இப்படியும் ஒரு சபை
Mon Mar 31, 2014 12:11 pm
சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியின் பின்புறமுள்ள இந்த எளிமையான இடத்தில் பாழடைந்த அரசுக் கட்டிடங்களின் அருகாமையில் இப்படி ஒரு சபை. சற்று வெளியே வந்தால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். இங்கோ வானமே கூரையாக சுமார் 30 குடும்பங்கள் குடியிருக்கிறது.
**விசித்திரமான உலகம்.
அவ்வப்போது அரசாங்க அதிகாரிகள் வந்து இவர்கள் கூட்டை சிதைத்துப் போட்டு செல்லுவார்கள். இவர்களுக்கு மாற்று இடமும் தராது இழப்பீடும் தராது வெறுமனே மிரட்டிவிட்டு செல்லுவார்கள். ஆனால் எங்கும் நகராமல் இங்கேயே பிறந்து வளர்ந்து அருகிலிருக்கும் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று கௌரவமாக வாழுவோரும் உண்டு. அங்கே இப்படி ஒரு சிறிய ஆராதனை கூடுகை. இதுவும் கூட பலமுறை கலைத்துபோடப்பட்டது. ஆனாலும் இந்த சபையும் இங்கே சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகிறது. இதனை நடத்தும் பாஸ்டர் இந்த மக்களிடமிருந்து காணிக்கை பெற்று அல்லாமல், இவர்களுக்காக தன்னுடைய சேமிப்பையெல்லாம் கரைத்தும் இறைத்தும் ஊழியம் செய்கிறார்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum