நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி கிட்டும் ..
Sun Jun 15, 2014 8:46 am
ஒரு முறை ஜப்பானிய
ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து,
போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு துறவியைப் பார்த்துக் கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார்.
அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து, ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல்
போரில் தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறியபடி நாணயத்தைச் சுழற்றினார்.
அனைவரும் அதைக் கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர்.
யுத்தத்திற்கு பின்னர்,
துணை மந்திரி "விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று ராஜா சொல்லி இது விதியல்ல
மந்திரியாரே மதி அந்த
நாணயத்தின் இரு பக்கத்திலும்
தலை இருப்பதை" காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால்
எத்தகைய காரியத்தையும் எளிதில்
வெல்லலாம், விதியையும்
மாற்றி அமைக்கலாம் என்றார்.
நம்பிக்கையுடன் செயல்படுங்கள்
வெற்றி கிட்டும் ..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum