இயேசு தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்:-
Thu May 22, 2014 5:53 pm
நம்முடைய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய இயேசு உயிர்த்தெழுந்தார். அவர் தாம் சொன்னபடி, வேத வாக்கியங்களில் எழுதியிருக்கின்றபடி உயிர்த்தெழுந்தார்.
"அவர் இங்கே அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள், ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
" அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள், ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார்..." (மத்.17:23)
" ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்."
(மத்.26:32)
" அவர் இங்கே இல்லை, தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்.. " (மத்.28:6)
" அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு,மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்." (மாற்.8:31)
"ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்." (மாற்.9:31)
இயேசு உயிர்த்தெழுந்தார்:-
"அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள், அவர் உயிர்த்தெழுந்தார்: அவர் இங்கேயில்லை:."
(மாற் 16 :6)
" அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,
(1கொரி.15 :4)
" சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அங்கே அவரைக் காண்பீர்கள், இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்..
( மத் 28 :7)
அன்பின் ஆண்டவர் இயேசு தாம் பாவிகளுக்காக சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுவேன் என்று முன்னமே அறிவித்திருந்தார். இயேசு அதின்படியே உயிர்த்தெழுந்தார்.
ஆதாமையும், ஏவாளையும் தேவன் சிருஷ்டிக்கும் போது அவனை என்றன்றைக்கும் வாழக்கூடிய ஜீவனுக்குரியவனாகவே சிருஷ்டித்தார். ஆனால் அவனும் அவனுக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட ஏவாளும் தேவனுடைய வார்த்தைகளை மீறி பாவம் செய்தார்கள். அதனால் அவர்கள் மரணத்திற்குரியவர்களாய் மாறி மரணத்தை சந்தித்தார்கள். "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்."
(ஆதி.3:19)
ஆதாம், ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தார்கள். அதனால் தண்டிக்கப்பட்டார்கள் இது அவர்களோடு முடியவில்லை அவர்களது சந்ததியான நமக்கும் அவர்கள் செய்த பாவம் ஜென்ம பாவமாக பூமியில் பிறந்த அல்லது பிறக்கின்ற ஒவ்வொருவருக்குள்ளும் கூடவே பிறக்கிறது. ஆனால் இந்த ஜென்ம பாவத்தோடு ஒரு மனிதனாலும் மரணத்தை ஜெயித்து பின்பு சீயோனாகிய நித்தியத்தை சுதந்தரித்துக்கொள்ள முடியவில்லை அதனால் இயேசு நம்முடைய ஜென்ம, கரும பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு வேத வாக்கியங்களின்படி மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்.இப்பொழுது நீ ஜென்ம, கரும பாவத்தை மன்னிக்க இயேசு பலியானார். மரணத்தை முற்றிலும் ஜெயித்தார். இதை முன்கூட்டியே இயேசு தமது சிஷர்களுக்கு முன்னரே அறிவித்தார். அதின்படி உயிர்த்தெழுந்தார்.
இயேசுவின் மீட்பானது ஆதாம் பாவம் செய்தவுடனே திடீர் என்று ஏற்ப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல! "உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய.." (வெளி.13: என்ற வசனத்தின்படி... அவர் உலக தோற்றத்திற்கு முன்பே அவர் பூமியில் மனிதனை மீட்க்கும்படி பிறக்க வேண்டும், மனிதனுக்காக அவனின் பாவங்களுக்காக மரிக்க வேண்டும், பின்பு அவர் உயிர்த்தெழவேண்டும். இந்த திட்டம் முன்பே தேவனால் ஏற்ப்படுத்தப்பட்டது. அதின்படியாகவே நடைபெற்றது.
அருமையான தேவாதி தேவனுடைய பிள்ளைகளே, இயேசு பிதாவின் கட்டளைகளை கைக்கொண்டு, அவருக்கு பிரியமானதை எப்பொழுதும் செய்தபடியால் அவரை தேவன் மரணத்திலிருந்து எழுப்பினார். அதைப்போல தேவனுடைய வார்த்தைகளுக்கு நீயும் செவிக்கொடுப்பாயானால் இயேசுவின் இரகசிய வருகையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர் முதலாவது எழுந்திருப்பார்கள் என்ற வசனத்தின்படி நீயும் உயிர்த்தெழுவாய் அவருடைய வார்த்தைகளுக்கு செவிக்கொடுப்பாயா..? செவிக்கொடுப்பாய் என்றால் நித்தியத்தை சுதந்தரித்துக்கொள்வாய். சுதந்தரித்துக்கொள்ள இயேசு அழைக்கிறார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum