மற்றுமோர் வாய்ப்பு
Thu Mar 13, 2014 12:58 am
ஜானி என்கிற 11 வயதுடைய சிறுவன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி என்ற இடத்தில தன் பெற்றோர்களுடன் வசித்து வந்தான். அவன் தன்னுடைய பெற்றோர்கள் தினமும் வீட்டுக்கும் வெளியேயும், வீட்டிலும் கடுமையாக உழைத்து வருவதை கவனித்து வந்தான்.ஜானி ஒரு ஞாயிற்று கிழமை தன்னுடைய அப்பா அம்மாவுக்கு காலை உணவு செய்து அசத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.அவன் அம்மா செய்யும் PANCAKE ஐ பார்த்திருக்கிறான்.அதுபோல் தன் பெற்றோருக்கு PANCAKE தன் கையால் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
எனவே ஒரு ஞாயிற்று கிழமை காலையில் சீக்கிரமாக எழுந்து வேகமாக சமையலறைக்கு சென்றான். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்தான்.அவன் FRIDGE ஐ திறந்து முட்டையையும், பால் பாக்கெட்ஐயும் வெளியே எடுத்தான்.ஜானி எப்போதுமே சமையலறை அலமாரியில் இருந்து மாவு எடுப்பதற்கு நாற்காலி உபயோகிப்பதுண்டு.
ஜானிக்கு ஒரு செல்ல பூனை உண்டு. அது அவனுடைய செயல்களை ஆச்சரியத்துடன் கவனித்து கொண்டு இருந்தது.ஜானி அலமாரியில் இருந்து மாவை எடுக்கும்போது , அது கை தவறி கீழே தரையில் விழுந்து சிதறி விட்டது.இதை பார்த்த ஜானியின் பூனை மாவின் மேல் தாவி குதித்து , விளையாட ஆரம்பித்து விட்டது.ஜானி தாவி வந்து பூனையை தடுக்க முயலும்போது கை தவறி முட்டையையும் , பாலையும் தட்டி விட்டான். அவையும் கீழே தரையில் விழுந்து விட்டன.
தரை முழுவதும் எல்லாம் கலந்து விரைவில் அலங்கோலமாகி விட்டது. ஜானி எல்லாவற்றையும் சரி செய்ய முயற்சித்தான். ஆனால் , ஜானியின் பூனை கீழே உள்ளதை நக்கி விளையாட ஆரம்பித்து விட்டது.விரைவில் ஜானியின் உடைகளும் அலங்கோலமாகி விட்டன.ஜானி தன்னுடைய பெற்றோருக்கு நல்ல விடயம் செய்ய வேண்டும் என்றுதான் நினைத்தான். ஆனால் அது மிக ப்பெரிய அலங்கோலத்திற்கு இட்டு சென்று விட்டது.அவனுடைய சிறிய இருதயம் மிகவும் வேதனை அடைந்தது.
அப்போது அவன் தலையை உயர்த்தி மேலே பார்த்தபோது , தன் தந்தை தன்னை கவனித்து கொண்டு இருப்பதை கண்டான்.தான் வசமாக மாட் டிகொண்டோம் என்று அறிந்தபோது , வாய் விட்டு உரக்க அழ ஆரம்பித்தான். அவனுடைய தந்தை சமையல் அறையையும் , தரையையும் , அலங்கோலமான ஜானியையும் ஒரு பார்வை பார்த்தார்.
பின் தரையில் கீழே குனிந்து அலங்கோலமான ஜானியை கட்டி அணை த்துக்கொண்டார்.
பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதாவும் அவ்வாறே.நாம் என்னதான் அலங்கோலமான விடயங்களை செய்தாலும், அவர் நம்மில் அன்பு செலுத்தி, நம்மை தேற்றி , மன்னித்து இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கிறவர்.
-Calvin Thomas Dani, BBA Sunday School.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum