என் ஜனங்கள் அறிவில்லலாமையினால்...
Mon Feb 11, 2013 11:11 am
கப்பல் ஒன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு பிரயாணி மிகவும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
இதனை கண்ட கப்பல் தலைவன் அவரிடம் சென்று, "ஐயா, ஏன் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறீர்கள்?" என்று கேட்டான்.
" ஐயா! நான் ஊரிலிருந்து கொண்டு வந்த ரொட்டிகள் எல்லாம் தீர்ந்துவிட்டன.
இனி சில காய்ந்த ரொட்டி துண்டுகளே இருக்கின்றன. இதுவும் தீர்ந்த பிறகு என்ன
செய்வது? எனக்கு ஒரு வழியுமே தெரியவில்லை?" என்றார் அந்த பிரயாணி சோகம்
நிறைந்த குரலில்.
இதை கேட்ட கப்பல் தலைவன், அவரது பயணச் சீட்டை
கேட்டு வாங்கினார். "இந்த சீட்டை வைத்திருப்பவர்களுக்கு கப்பலிலேயே உணவு
வழங்கப்படும்" என்று அதில் எழுதி இருப்பதை அவருக்கு காண்பித்து, ஐயா,
நீங்கள் கேட்டு இருந்தால் வகை வகையான உணவு உங்களை தேடி வந்திருக்குமே !
என்று அனுதாபப்பட்டான் கப்பல் தலைவன்.
பிரயாணி தனது அறியாமையை நினைத்து மிகவும் வருந்தினார்.
இதை போலவே நாமும் சில வேளைகளில் சர்வ சம்பூரராண நமது தேவனாகிய
இயேசு-கிறிஸ்துவிடம் நமது தேவைகளைக் கேட்டு பெற்றுக் கொள்ளாமல்
கஷ்டப்படுகிறோம்.
இப்பொழுதே! உங்கள் பாரங்களை அவர் மேல் வைத்து விட்டு, தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளுங்கள்.
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் ஓசியா 4:6
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum