முகநூலில் பார்த்த ஒரு புகைப்படத்தை மீண்டும் தேடுவது சிரமமாக இருக்கிறதா?
Thu Mar 13, 2014 7:22 pm
சில நாட்களுக்கு முன் நீங்கள் முகநூலில் பார்த்த ஒரு புகைப்படத்தை மீண்டும் தேடுவது சிரமமாக இருக்கிறதா?
அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது FBCacheView எனும் ஒரு சிறிய#மென்பொருள்.
இது உங்கள் இணைய உலாவியில் சேமிக்கப்பட்டுள்ள Cache கோப்புக்களில் இருந்து நீங்கள் ஏற்கனவே முகநூலில் பார்த்த அத்துனை படங்களையும் பட்டியலிடுகின்றது.
இதில் உங்கள் நண்பர்களின் Profile Pictures உட்பட ஏனைய தரவேற்றப்பட்ட அனைத்து புகைப்படங்களையும் தவறவிடாமல் பெற்றுக்கொள்ளலாம்.
மிகவும் சிறிய அளவினையே கொண்டுள்ள இந்த மென்பொருளை கணனியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை இதனை தரவிறக்கிய பின் Unzip செய்து குறிப்பிட்ட கோப்பினை Double-Click செய்வதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம்.
இதனை இயக்கியவுடன் இது உங்கள் இணைய உலாவியில் மறைவாக சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை வகைப்பிரித்து பட்டியலிடுகின்றது.
Image Type என்பதற்கு கீழ் Profile Picture, Uploaded Images, External Images என பிரதானமாக மூன்று விதமாக வகைப்படுத்தப்படுவதுடன் குறிப்பிட்ட#புகைப்படம் பகிரப்பட்ட நாள், நேரம் மற்றும் அதனை நாம் பார்த்த நாள், நேரம் என்பவற்றுடன் குறிப்பிட்ட புகைப்படத்தின் URL மற்றும் அதன் அளவு, அது கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் இடம் என அனைத்தையும் அக்குவேறு ஆணிவேராக குறிப்பிட்ட மென்பொருள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
நீங்களும் குறிப்பிட்ட மென்பொருளை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum