் கண்டான். ஒரு கட்டத்தில் அந்தப் போலீஸ்காரர் அவனைப் பிடித்து, அவனுடைய லைசன்ஸ் முதலியவற்றை செக் செய்து விட்டு தன்னுடைய நோட் பேடில் என்னவோ எழுதி அவனிடம் கொடுத்தார்.
"இதற்கு எவ்வளவு சார்ஜ் செய்யப் போகிறார்?" என நினைத்துக் கொண்டே காகிதத்தைப் பிரிக்க, அதில் என்னவோ எழுதப் பட்டிருந்தது. என்ன ஏதாவது ஜோக் எழுதியிருக்கிறாரா இல்லை நோட்டீஸா என நினைத்துக் கொண்டே அதைப் படிக்க ஆரம்பித்தான். அதில்,
"அன்புக்குரிய சஞ்சய்,
சிறிது காலத்துக்கு முன் வரை எனக்கும் ஒரு அழகான மகள் இருந்தாள். அவளுடைய ஆறாம் வயதில் இதே போல் வேகமாக வந்த ஒரு கார் மோதி அவள் இறந்து விட்டாள். சிறிது அபராதமும், மூன்று மாத சிறைத் தண்டனையுடன் அந்த கார் டிரைவர் வெளியே வந்து விட்டான், அவனுடை மூன்று மகள்களையும் கொஞ்சுவதற்கு. ஆனால், என்னுடைய ஒரே மகளை இழந்து விட்ட நான், மீண்டும் அவளைக் கொஞ்ச நானும் சொர்க்கத்துக்குப் போகும் வரை காத்திருக்க வேண்டும். ஆயிரம் முறை நான் அவனை மன்னிக்க முடியும் என நம்புகிறேன். ஆயிரம் முறை இது போல் வேகமாக வரும் கார் டிரைவர்களை மன்னிக்க விரும்புகிறேன். என்னால் முடியும். எனக்காக வேண்டிக் கொள். ஆனால், நீ ஓட்டும் போது மற்றவர்களை மட்டும் அல்ல, உன் குடும்பத்தையும் நினைத்துக் கொள். பீ கேர்புல் சஞ்சய். கடவுள் இயேசு துணையிருக்கட்டும்."
அதை படித்து முடித்துவிட்டு தன் தலையை தூக்கினால் அந்த போலீஸ் கார் அவனிடமிருந்து வெகு தூரம் சென்று கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அந்தக் காரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அது தன் கண்ணை விட்டு மறைந்த பின் தன் காரை மெதுவாக ஓட்டிச் சென்றான் சஞ்சய்.
"வாழ்க்கை விலை மதிப்பற்றது. ஒரு முறை இழந்து விட்டால் மீண்டும் கிடைக்காது. உங்களைப் பற்றி மட்டும் நினைக்காமல் சாலையில் செல்லும் மனிதர்களைப் பற்றியும் ஒரு நொடி சிந்திக்கவும்."
உங்களின் சில மணி நேர இன்பம் இன்னொரு குடும்பத்தின் வாழ்க்கையை நரகத்தில் தள்ளக் கூடாது.
வேகம் உங்களின் விவேகத்தில் மட்டும் இருந்தால் போதும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum