உனக்கு நீந்தத் தெரியும் என்று நினைக்கிறேன்
Tue May 20, 2014 11:02 pm
முல்லா இளைஞராக இருந்த சமயம் அவருடைய அழகு, அறிவாற்றல் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த பல இளம் பெண்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
முல்லாவுடன் மிகவும் நெருக்கமாகப் பேசிப் பழகும் வாய்ப்பு இரண்டு இளம் பெண்களுக்குக் கிடைந்திருந்தது.
அந்த இளம் பெண்களில் ஒருத்தி மிகவும் ஏழை. ஆனால் அவள் நல்ல அழகியாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள்.
மற்ற பெண் நல்ல பணக்காரி. ஆனால் அவள் உடல் அளவுக்கு அதிகமாகப் பருத்து அழகற்றுக் காட்சி தந்தது.புத்திசாலித்தனமும் அவ்வளவாக அவளிடம் காணப்படவில்லை.
அந்த இரண்டு பெண்களும் முல்லாவைச் சந்தித்து, அதிக நேரம் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.
தங்களில் அவர் யாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் எனத் தெரிந்து கொள்ள எவ்வளவோ தந்திரங்களைக் கையாண்டு பார்த்தும் அவர்களால் முடியவில்லை.
அதனால் ஒரு நாள் தங்களில் அவர் யாரை அதிகமாக விரும்புகிறார் என்பது பற்றி அவரிடம் நேரிடையாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு அவரை அணுகினார்கள்.
"முல்லா அவர்களே, ஒரு சந்தேகத்தைக் கேட்பதற்காக உங்களிடம் வந்திருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அந்த இரண்டு இளம் பெண்களும் கேட்டனர்.
அப்போது முல்லா கரைபுரண்டு வெள்ளம் ஓடும் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
"உங்களுக்கு அப்படிஎன்ன சந்தேகம்?" என முல்லா புன்னகையோடு வினவினார்.
"சற்றும் எதிர்பாராத நிலையில் நாங்கள் இருவரும் இந்த ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது தாங்கள் எங்களில் யாரை ஆற்றில் மூழ்காமல் காப்பாற்றுவீர்கள்?"
இந்த வினாவைப் பணக்கார இளம் பெண் கேட்டாள்.
முல்லா அந்த இரண்டு பெண்களையும் மாறி மாறிப் பார்த்தார்.
பிறகு அவர் பணக்காரப் பெண்ணை நோக்கி, "பெண்ணே, உனக்கு நீந்தத் தெரியும் என்று நினைக்கிறேன்" என்று புன்சிரிப்புடன் கூறினார்.
அழகான ஏழை இளம் பெண்ணை அவர் விரும்புகிறார் என்பதை இவ்வாறு முல்லா மிகவும் நயமாக எடுத்துரைத்து விட்டார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum