சூப்பர் பர்சனாலிட்டி ஆகணுமா தயக்கத்தை விட்டுத்தள்ளுங்க
Tue Mar 18, 2014 9:25 am
என் மகன் நல்லா படிப்பான். ஆனால் கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகலை ஏன்னு தெரியலை என்று சில பெற்றோர் புலம்புவார்கள். காரணம் படிப்பில் கெட்டிக்காரர்களாய் இருக்கும் பல மாணவர்களுக்கு தன் திறமையை சரியாக வெளிப்படுத்த தெரிவதில்லை. கிளாஸ் டாப்பராய் இருக்கும் ஒரு மாணவன் செமினாரிலோ, பேப்பர் பிரசண்டேஷன், வைவா போன்ற சமயங்களிலோ ஒழுங்காக தன் கருத்தை வெளிப்படுத்த தயங்கினால் படித்து என்ன பலன்?
திறமை இருந்தும் கேம்பஸில் முழுமையாக திறமையைவெளிப்படுத்த முடியாமல் போனால் எதிர்காலம் கேள்விகுறி தானே?
படிப்பென்பது அறிவு. அந்த படிப்பை பயன்படுத்துவது அல்லது செயல்படுத்துவது தான் திறமை. அப்படிப்பட்ட ஸ்கில் நிரம்பியவர்களைத்தான் இன்றைய கார்ப்பரேட் உலகம் வரவேற்கிறது.
பிள்ளைகளுக்கு படிப்பின் அவசியத்தை உணர்த்தி சதா படி படி என்று நச்சரிக்கும் பெற்றோர்கள் படிப்போடு இந்த உலகை எதிர்கொள்ளும் ஆளுமைத்திறமையையும் அவர்களிடம் வளர்க்கவேண்டியது அவசியம். உருகி உருகி காதலித்தாலும் காதலை வெளிப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டு இருந்தால் காதல் கூட கை நழுவித் தான்போகும் என்பது தான் நிதர்சனம்.
நண்பர்களுடன் பேசும் போது வாய் கிழிய பேசுவது திறமை கிடையாது. ஒரு ஸ்டேஜில் ஏற்றிவிட்டால் குரல் நடுங்காமல் வியர்த்து வழியாமல் பேசுவது தான் திறமை. திறமை இருந்து என்ன பிரயோஜனம், அதிர்ஷ்டம் இல்லையே என்று அங்கலாய்த்துக்கொண்டிராமல் வாய்ப்புகள் வரும் போது உங்கள் அறிவை அடுத்தவருக்குப் புரியவையுங்கள். அது தான் முக்கியம்.
பல நாடுகளைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் இந்து மதத்தின் பெருமைகளை எடுத்துரைத்த விவேகானந்தரின் கம்பீரம் அவரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. மதுரைக்கு வழி வாயிலே, வாயுள்ள பிள்ளை பிழைக்கும் போன்ற கிராமத்து பழமொழிகளும் நமக்கு உணர்த்துவது இதைத்தான். எங்கே எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும் என்று தெரிந்து நடந்து கொண்டால் நீங்கள் தான் சூப்பர் பெர்சனாலிட்டி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum