பாவத்திலிருந்து விடுவிக்கும் இயேசு
Fri Feb 01, 2013 6:47 pm
ஆற்றைக்
கடக்க முயன்றபொழுது வழுக்கி ஆற்றில் விழுந்துவிட்ட ஒருவன், ஆற்றின்
சீற்றத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தான்.
கரையில் நின்றவர்களின் வாய் சும்மா இருக்கவில்லை. அவர்கள் என்ன சொனார்கள்
பாருங்கள்:
“பாவம் இப்படி ஒரு பரிதாப முடிவை இறைவன் இவன் தலையில் எழுதி விட்டாரே”. இது விதியின்மேல் நம்பிக்கை உள்ள ஒருவன் கூறியது.
“எப்படியாவது உன் மூக்கை மட்டும் நீருக்குமேல் வைத்திரு மகனே” – இது ஒரு முதியவர்.
“நீச்சல் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?”- இது குறை கூறும் இயல்புள்ள ஒருவர்.
“யார் பெற்ற பிள்ளையோ, பாவம் அவன் தாயின் உள்ளம் என்ன பாடுபடும்” – இது ஒரு அன்னை!
“இவன் மிகவும் கவனமாக ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். விழுந்த பிறகு என்ன செய்வது?” – சலிப்புற்ற ஒருவர்.
இந்தப் பேச்சுக்களுக்கு இடையில், அங்கு வந்த ஒரு மீனவனுக்கு அங்குள்ள
நிலைமையை புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை. நீரில் குதித்தான்.அவனை
மீட்டான்.
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
இதைத்தான் கிறிஸ்துவும் செய்தார். ‘பாவம்’ என்ற ஆற்றில் மூழ்கிருந்த நம்மை தூக்கி கரை சேர்த்தார்.
"இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷ குமாரன் வந்த்திருக்கிறார்".(லூக்கா 19:10)
நன்றி: கதம்பம்Permissions in this forum:
You cannot reply to topics in this forum