தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் Empty வெற்றிகரமான வரைகலை(Graphic Designs) ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்

Mon Jun 30, 2014 8:40 pm
அழகாக இருக்கும் வரைகலைகளெல்லாம் (Graphic Designs) வெற்றி பெற்றவை என்று அர்த்தமாகாது. வெற்றிகரமான வரைகலை ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்:

வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் 10303469_1500353403534555_4603563279454151070_n

1. தெளிவான கருத்துரு (Concept):
உங்கள் வரைகலை ஒரு தெளிவான கருத்துருவைக் (Concept) கொண்டதாக இருக்க வேண்டும். உங்கள் டிசைன் வழியாக மக்களுக்கு சொல்லும் செய்தி (Message) ஒன்று இருக்க வேண்டும். அந்த செய்தி வரைகலையில் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவே உங்கள் வரைகலையின் வெற்றிக்கான ஆதாரம்.

2. தெளிவான கட்டமைப்பு (Layout)
உங்கள் டிசைன் பார்ப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் தேவையான இடைவெளிகளோடு தெளிவாகக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்கு அதிக முக்கியத்துவமும் எதற்கு குறைவான கவனம் தேவைப்படுகிறதோ அதற்கு குறைந்த முக்கியத்துவமும் அளித்திருக்க வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல் வேண்டும். வள்ளல் போல வண்ணங்களை வாரி இறைக்காமல் தேவையான இடங்களில் தேவையான வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற வண்ணப்பயன்பாடுகள் உங்களை ஒரு முதிர்ச்சியற்ற டிசைனராகக் காட்டிவிடும்.

3. தெளிவான எழுத்துரு (Typography)
உங்கள் கணினியில் நிறைய எழுத்துருக்களை(Fonts) நீங்கள் பதிவிறக்கி வைத்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் ஒரே டிசைனில் அள்ளிக் கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தல் கூடாது. இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று வகையான எழுத்துருக்களை ஒரு டிசைனில் பயன்படுத்தினால் அதுவே நேர்த்தியாக இருக்கும்.

பெரிய நிறுவனங்களின் வரைகலைகளை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பாருங்கள். அவர்கள் தங்கள் நிறுவனங்களின் Brochure, Flyers , White Papers , Annual Reports போன்றவைகளை pdf வடிவில் தங்கள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக இணைய தளங்களில் வைத்திருப்பார்கள். அவற்றில் பெரும்பாலானவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கில சஞ்சிகைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். அவற்றில் கிடைக்கும் ஐடியாக்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பயிற்சி செய்து பாருங்கள். நீங்களும் ஒரு சிறந்த வரைகலைஞராக பரிமளிக்க வாழ்த்துக்கள்.

நன்றி: ஊடகம் இந்தியா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் Empty Re: வெற்றிகரமான வரைகலை(Graphic Designs) ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்

Mon Jun 30, 2014 8:41 pm
ஊடகம் என்பது காட்சி, அச்சு மற்றும் இணைய ஊடகங்களின் மூலம் தங்கள் வியாபாரம் மற்றும் தொழிலின் விளம்பரத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு பல்லூடக நிறுவனமாகும். ஊடகம் வழங்கும் உலகத்தரமான சேவைகள் பின்வருமாறு:

1. இணையதள வடிவமைப்பு – Website design / Development
2. சமூக வலைதள விளம்பரங்கள் – Social Media Marketing (SMM)
3. குறும்பட தயாரிப்பு – Short Film Making
4. விளக்கப்படங்கள் தயாரிப்பு – Documentory Film making
5. காணொளிப் படத்தொகுப்பு – Video Editing
6. 2டி அசைவூட்டப் படங்கள் – 2D Animation
7. அனைத்துவகை அச்சு விளம்பரங்கள் – Brochures, Flyers, Posters, Catalogues Designing
8. பத்திரிக்கை/இதழ்கள் வடிவமைப்பு – Magazine Designing
9. படங்கள்/கேலிச்சித்திரங்கள் – Illustrations / Cartoons
10. அலைபேசி பயன்பாட்டு மென்பொருள் வடிவமைப்பு – Mobile App Design / Development
11. இலச்சினை வடிவமைப்பு – Logo Designing
12. பவர்பாயிண்ட்/ கீ நோட் மற்றும் ஃப்ளாஷ் காட்சியளிப்பு – Power Point / Keynote and Flash Presentations
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் Empty Re: வெற்றிகரமான வரைகலை(Graphic Designs) ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்

Mon Jun 30, 2014 8:43 pm
உங்கள் நிறுவனத்தின் இலச்சினை(Logo) எப்படி இருக்க வேண்டும்?


இலச்சினை (Logo) ஒரு நிறுவனத்துக்கு அவசியமா? 


இலச்சினையின் என்பது உங்கள் நிறுவனத்தின் குறிக்கோளையும், செயல்பாடுகளையும் யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பிரதிபலிக்கக் கூடியது. மிக நேர்த்தியாக வடிவமைக்கபட்ட ஒரு இலச்சினை மக்களின் கவனத்தை கவர்கிறது, மனங்களில் ஆழமாகப் பதிகிறது.

உங்கள் நிறுவனத்தின் மீது ஒரு உயர்ந்த எண்ணத்தையும், உங்கள் சேவையின்மீது ஆழந்த நம்பிக்கையையும் உருவாக்குகிறது.

அந்த இலச்சினையை உங்கள் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும், விளம்பரங்களிலும், தொடர்பு சாதனங்களிலும் பயன்படுத்தும்போது மக்கள் மத்தியில் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வது வெகு எளிதாகிறது.

ஒரு நிறுவனத்தின் இலச்சினை எப்படி இருக்க வேண்டும்?

இலச்சினை அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியமாக இருந்தாலும் அதைவிட முக்கியம் அது உங்கள் நிறுவனத்தின் குறிக்கோள், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகளை எளிய முறையில் விளக்குவதாக இருக்க வேண்டும்.

இலச்சினைக்கான சரியான வண்ணம் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். வணிக நிறுவனங்களின் இலச்சினைகள் பெரும்பாலும் ஊதா நிறத்திலும், தொண்டு நிறுவனங்களின் இலச்சினைகள் பெரும்பாலும் ஆரஞ்சு நிறத்திலும் இருப்பதைக் காணலாம். ஊதா என்பது திறமை மற்றும் நேர்த்தியையும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வர்ணங்கள் புதிய விடியலுக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. ஆனாலும் இது கட்டாயமல்ல. வண்ணத் தேர்ந்தெடுப்பு அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

இலச்சினை எல்லா ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். சிறிய விலாச அட்டையிலிருந்து (visiting card) காணொளி (video) வரை அனைத்து ஊடகங்களுக்கும், எல்லா அளவுகளுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். எனவே உங்கள் இலச்சினையினை நீங்கள் எப்போதும் எல்லா பயன்பாட்டுக்கும் ஏற்ற வகையில் வெக்டர் வடிவத்தில் (vector format) வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சிலர் தங்கள் இலச்சினையை அசைவூட்டிப் பார்க்க ஆசைப்படுவார்கள் (animated logo) இலச்சினையின் வடிவம் அதற்கேற்றதாகவும் முன்கூட்டியே திட்டமிட்டு அமைக்கப்படல் அவசியம்.

எல்லா சாதனங்களிலும் வண்ண இலச்சினையை பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே கருப்பு வெள்ளை நிறத்திலும் ஒரு பிரதி கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். கருப்பு வெள்ளையில் பார்த்தாலும் அது தனது வடிவத்தையும், தனித்துவத்தையும் இழந்துபோகாதபடி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

உங்கள் இலச்சினையில் எழுத்துக்கள் இருக்கும் பட்சத்தில் அது தெளிவாக இருக்கும் விதத்தில் இருக்க வேண்டும். இலச்சினையை மிகச் சிறியதாகப் பயன்படுத்தினால் எழுத்துக்கள் குலைந்து போய் வாசிக்க முடியாதபடி போய்விடக்கூடாது. இன்னொரு கவனத்துக்குரிய காரியம் அந்த எழுத்துரு என்ன என்பதை நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் இலச்சினையை நீங்கள் மறுபடி வடிவமைக்கும் சூழல் ஏற்படும்போது எழுத்துரு என்ன என்று மறந்துபோய் குழம்பிக்கொண்டிருக்கும் சூழல் அமைந்துவிடக்கூடாது.

இலச்சினை உருவாக்கம் ஒரு அருமையான கலை. ஓவியருக்கு வேலை சிறியதாக இருந்தாலும் இலச்சினையை வடிவமைக்கும் முன் அவர் அந்த நிறுவனத்தைக் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும். அந்த நிறுவனம் இலச்சினையின் வழியாக என்ன செய்தியை பகிர்ந்துகொள்ள வருகிறது என்பதை உறுதி செய்துகொண்டபின்னரே வடிவமைக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.

இப்பபணியை ஊடகம் நிறுவனம் மிக நேர்த்தியாக இதுவரை செய்து வந்திருக்கிறது. ஊடகம் வடிவமைத்துள்ள சில இலச்சினைகள் உங்கள் பார்வைக்கு:


வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் 10394620_1500343023535593_8004247632330673481_n

நன்றி: ஊடகம் இந்தியா
Sponsored content

வெற்றிகரமான  வரைகலை(Graphic Designs)  ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள் Empty Re: வெற்றிகரமான வரைகலை(Graphic Designs) ஒன்றை வடிவமைக்க 3 நிபந்தனைகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum