சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர
Fri Apr 18, 2014 8:32 am
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது சாமை. அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
சாமை - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
மோர் - 1 கப்
உப்பு - தேவையானது
செய்முறை :
• ஒரு கப் சாமையை மூன்று கப் தண்ணீருடன் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவேண்டும்.
• மோரைக் கடைந்து தேவையான உப்புடன் சேர்க்கவேண்டும்.
• சாமையும் மோரும் சேர்ந்து கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.
• சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
• சாமை கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
• கோடை வெயிலுக்கு மிகவும் சிறந்தது இந்த சாமை கஞ்சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum