தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
49-O என்றால் என்ன? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

49-O என்றால் என்ன? Empty 49-O என்றால் என்ன?

Wed Apr 16, 2014 12:31 pm
49-O என்றால் என்ன? 10006563_492096144228493_9084411485040989739_n

49-O : அடிக்கடி கேட்கப்படும்
கேள்விகள் (FAQs)

49-O என்றால் என்ன?

49-O என்பது தேர்தல் நடைமுறை சம்பந்தப்பட்ட
ஒரு விதி. MANUAL OF ELECTION LAW
இரண்டாவது வால்யூமில் வரும் THE CONDUCT OF
ELECTIONS RULES, 1961ன் நான்காவது பகுதியான
Voting in Parliamentary and Assembly Constituenciesல்
இரண்டாவது அத்தியாயமான VOTING BY ELECTRONIC
VOTING MACHINESல் பக்கம் 99ல் (இந்தி வடிவம்
பக்கம் 98ல்) இந்த விதி வருகிறது.


49-O விதி என்ன சொல்கிறது?

"49-O. Elector deciding not to vote.—If an elector,
after his electoral roll number has been duly entered
in the register of voters in Form 17A and has put his
signature or thumb impression thereon as required
under sub-rule (1) of rule 49L, decided not to record
his vote, a remark to this effect shall be made against
the said entry in Form 17A by the presiding officer
and the signature or thumb impression of the elector
shall be obtained against such remark. "

அதாவது?

உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யாருக்கும்
நீங்கள் ஓட்டுப்போட விரும்பவில்லை - அதை நீங்கள்
முறைப்படி பதிவு செய்கிறீர்கள். அதாவது நீங்கள்
ஓட்டுப்போடவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக
அரசாங்கத்துக்கு அறிவிக்கிறீர்கள். அது தான் 49-O.

49-O என்பது ஒட்டாகக் கணக்காகுமா?

இல்லை. 49-O என்பது ஒட்டு அல்ல. ஒட்டுப்
போடவில்லை என்கிற கணக்கு. அதாவது non-vote.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் தகவலறியும்
சட்டத்தின் கீழ் எந்தவொரு தொகுதியிலும் இப்படிப்
பதிவான non-voteகளின் எண்ணிக்கை எவ்வளவு எனத்
தெரிந்து கொள்ளலாம்.

இதை எப்படி பதிவு செய்வது?

உங்கள் வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரியிடம்
நீங்கள் 49-O விதியின் கீழ் வாக்களிக்க
விரும்புவதை தெரிவிக்க வேண்டும். அவர் 17A
என்றழைக்கப்படுகிற வாக்காளர் பதிவேட்டில் உங்கள்
பெயர் மற்றும் வாக்காளர் எண்ணுக்கு நேராக நீங்கள்
எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதன்
ஒப்புதலாக உங்களின் கையெழுத்தையோ,
கைநாட்டையோ பெற்றுக்கொள்வார். அவ்வளவு தான்.
மின்னணு வாக்குப்பதிவு இயத்திரத்தில்
பதிவு செய்யவோ, வாக்குச்சீட்டில்
முத்திரை குத்தவோ, வேறு படிவங்கள் எதுவும்
நிரப்பவோ தேவையில்லை.

இதனால் ஓட்டின் ரகசியத்தன்மை உடைபடுகிறதே?

ஆம். வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல்
அலுவலர்கள் முதல் வாக்குச்சாவடியில்
குழுமியிருக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள்
வரை அனைவருக்கும் நீங்கள் வாக்களிக்க விரும்பாதவர்
என்பது தெரிந்து போகும். இது நமது வழக்கமான
ரகசிய ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானதே. NEGATIVE /
NEUTRAL VOTING பற்றிய தேர்தல் ஆணையத்தின்
அதிகாரப்பூர்வ அறிக்கையிலேயே இது பற்றிய
கவலை வெளியிடப்பட்டிருக்கிறது:

"Although, Rule 49 O of the Conduct of Election Rules,
1961 provides that an elector may refuse to vote after
he has been identified and necessary entries made in
the Register of Electors and the marked copy of the
electoral roll, the secrecy of voting is not protected
here inasmuch as the polling officials and the polling
agents in the polling station get to know about the
decision of such a voter. "

49-Oவை ரகசியமாக பதிவு செய்ய வழியில்லையா?

தற்போதைக்கு இல்லை. 2004ல் அப்போதைய இந்திய
தலைமைத் தேர்தல் ஆணையரான
T.S.கிருஷ்ணமூர்த்தி பிரதமர் மன்மோகன் சிங்கிடம்
தேர்தல் சீர்திருத்தங்களுக்கான வரைவுத்
திட்டங்களடங்கிய குறிப்புகளை சமர்ப்பித்தார். அதில்,
தேர்தலில் பயன்படுத்தப்படுவது வாக்குச்சீட்டோ,
வாக்குப்பதிவு இயந்திரமோ எதுவாயினும் அதில்
அனைத்து வேட்பாளர்களின் பெயருக்குப் பின்
கடைசியாக "None of the above" என்பதையும்
பட்டியலில் சேர்ப்பதற்கு சட்ட திருத்தம்
கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"The Commission recommends that the law should be
amended to specifically provide for negative / neutral
voting. For this purpose, Rules 22 and 49B of the
Conduct of Election Rules, 1961 may be suitably
amended adding a proviso that in the ballot paper and
the particulars on the ballot unit, in the column
relating to names of candidates, after the entry relating
to the last candidate, there shall be a column None of
the above, to enable a voter to reject all the
candidates, if he chooses so. "

எதிர்பார்த்தது போல் அது அரசாங்கத்தால்
கண்டு கொள்ளப்படவில்லை.
வேறு வழிகள் இருக்கின்றனவா?

வேறு சில குறுக்கு வழிகள் உண்டு - நமது பாரம்பரிய
முறைகள். தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்
படுகிறதென்றால் எந்தச் சின்னத்திலும்
முத்திரையிடாமலோ, ஒன்றுக்கு மேற்பட்ட சின்னத்தில்
முத்திரையிட்டோ இதைச் செய்யலாம். ஆனால்
இதனால் உங்கள் ஓட்டு செல்லாததாகி விடும்; 49-
Oவின் கீழ் non-voteஆக கணக்காகாது. தவிர
மின்னணு வாக்குப்பதிவு இயத்திரம்
பயன்படுத்தப்படும் இடங்களில் இவ்வழிகள்
சாத்தியமில்லை.

49-O பற்றிய சில தவறான புரிதல்கள்?

மக்கள் மத்தியில் 49-O பற்றி பல தவறான நம்பிக்கைகள்
நிலவுகின்றன. அவற்றில் முக்கியமான இரண்டைப்
பற்றி மட்டும் பார்ப்போம்:

1. உங்கள் தொகுதியில் வெற்றி பெற்றவர் பெற்ற
வாக்குகளின் எண்ணிக்கையை விட 49-O வாக்குகளின்
எண்ணிக்கை அதிகமென்றால், அந்த
தேர்தலை செல்லாததாக்கி மறுதேர்தல் நடத்துவார்கள்.

2. அந்தத்தொகுதியில் 49-O வாக்குகளின்
எண்ணிக்கையை விட குறைவாக
ஓட்டு வாங்கியவர்கள் அனைவரும் தம் வாழ்நாள்
முழுமைக்கும் தேர்தலில் போட்டியிட
தடைவிதிக்கப்படுவார்கள்.
இவை இரண்டுமே ஒரு சதவிகிதம் கூட
உண்மையில்லாத மூட நம்பிக்கைகள்.

49-Oவை விடக் குறைந்த ஓட்டு வாங்கியவர்
ஜெயித்தவரா?

ஆம். இதை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல்
ஒன்று அன்று (தேதியைக் கவனியுங்கள்!) வெளியிட்ட
அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் (No.ECI/
PN/35/2008) தெளிவாக சொல்லிவிட்டார்கள்:

"...and under the law, the candidate who secures
highest number of valid votes polled, irrespective of his
winning margin, is declared elected. "

அப்புறம் 49-Oவினால் என்ன தான் பயன்?

இரண்டு உடனடி பயன்கள்:

1. நீங்கள் ஓட்டுப்போடவில்லை என்பதை பதிவு செய்து
விட்டீர்கள்

2. வேறு ஒருவர் உங்கள் ஓட்டைப் போடுவதைத்
தவிர்த்து விட்டீர்கள்.

இவை தவிர சில எதிர்கால விளைவுகள் உண்டு.
அது அடுத்த கேள்வியில்.

இதற்காகவா 49-Oக்கு பிரச்சாரம் எல்லாம்
செய்கிறார்கள்?

கட்சிகளின் மேல் நம்பிக்கை இழந்தவர்களின்
எண்ணிக்கையை ஒருமுகப்படுத்தும்
முயற்சியாகவே 49-Oவுக்கு பிரசாரம் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு, உங்கள் தொகுதியில்
வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளின்
எண்ணிக்கையை விட 49-O வாக்குகளின்
எண்ணிக்கை அதிகமென்றால், அரசாங்கமோ, தேர்தல்
ஆணையமோ, கட்சிகளோ,
வேறு அமைப்புகளோ அல்லது பொதுமக்களோ அது
பற்றிய பரவலான கவன
ஈர்ப்பை ஏற்படுத்தி ஏதாவது சட்ட திருத்தம்
அல்லது வேறு வகையான
மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு சாத்தியம்
மட்டுமே. இது வரை இது போல் எங்கும்
நடந்ததில்லை. ஆனால் நடப்பதற்கு குறைந்த அளவில்
நிகழ்தகவு உண்டு என்பதால் தான் பிரசாரம்
செய்கிறார்கள்.

49-Oவினால் ஏதேனும் பிரச்சனை வருமா?

சொல்வதற்கில்லை. நீங்கள் தனியாய் 49-O
போடுகிறீர்கள் என்றால் பெரும்பாலும்
எந்தப்பிரச்சனையும் வராது என நினைக்கிறேன்.
ஆனால் இதற்கு ஆள் சேர்க்கிறீர்கள் என்றால்
பிரச்சனை வரலாம். உதாரணமாய் 49-
Oக்கு பொதுவிடத்தில் பிரச்சாரம் செய்கிறீர்களென்றால்
பிற அரசியல் கட்சிகள்
அல்லது சுயேச்சை வேட்பாளர்களிடமிருந்து எதிர்ப்பு
கிளம்பலாம். சமீபத்தில் எங்களூரான ஈரோட்டில்
நன்முறையில் இப்படி பிரச்சாரம் செய்தவர்கள் சிலர்
வன்முறையை சந்தித்திருக்கிறார்கள். அடித்தவர்கள்
யாரென்று உங்களுக்குத் தெரிந்த
ஈரோட்டுக்காரர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

49-O பற்றி மேலும் தெரிந்து கொள்ள?

"to bring the real democracy in India" என்கிற
கோஷத்துடன், சிலர் ஒரு தன்னார்வத்
தொண்டுஅமைப்பாக 49-o.org
என்று தனி வலைத்தளமே வைத்து நடத்துகிறார்கள்.
49-O பற்றிய சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறார்கள்
49-O தவிர வேறு என்ன செய்யலாம்?
1. கட்சிகளிடம் பல குறைகள் அல்லது கறைகள்
இருந்தாலும் வேட்பாளர் நல்லவராய்
திறமையானவராய் இருந்தால்
அவருக்கு ஓட்டளியுங்கள். குறைந்தபட்சம் உங்கள்
தொகுதிக்காவது நல்லது நடக்கும்.

2. புதிதாய் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும்
விஜயகாந்த் போன்றவர்களின்
கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள்.
ஒரு வாய்ப்பு தான் - என்ன செய்கிறார்கள்
என்று பார்க்கலாம். நல்லது நடக்கவும்
வாய்ப்பிருக்கிறது.

3. உங்களுக்கு நன்கு அறிமுகமான அல்லது நீங்கள்
தகுதியானவர் என நம்பும்
ஏதாவது சுயேச்சைக்கு ஓட்டளியுங்கள். உங்கள்
எடை போடும் திறமை சிறப்பனதென்றால்,
நன்மைகள் ஏதேனும் நிகழக்கூடும்.

4. ஏற்கனவே ஏதாவது அமைப்பு அல்லது தனியாகவே
சமுதாயப்பணியில் தம்மை ஈடுபடுத்திக்
கொண்டவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவர்களிடம்
கொஞ்சம் மனசாட்சி இருக்கும். அதைச்
சுரண்டி நன்மை பெறலாம்.

5. ரிட்டயர்ட் அரசாங்க உயர் அதிகாரிகள் - உதாரணம்:
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் - நின்றால்
அவர்களுக்கு ஓட்டளியுங்கள்.
அவர்களுக்கு அரசு இயந்திரத்தின்
அனைத்து நெளிவு சுளிவுகளும் அத்துபடி.
அது உதவும்.

6. இளைஞர்களுக்கு ஓட்டளியுங்கள். இன்னமும்
வயதிருக்கிறது என்பதால் தம்
பாவங்களை ஒத்திப்போடுவார்கள்.
அவைக்கு செல்வார்கள்; தூங்காமல் கவனிப்பார்கள்.
சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

7. படித்தவர்களுக்கு ஓட்டளியுங்கள். அவையின்
கேள்வி நேரம் போன்றவற்றில் வாயைத்
திறந்து ஏதாவது பேசுவார்கள்.
எல்லா விஷயங்களையும் பற்றிய குறைந்தபட்ச
பொது அறிவு இருக்கும்.

8. திருமணமாகதவர்களுக்கு குறிப்பாய்
குழந்தையில்லாதவர்களுக்கு ஓட்டளியுங்கள்.
அவர்கள் கொள்ளையடித்து சொத்து சேர்ப்பதற்கான
முகாந்திரம் குறைவு. போனால்
போகிறதென்றாவது நல்லது செய்வார்கள்.

9. புதிதாய் நிற்பவர்களுக்கு ஓட்டளியுங்கள்.
ஆர்வக்கோளாறினால் ஏதாவது நன்மைகள்
நடக்கும். அவர்கள் ஊழல் கலையைக் கற்றுத் தேற
கொஞ்சம் நாளாகும். அதற்குள்
ஏதாவது நல்லது செய்வார்கள்.

10. பெண்களுக்கு ஓட்டளியுங்கள். மனித இனத்தின்
ஆதிகால நேர்மை அவர்களிடம் தான்
மிச்சமிருக்கிறது. அவர்கள் பெரும்பாலும்
பழி பாவங்களுக்கு அஞ்சுவதால்
பயத்தினாலாவது குற்றங்கள் குறையும்.

இவை எதுவுமே தேறவில்லையென்றால், 49-Oவைப்
பயன்படுத்துங்கள்.

49-Oக்கு கள்ள ஓட்டு போடும் காலம் விரைவில்
வரும்.
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum