முகநூல் விழிப்புணர்வு
Mon Feb 11, 2013 10:59 am
பேஸ்புக்கில் இணைவதை கவுரவமாக நினைத்து இணையும் பெண்கள் பலர் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து கண்ணீர் விடுகிறார்கள்.
பேஸ்புக்கில் அழகான பெண்களை பார்த்தால் இணையதளம் மூலம் அவர்களிடம் நைசாக
பேசி ஆசை வலையில் வீழ்த்தி விடுகிறார்கள். ஆரம்பத்தில் நட்பில் தொடங்கும்
இந்த பழக்கம் கடைசியில் கற்பில் சென்று முடிகிறது. நம்ம போலி சாமியார்கள்
வரிசையில் பேஸ் புக்கும் இணைந்துள்ளது என்று சொல்லலாம்.
சென்னையைச் சேர்ந்த சுஜித்ரா
என்ற பெண் வேலூரைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவருடன் பேஸ்புக் மூலம்
நண்பரானார். ஆனந்த்பாபுவின் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவரது அழைப்பின்
பேரில் வேலூருக்கு சென்று கற்பை பறி கொடுத்தார். இதுபற்றி சுஜித்ரா வேலூர்
கூடுதல் எஸ்.பி. யிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆனந்த் பாபு
மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர் மரைன் என்ஜினீயரிங் படித்து விட்டு
சிங்கப்பூரில் கப்பல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். விடுமுறையில் சொந்த
ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். அப்போது ஆனந்த்பாபு பேஸ்புக் மூலம் பெண்களை
வளைக்கும் வித்தையை சதீசுக்கு கற்றுக் கொடுத்தார்.
ஆனந்த்பாபு
தான் ஏற்கனவே சுஜித்ரா என்ற பெண்ணை அழைத்து உல்லாசம் அனுபவித்து வருவது
பற்றியும் தெரிவித்தார். அதன்படியே சதீசும் காயத்ரி என்ற பெண்ணை பேஸ்புக்
மூலம் வீழ்த்தினார். காயத்ரி, சுஜித்ரா மட்டுமின்றி வேறு சில பெண்களையும்
இந்த கும்பல் ருசித்தது. ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு கிழமை, நேரம்
ஒதுக்கி ஊர் ஊராக வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
இந்த
கும்பல் பேஸ்புக் மூலம் பெண்களின் பொருளாதார பின்னணி பற்றிய முழு
விவரங்களையும் அறிந்தே தங்கள் திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள்.
லாட்ஜுகளுக்கு அழைத்து செல்லும்போது அறை வாடகை, ஆடம்பர செலவு உள்பட அனைத்து
செலவுகளுக்கும் சம்பந்தப்பட்ட பெண்களிடமே பணத்தை கறந்து விடுகிறார்கள்.
எல்லா செலவுகளையும் செய்து கற்பையும் பறி கொடுத்து செல்லும் பெண்கள் மோசம்
போய் விட்டோம் இனியாவது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று
நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த கும்பல் விடுவதில்லை. உல்லாசம்
அனுபவிக்கும்போது ரகசியமாக வீடியோ படம் எடுத்து விடுகிறார்கள். அந்த படத்தை
காட்டி மிரட்டியே ஏமாந்த பெண்களை மீண்டும் மீண்டும் அழைத்து பணத்தையும்
கறந்து கற்பையும் சூறையாடுகிறார்கள். காயத்ரியும், சுஜித்ராவும் இவ்வாறு
பலமுறை ஏமாந்துள்ளார்கள். ஆனந்த்பாபுவும், சதீசும் ஏற்கனவே சில
மாதங்களுக்கு முன்பு செகந்திராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண்களுடன்
உல்லாசமாக இருந்தபோது போலீசில் சிக்கி ஜாமீனில் வெளி வந்துள்ளார்கள்.
காயத்ரி, சுஜித்ரா போன்று 16 பெண்கள் இந்த கும்பலிடம் சிக்கி கற்பை
இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த லூயிஸ்,
சிங்கப்பூருக்கும், ஆனந்தராஜ் பெங்களூருக்கும் பெண்களை அழைத்து
சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது மட்டும் அல்ல சமீபத்தில் பேஸ் புக்
இனைய தளத்தில் குடும்ப படங்களை வெளியிட்டிருந்த ஒருவரின் மனைவியின் படத்தை
தனியாக எடுத்து அவரது போன் நம்பரையும் போட்டு மணிக்கு 500 ருபாய் என்று
அவரை விபச்சாரியாக சித்தரித்துள்ளனர்.
சிந்திக்கவும்: இப்படி
தினம் தோறும் பல்வேறு அவலங்கள் நிலவி வரும் பேஸ் புக் இணையதளத்தை பற்றி
அறியாமையினால் நமது மக்கள் அதில் தங்களது குடும்ப புகைப்படங்களை, திருமண
வைபவங்களில் மற்றும் விழாக்களில் எடுக்கப்படும் வெளியிடுவது மிகவும்
ஆபத்தானது. பேஸ் புக் இணையத்தளம் பாதுகாப்பற்றது. அதில் உள்ள விபரங்களை,
படங்களை எடுத்து மற்றவர் அல்லது உங்களுக்கு வேண்டாதவர்கள் உங்களையும்
உங்கள் குடும்ப பெண்களை பற்றி அதே பேஸ் புக் இணையதளத்தில் தவறாக வெளியிட
முடியும் என்பதை பெண் மார்கள் சொன்னா புரிஞ்சுக்க மாட்ரான்களே ..
- samuel.w.dhinakaranபுதியவர்
- Posts : 15
Join date : 05/01/2013
Location : Milton keynes., LONDON., UK
Re: முகநூல் விழிப்புணர்வு
Tue Feb 12, 2013 8:34 am
Useful tips.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum