சுபேதார் ஜோகிந்தர் சிங்
Wed May 21, 2014 12:56 pm
'300 பருத்தி வீரர்கள்' என்ற சினிமாவில் சுமார் 1 லட்சம் பாரசீக வீர்களை 300 பேர் கொண்ட கிரேக்கபடை எதிர்த்து நின்ற கதை தெரியும். நம் ஊரிலும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.
1962 ஆண்டில் சீனா காஷ்மிரை ஆக்கிரமிக்கிறது. காஷ்மிரை ஆகிரமித்து மிகபெரிய ரயில்வே லைன் ஒன்றை கட்டிமுடிக்கும்வரை நம் நேருஜிக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாது. அதன்பின் தான் சீன இந்திய போர் மூள்கிறது.
அப்போது இந்திய படை போருக்கு தயாராகவே இல்லை. பெருத்த எண்ணிக்கையில் தாக்கிய சீன படைகளை சமாளிக்கும் அளவு ஆள்பலம், ஆயுதம் எதுவும் கிடையாது. நாகாலாந்து அருகே தவாங் எனும் ஊரை பிடிக்க சீனபடை எல்லையை தான்டிவருகிறது. பட்டாலியன், பட்டலியனாக விழுந்து தாக்குகிறார்கள். அத்தனை பெரிய எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்திய படை ஆயுதங்களை போட்டுவிட்டு ஓடிவிடுகிறது. கடைசியில் அவர்களை எதிர்த்து நிற்பது சீக்கிய ரெஜிமெண்ட் ஒன்றே. அதில் இருந்தது 34 வீரர்கள்.
தலா 200 பேர் அடங்கிய மூன்று பட்டாலியன் சீன படைகளை இந்த ஒற்றை ரெஜிமெண்ட் எதிர்த்து நின்று முறியடிக்கிறது. அதில் சீக்கிய வீரர்கள் பாதி பேர் உயிரை இழக்கிறார்கள். காலையில் பெரும்படையையும், பீரங்கிகளையும் ஏந்தி சீனர்கள் வருகிறார்கள். இம்முறை சீக்கிய படையிடம் இருந்த ஆயுதம் குண்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன. அந்த ரெஜிமெண்டில் இருந்த சுபேதார் ஜோகிந்தர் சிங்குக்கு காலில் குண்டுபாய்கிறது. சீன வீரனிடம் இருந்த லைட் மெஷின் கன் ஒன்றை பிடுங்கி ஒற்றை ஆளாக களத்தில் நின்று 52 சீனர்களை சுட்டு கொல்கிறார்.
அதன்பின் துப்பாக்கி குண்டு தீர்ந்துவிட அவரும் மீதம் இருந்த சீக்கிய வீரர்கள் அனைவரும் தம் வாட்களை உருவிகொண்டு மெஷின்கன் ஏந்திய வீரர்களுக்கு எதிராக களத்தில் குதிக்கிறார்கள். "வாகே குருராஜ் கி கல்சா" எனும் சீக்கிய போர்முழக்கத்தை முழங்கியபடி சீனர்கள் மேல் விழுந்து பலரை வெட்டி சாய்க்கிறார்கள். அவரை சுற்றிவளைத்து நின்று அத்தகைய வீரனை கொல்ல மனம் இன்றி சரணடைய சொல்லி சீனர்கள் சொல்லியும் அவர் சரண்டையவில்லை. கடைசியில் குண்டுகாயம் பட்டு விழுந்த அவரை சீனர்கள் உயிருடன் பிடித்து செல்கிறார்கள். ஆனாலன்று இரவே காயங்களால் அவர் உயிர் இழக்கிறார்.
சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் அளப்பரிய வீரத்துக்கும், தியாகத்துக்கும் அவருக்கு பரம்வீ சக்ரா விருது வாங்கபடுகிறது. சீன ரானுவம் அதுநாள்வரை எந்த இந்திய வீரனுக்கும் செய்திராத வகையில் சுபேதார் ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை முழு ரானுவமரியாதையுடன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கிறது.
அந்த சீக்கிய "டெல்டா கம்பனி 1 பட்டாலியன்" தன் வீரத்துக்காக "பகதூர் பட்டாலியன்" என அழைக்கப்டுகிறது. அதில் இருந்த வீரர்களுக்கு இரு பரம்வீர் சக்ராக்கள், மகாவீர் சக்ராக்களும் பல மெடல்களும் வழங்கபட்டன.
அந்த பட்டாலியனில் இருந்து உயிர்பிழைத்தவர்கள் மூவரே. அவர்களில் ஹரிபால் கவுஷிக் என்பவர் வீர் சக்ரா விருதை வாங்கினார். அதன்பின் ரோக்கியோவில் 1964ல் நடந்த ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் தங்கமெடல் வென்ற இந்திய அணியில் ஆடி இந்தியாவுக்கு இன்னொரு பெருமையும் பெற்றுதந்தார்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum