15 அடி நீளமான அரியவகை மீன்
Fri May 02, 2014 8:10 am
மெக்ஸிகோவில் கரையொதுங்கிய 15 அடி நீளமான அரியவகை மீன்
கடலில் 3,000 அடி அழத்தில் வாழும் 15 அடி நீளமான ‘ஓர்பிஸ்’ எனப்படும் அரிய வகை மீனொன்று அண்மையில்
மெக்ஸிகோவின் கோர்டெக்ஸ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.
எளிதில் காணக் கிடைக்காத இந்த மீனை இங்கிலாந்தின் ‘அன்-குரூஸ் அட்வெஞ்சர்’ அமைப்பின் குழுவினரே கண்டறிந்துள்ளனர். இஸ்லா சான் பிரான்சிஸ்கோவுக்கு அண்மையில் இறந்த நிலையில் குறித்த குழு தமது பயணத்தின் நடுவே இறந்த நிலையில் கண்டு புகைப்படமெடுத்து வெளியிட்டுள்ளனர்.
‘ஓர்பிஸ்’ மீன் பற்றி அறிந்துள்ள போதிலும் அதனை ஒருபோதிலும் பார்த்ததில்லை. இதனை நேரடியாகக் கண்டு முற்றாக உறைந்துபோனேன். நான் பார்த்ததிலேயே மிகவும் அழகானதும் இன்ப அதிர்ச்சியானதுமான உயிரினம் இது’ என பயணக் குழுவின் தலைவர் லி;யா ஸ்டமெஸோ தெரிவித்துள்ளார்.
இவ்வகை மீன் 3,000 அடி ஆழத்தில் வாழ்வதுடன் சாதாரணமாக சுமார் 36 அடி வரையில் வளரும்
என்பது குறிப்பிடத்தக்கது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum