560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி
Thu Jun 05, 2014 8:19 am
'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது.
(ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல் தொலைவு)
இந்தக் கோள், 45 நாளுக்கு ஒரு முறை சூரியனைப்போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.
இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து ஜூபிடர் அதாவது வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர் 10 சி, அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது
பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால், இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.
இந்த கோளை கண்டுபிடித்திருப்பது குறித்து ஹார்வர்டு ஸ்மித்சானியன் வானியல் பவுதிக மையத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி சேவியர் னடஸ்கியூ கூறுகையில், இந்தக் கோளை நாங்கள் கண்டுபிடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த வியப்பை அளித்துள்ளது என்றார். மற்றொரு விஞ்ஞானியான டிமிட்டர் சாஸ்செலோவ் கூறும்போது, இது அனைத்து பூமிகளின் காட்சில்லா போன்றது. இந்த கோளில் உயிர்வாழ்வதற்கு சாதகமான அம்சங்கள் உள்ளன என்றார். இந்தக் கோள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தில் பார்க்கலாம்.
http://news.discovery.com/space/alien-life-exoplanets/strange-new-world-discovered-the-mega-earth-140602.htm?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=DiscoveryChannel

Permissions in this forum:
You cannot reply to topics in this forum