முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய இலகு வழிமுறைகள்
Sat Apr 26, 2014 8:49 am
* உருளைக்கிழங்கை நறுக்கி அரைத்து அதனை முகத்தில் பூசி 15 நிமிடத்திற்கு பின்னர் , குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பசை போல் முகத்தில் தடவி காயவைத்து கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இருமுறை செய்யலாம்.
எலுமிச்சைச் சாற்றுடன் சீனி சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ‘மசாஜ்’ செய்ய வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, சருமம் ‘பளிச்’சென்று ஆகும்.
கரும்புள்ளியை நீக்க சிறந்த ஒரு வீட்டு மருந்தாக, ஓட்ஸை பொடிசெய்து, பன்னீருடன் கலந்து முகத்துக்குத் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து தடவிவந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து, கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்துப் பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகளை நீக்கி விடலாம்.
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, அதனை முகத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்துப் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் காணாமல்போய்விடும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum