ரஜினி சொன்ன சம்பவம்
Sat Feb 09, 2013 7:20 pm
நடிகர்.
ரஜினிகாந்த் அவர்களின் சிறப்பம்சம் அவர் நடிப்பும் ஸ்டைலும் மட்டும் அல்ல.
அவர் பேசும் போது இடை இடையே சொல்லும் சிறு கதைகளும் சிறப்பு தான். அவரைப்
பிடித்க்காதவர்கள் கூட அவர் சொல்லும் கதைகளை ரசிப்பது உண்டு. ஒன்று. இந்த
கதைகள் சிந்திக்க தூண்டும் வகையில் அமைந்துவிடும். இதுபோல சமீபத்தில் ஒரு
பாராட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பேசும் போது சொன்ன கதை ஆச்சரியமாகவும்
சுவாரசியமாகவும் இருந்தது.
ஒரு
இரவு வேளையில் இருவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்களாம்.
இருவரும் அருகில் உட்கார்ந்து இருந்தனர். அதில் ஒருவர் புத்தகம் ஒன்றை
படித்து கொண்டிருக்க மற்றொருவர் அதை கவனித்துக் கொண்டிருந்தாராம். அவர்கள்
இருவரின் உரையாடல் இதோ உங்களுக்காக ரஜினி சொன்ன பாணியில் .........
நபர் 1: ஐயா வணக்கம், இருவரும் வெகு தூரம் ஒன்றாக பயணம் செய்யப்போகிறோம்
நாம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வது நல்லது. நான் ஒரு விஞ்ஞானி, உங்களைப்
பற்றி தெரிந்துகொள்ளலாமா?
நபர் 2: (அமைதியான முகத்தோடு)
“சொல்லிக்கொள்ளும் அளவில் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை” என்று சொல்லி
கையில் உள்ள புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க தொடங்கினார்.
நபர் 1:
“ரொம்ப ஆர்வமா வாசிக்கிரீங்களே, அது என்ன புத்தகம். விஞ்ஞானம் அல்லது
அறிவியல் சம்பந்தமான புத்தகமா” என்று கேட்டு புத்தகத்தை எட்டி பார்த்தார்.
நபர் 2: ‘இது அதை விட அறிவு நிறைந்த புத்தகம், இதன் பெயர் பரிசுத்த
வேதாகமம் (HOLY BIBLE)” என்று சொல்லி மறுபடியும் வாசிப்பதில் கவனம்
செயலுத்தினார்
நபர் 1: “இந்த விஞ்ஞான யுகத்துல கடவுள், வேதம்
போன்ற கட்டுக் கதைகளையும், மூட நம்பிக்கைகளையும் எப்படி நம்புறீங்க. உங்கள
மாதிரி ஆட்களால தான் இந்த உலகம் வளராம இருக்கு” என்று கடிந்துகொண்டார்.
நபர் 2: (முகத்தில் எந்த சபலமும் இல்லாமல் வேத புத்தகத்தை வாசித்து கொண்டே இருந்தார்)
நபர் 1: இந்த உலகம் உண்டானது முதல் இப்போ நாம் பயணம் பண்ற விமானம் வரை
எல்லாமே விஞ்ஞானம் தான். இதுல கடவுளுக்கு எந்த இடமும் இல்லை. இதெல்லாம்
சொன்ன உங்கள மாதிரி ஆளுக்கு புரியவாப் போகுது.
நபர் 2: (இப்போதும் எந்த பதிலும் சொல்லாமல் வேத புத்தகத்தை வாசித்துக் கொண்டே இருந்தார்)
நபர் 1: இன்னும் சில வினாடிகளில் நாம் இறங்கும் இடம் வர போகிறது , உங்க பெயர தெரிஞ்சுக்கலாமா?
நபர் 2: என் பெயர் “தாமஸ் ஆல்வா எடிசன்” என்று சொல்லி தன் பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினார்.
நபர் 1: “எடிசனா, நீங்கள்!!! நான் மனதில் உள்ளதை எல்லாம் போட்டு உடைத்து
விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் ஆய்வுகூடத்திற்கு வந்து தங்களை
சந்திக்க எனக்கு அனுமதி கிடைக்குமா?” என்று தாழ்மையோடு கேட்டார்.
எடிசன் : “நான் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை, உங்களுக்கு கட்டாயம் அனுமதி உண்டு” என்று சொல்லி ஒரு குறிப்பிட தேதியில் வர சொன்னார்.
எடிசன் சொன்ன குறிப்பிட்ட நாளில் அவரின் ஆய்வு கூடத்திற்கு அந்த நபர்
சென்றார். ஆய்வுக் கூடத்திற்கு உள்ளே சென்றதுமே அங்கு வைக்கபட்டிருந்த
சூரிய குடும்பத்தின் மாதிரியைப் பிரமிப்போடு பார்த்து கொண்டிருக்கும் போது
எடிசன் வந்தார்.
நபர் 1: இந்த சூரிய குடும்பத்தின் மாதிரியை
எப்படி இவ்வளவு நேர்த்தியாக செய்தீர்கள்? இந்த அளவு நேர்த்தியை உலகில் நான்
எங்குமே பார்த்தது இல்லை. இதை செய்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
எடிசன் : “இந்த மாதிரியை நான் செய்யவில்லை.இந்த அறையை நாங்கள் கட்டி
முடித்ததும் ஒரு திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த நாளில்
அறையை திறந்ததும் இது இருந்தது. அதனால் இது தானாகவே வந்தது என்று
நினைத்துவிட்டோம்”
நபர் 2: உங்களை பெரிய விஞ்ஞானி என்று நினைத்து
வந்தால் நீங்கள் சிறு பிள்ளை போல பேசுகிறீர்கள். இந்த மாதிரி எப்படி தானாக
வரும். அந்த ஒரு பொருளையும் யாரோ ஒருவர் செய்தே ஆக வேண்டும் அல்லவா?
எடிசன்: இவ்வளவு விவராமாக பேசுகிற நீங்கள் எப்படி இந்த உலகம் தானாக
உருவானது என்பதை நம்புகிறீர்கள். ஒரு சிறு மாதிரியே தானாக வராது என்றால் ,
நிஜ சூரிய குடும்பம் எப்படி தானாக வர முடியும். சிருஷ்டிப்பு இருக்குமானால்
சிருஷ்டிகரும் இருந்தே தீரவேண்டும்.
இந்த கதையை சொன்ன சூப்பர் ஸ்டார் கடைசியில் உரத்த குரலில்
“IF THERE IS A CREATION THERE SHOLUD BE CREATOR AND THAT CREATOR IS GOD”
என்று கொடுத்த பஞ்ச் அருமை.
வேதத்தை நன்கு கற்றிருந்தததால் எடிசனால் தெய்வத்தை குறித்து அவரது
பாணியில் சாட்சி கொடுக்க முடிகிறது. நாமும் இதுபோல் நடந்துகொள்ள
முயற்ச்சிப்போம்.
(ஆதியாகமம் 1:1) “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
(சங்கீதம் 33:6) “கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது”
(சங்கீதம் 89:11) “வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்”
(சங்கீதம் 136:5) “வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.”
(அப்போஸ்தலர் நடபடி 17:24) “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின
தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால்
கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.”
(எபிரேயர்
11:3) விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால்
உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளா
நன்றி: கதம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum