YouTube தளத்தில் நீங்கள் இதுவரை அறிந்திராத அருமையான சில வசதிகள்
Tue May 20, 2014 8:08 am
YouTube தளம் பற்றி அறியாதவர்கள் யார்தான் இருக்க முடியும்.
இணையத்தில் வீடியோ கோப்புக்களை சேமித்து அதனை பயனர்களின் பார்வைக்கு வழங்க எத்தனயோ தளங்கள் இருந்தாலும் அதில் YouTube தளத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.
அந்த வகையில் Google ஆல் நிருவகிக்கப்படும் இந்த தளத்தில் ஏராளமான வசதிகளும் பலசுவாரஷ்யமான அம்சங்களும் கொட்டிக் கிடக்கின்றன ஆனால் அவற்றுள் அதிகமானவற்றை நாம் அறியத்தான் தவறி விடுகின்றோம்.
எனவே YouTube தளம் மூலம் அடைய முடிகின்ற சில வசதிகளை கீழே பார்ப்போம்.
●▶ நீங்கள் YouTube தளத்தில் இருக்கும் ஒரு வீடியோ கோப்பினை தரவிறக்க விரும்பினால் பின்வரும் முறையை பின்பற்றுக.
குறிப்பிட்ட வீடியோ கோப்பிற்கான URL இற்கு முன் இருக்கும் https://www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை தட்டச்சு செய்து Enter அலுத்துக
உதாரணத்திற்கு https://www.youtube.com/watch?v=Rxz9Rn98MDs எனும் இந்த இணைப்பின் https://www.என்பதனை நீக்கிவிட்டு ss என்பதனை சேர்த்தல் அது பின்வருமாறு அமையும்.
ssyoutube.com/watch?v=Rxz9Rn98MDs
இனி அது savefrom எனும் தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும் பிறகென்ன உங்களுக்குத் தேவையான வீடியோ கோப்பின் வடிவத்தை தெரிவு செய்க. பிறகு குறிப்பிட்ட வீடியோ கோப்பு உங்கள் கணனிக்கு தரவிறக்கப்படும்.
●▶ குறிப்பிட்ட ஒரு சொல்லை அடிப்படையாக கொண்ட தேடல் முடிவுகளை பெற.
YouTube தளம் மூலம் நாம் வீடியோ கோப்புக்களை தேடுகையில் குறிப்பிட்ட ஒரு சொல் அடங்கிய அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெறுவதற்கு allintitle:என்பதுடன் குறிப்பிட்ட சொல்லை இட்டு தேட வேண்டும்.
உதாரணத்திற்கு "தமிழ்" என்ற சொல் அமைந்த அனைத்து வீடியோ கோப்புக்களையும் தேடல் முடிவில் பெற வேண்டுமாயின் YouTube தளத்தின் Search Bar இல் allintitle:தமிழ் என தட்டச்சு செய்து தேடல் வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum