கள்ளழகர் ஆற்றில் இறங்கிய கதை
Fri May 16, 2014 7:50 am
''கள்ளழகர் ஆற்றில் இறங்கிய கதையும்,நம் கேள்விகள் சிலவும்''
கள்ளழகர் ஆற்றில் இறங்கிய கதை.(இதனை நாம் சொல்லவில்லை அவர்களே சொன்னது. வேண்டுமென்றால் அவாளிடமே உறுதி செய்து கொள்ளலாம்)
கதை:-
''மீனாட்சியினுடைய சகோதரர் கள்ளழகர். புராணப்படி கள்ளழகர் கல்யாணத்திற்கு வருகிறார். மீனாட்சி சுந்தரேசுவரர் கல்யாணத்திற்காக வருகிறார்.வருகிற வழியில் அவர் ஓர் ஊரில் தங்குகிறார். அங்கு தங்கி இளைப்பாறுகிறார்.
அதுவும் அவர் ஒரு துலுக்க நாச்சியார் வீட்டில் இருந்தார். கள்ளழகர் துலுக்க நாச்சியார் வீட்டில் அயர்ந்து தூங்கி விடுகின்றார். அவர்களோ இவரை எதிர்பார்த்து நேரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நேரம் அதிகமான உடனே மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணத்தை முடித்துவிடுகிறார்கள். கள்ளழகர் அரக்கப்பறக்க எழுந்திருந்து அய்யோ, நேரமாகி விட்டதே என்று இவர் மதுரையை நோக்கி வருகிறார். அப்பொழுதுதான் ஆற்றைக் கடந்து வருகிறார்.
பாதிவழியில் ஆற்றில் அழகர் இறங்கும் பொழுது,''திருமணத்திற்காக உங்களுக்காக காத்திருக்கவில்லை. திருமணத்தை முடித்து விட்டார்கள்''என செய்தி வருகிறது.
அழகருக்கு கோபம் வந்துவிடுகிறது.
''எனக்காக காத்திருக்காமல் எனது சகோதரி மீனாட்சி திருமணம் நடக்கலாமா-? ஆகவே அந்தத் திருமணத்திற்குச் செல்லவில்லை'' என்று சொல்லி கள்ளழகர் திரும்பு என்று கூறி திரும்பிப் போய்விடுகிறார்.
இதுதான் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய கதை.''
நம் கேள்விகள் :
1) வருடா வருடம் கல்யாணம் நடக்கிறதே அப்படியானால் சென்ற ஆண்டு நடந்த திருமணம் என்னவாயிற்று?
2)பச்சை பட்டாடை உடுத்தி ஆற்றில் இறங்கினார் என சொல்கிறார்களே பச்சை பட்டாடையை அவரா உடுத்தி கொண்டு வந்தார். இவர்கள் அந்த பொம்மைக்கு உடுத்தி விட்டதுதானே? ஏன் கருப்பாடை அணிவித்தால்கூட அந்த பொம்மை ஒன்றும் சொல்லப்போவது இல்லை.
3)பச்சை பட்டாடை உடுத்தி வந்தால் பசுமை செழிக்கும் என கதை விடுகிறார்களே. மழை பொய்த்து வறண்டு கிடந்தபோது அது ஏன் என்று யாராவது கள்ளழகரை கேட்டார்களா?
4)சாதாரண மனிதன் கூட ஒரு நாள் அவமானப்பட்டால் அடுத்த நாள் நேரத்தில் வருவான். ஏன் ஒரு ஆண்டுகூட கள்ளழகர் நேரத்தில் வரவில்லை?எல்லாவருடமும் லேட்டாக வருகிறார்?
5)பாலம் இல்லாத காலத்தில் ஆற்றில் இறங்கினார்.அது சரி. இப்போதுதான் பாலம் கட்டியிருக்கிறதே பாலத்தின் வழியே போனால் என்ன?
6) மிக முக்கியமாக,கள்ளழகர் தன் பக்தர்களை சரி சமமாக மதித்தால்'' ஏன்யா நீங்க மட்டும் மேலேயே நிக்கறீங்க? கீழே உள்ளவன் இத்தணை வருசமா உங்களை தூக்குறானே. நீங்கள் கீழே இறங்கி அவர்கள் நீங்கள் தூக்ககூடாதான்னு?'' பார்ப்பானைப் பார்த்து கள்ளழகர் ஏன் கேள்வி கேட்கவில்லை?
நன்றி: கேள்வி கேட்போர் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum