தட்டிக்கொடுங்கள், கொட்டிவிடாதீர்கள்
Sat Mar 22, 2014 4:13 am
கொட்டுப்பட்டு வளர்ந்தவர்களை விட, தட்டி கொடுக்கப்பட்டு வளர்ந்தவர்களே அதிகம்.
திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது. ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல பத்து பங்கு தருகிறேன். நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான். அந்த வீட்டில் இருந்த ஒரு துவாரத்தை காண்பித்து அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.
ஆம் நண்பர்களே! அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை உண்டு என்பது எவ்வளவு உண்மை.
ஒரு மனிதனின் பலவீனத்தை நாம் குறைக்கூறி கொண்டும் தூற்றிக்கொண்டும் இருந்தால் அதனால் அம்மனிதன் இன்னும் பலவீனமடைந்து விடுவான். மாறாக அவனை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி, இது வரை அவன் எதாவது நற்செயல்கள் செய்திருந்தால் அதைக்கேட்டறிந்து, அதைக்குறித்து அவனை பாராட்டி அவனுக்கு துணை நின்றால் இந்த உலகமே நிமிர்ந்துப்பார்க்கும் அளவுக்கு அவன் பெரிய ஆள் ஆகிவிடுவான்.
ஒரு மனிதன் இக்கட்டான நேரத்தில் அவனை உற்சாகப்படுத்தி அந்த சூழ்நிலையிலிருந்து அவன் வெளியே வர நீங்கள் உதவி செய்தால், உங்கள் பிரச்சனைகளின் நேரத்தில் கடவுள் தம் தூதனை அனுப்பி உங்களை விடுவிப்பார்.
ஒருமனிதனின் உயர்வுக்கு நாம் காரணமாய் இருக்க வேண்டுமே தவிர, எந்த ஒரு மனிதனின் வீழ்ச்சிக்கும் நாம் காரணமாகிவிடக்கூடாது.
"சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்." கலாத்தியர் 6:1,2
"ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக" பிலிப்பியர் 2:3,4
"கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" பிலிப்பியர் 2:5
"நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது." யோவான் 15:12
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum