அடையாளச் சான்று இல்லாததால்...
Tue Jun 24, 2014 8:52 am
அடையாளச் சான்று இல்லாததால், ஓராண்டு காலமாக சவூதி அரேபியா சிறையில் வாடிய இந்தியர் விரைவில் தாயகம் திரும்புகிறார்.
ஆந்திரப்பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாற்காலிக விசாவில் சவூதிக்குச் சென்ற அவர், குவைத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
இதனிடையே அப்துல் ஹமீது தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும், செல்போனையும் தொலைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களைக் கூட அவர் வைத்திருக்கவில்லை.
அடையாளச் சான்று இல்லாததால் சவூதி அரேபிய போலீஸாரால் கைது செய்யப்பட்ட அப்துல் ஹமீது, கடந்த ஓராண்டு காலமாக ஜெட்டாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், நாடு கடத்தப்படும் மையத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்துல் ஹமீதுவால் தனது மனைவியின் செல்போன் எண்ணைக் கூட நினைவுகூர முடியவில்லை.
மேலும், அவர் தனது அண்டை வீட்டாரின் தொலைபேசி எண்ணை சவூதி அரேபிய போலீஸாரிடம் தெரிவித்தார்.
துரதிருஷ்டவசமாக, அண்டை வீட்டார் தங்கள் வீட்டை விற்று விட்டு வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதால், அவர்களையும் இந்திய அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
வழக்கமாக, இதுபோன்று கைது செய்யப்படும் இந்தியர்கள், மீண்டும் தாயகம் திரும்பி வருவதற்கு இந்திய தூதரகம் உதவி செய்யும்.
ஆனால், அப்துல் ஹமீது கொடுத்த முகவரியில் தேடிச் சென்றபோது அவரது உறவினர்கள் அங்கு இல்லாததால், இந்திய தூதரகத்தால் அவருக்கு உதவ முடியவில்லை.
பல்வேறு நகரங்களில் அப்துல் ஹமீதின் உறவினர்களை தேடிவந்த அதிகாரிகள், ஒரு வழியாக அவர்களின் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, அப்துல் ஹமீதுவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களை அவரது மனைவி சிராஜுல், இந்தியத் தூதரகம் வழியாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்.
அடையாளச் சான்று கிடைத்துவிட்டதால், அப்துல் ஹமீது விரைவில் இந்தியா திரும்புகிறார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum