சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன்
Thu Feb 13, 2014 7:58 am
20.02.2008, இந்த உலகம் சந்தித்த ஒரு துயரமான நாள். ஆம், அன்பின் அப்போஸ்தலனும், 20-ம் நூற்றாண்டின் எலியாவாவுமான சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் இவ்வுலகத்தை விட்டு கடந்துசென்ற நாள்.
கிராமமோ, நகரமோ இந்திய ஊழியர்களில் ஏதாவது ஒரு வகையில் சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் பாதிப்பு இல்லாத ஊழியர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னோடியாக வாழ்ந்தவர் நம் அருமை சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள்.
மனதுருக்கத்தை பற்றியே அடிக்கடி பிரசங்கித்த இந்த தேவ மனிதன் வறுமை, வேலை இல்லாத திண்டாட்டம் தற்கொலை முயற்சி என்பவைகளை தன் இளமையில் அனுபவித்தது அவரது ஊழியத்தின் அடிப்படையும் சிறப்பான அம்சமாகவும் அமைந்திருந்தது. ஆயிரக்கணக்கில் பிரச்சனைகள், நோய்களுடன் இருந்த மக்களுக்காக ஜெபகோபுரம் கண்ட இந்த ஜெபவீரன் மக்களுக்காக பரிதபிக்க கூடிய பிரசங்கியாக சுற்றி திரிந்தார். மக்களுக்காக அவரின் கண்ணீரும், மனதுருக்கமும் அவர் வாழ்வின் இறுதி மட்டும் வற்றி போகவில்லை.
எளிய துவக்கம்;
சுரண்டை என்னும் கிராமத்தில் 1935-ம் ஆண்டில் பள்ளி ஆசிரியரான திரு. துரைசாமி, திருமதி. எப்சிபா தம்பதிகளுக்கு பிறந்த தினகரன், தனது தற்கொலை முயற்சி, இரட்சிப்பின் அனுபவம் இவற்றிற்கு பின் வங்கிப் பணியில் இருந்து கொண்டே தனது ஊழியத்தை செய்து வந்தார்.
ஊடகங்களில் ஊழியம்;
பிரசங்கம் மட்டுமல்லாமல் பத்திரிக்கை, புத்தகங்கள், வானொலி, ஒலிநாடாக்கள் மற்றும் ஒளிநாடாக்கள் இவற்றுடன் தொலைக்காட்சி போன்ற அணைத்து ஊடகங்கள் வழியாகவும் தன் ஊழியத்தை நிறைவேற்றிய இந்த தேவ ஊழியர் பழைய பாடல்களை பாடும்போது கரையாத மனமும் கரையும், உருகாத மனமும் உருகும்.
முழுக் குடும்பமும் ஊழியத்தில்;
மனைவி ஸ்டெல்லா தினகரன் அவர்கள் பெண்கள் ஊழியம் மற்றும் பத்திரிக்கை ஊழியத்தில் உதவிகரமாக இருக்க, மகன் பால் தினகரனும் பலவிதங்களில் உடன் பணி செய்ய, மகள் எஞ்சல் கூட்டங்களில் பாடுவது வழக்கம். தம் அருமை மகளின் மரணத்துக்கு பின் குடும்பத்தில் இணைந்த மருமகளும், பேரப்பிள்ளைகளுமாக தனது முழுக்குடும்பத்துடன் கர்த்தரை சேவித்த பாக்கியசாலி ஊழியர் இவர்.
கிளைகளுடன் செழித்த ஊழியம்;
இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் பகுதி நேர பிரசங்கம் மற்றும் ஜெப ஊழியமாக துவங்கி பத்திரிக்கை, புத்தகங்கள், வானொலி, தொலைகாட்சி, ஒலிஒளி நாடாக்கள், ஜெபகோபுரம், பல்கலைகழகம், சமூக சேவை, இணையத்தளம், ஜெபக்குழுக்கள், ஊழியப் பயிற்சி பள்ளி என பல பிரிவுகளுடன் சர்வதேச அளவில் விரிந்து செழித்திருக்கிறது, இந்திய தேசத்தின் பல மாநிலங்களிலும், அயல் நாடுகள் பலவற்றிலும் சகோதரர் அவர்களது நற்செய்தி கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற்று ஆசிர்வாதங்களை பெற்றிருக்கின்றனர்.
சர்வதேச தலைவர்;
தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் அணைத்து அரசாங்க தலைவர்களுக்காகவும் ஜெபித்து அவர்களுடன் நல்லுறவை பாதுகாத்து வந்த சிறந்த தலைவராக அனைவராலும் அறியப்பட்டவர் அருமை சகோதரர் தினகரன். உலக அளவில் வல்லமையான ஊழியர் என ஒப்புக்கொள்ளபட்டவர். அனைத்து சமய மக்களாலும் அறியப்பட்ட இந்நூற்றாண்டின் ஒரே தமிழ் கிறிஸ்தவ தலைவர் இவர் என்றால் அதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
பாடுகளில்லாத உலகத்திற்கு;
தனது எழுபதுகளிலும் ஊழியங்களை தன்னால் இயன்றவரை செய்து கொண்டிருந்த சகோதரன், மூட்டு வலி மற்றும் மூச்சடைப்பின் காரணமாக சிறிது கால் சுகவீனத்திற்குபின் .. பிப்ரவரி ... அன்று தான் சேவித்த கர்த்தரை முகமுகமாக தரிசிக்க சென்றுவிட்டார். நித்திய வாழ்வை அடைந்து விட்ட சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் இழப்பு என்றன்றும் ஈடுசெய்ய இயலாதது. அவர்தம் குடும்பதினருக்ககவும், ஊழியங்களுக்காகவும், சிறப்பு பிரார்த்தனைகளை ஏறெடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
நன்றி: வில்சன்.இ.பால் (முகநூல்)

Re: சகோதரர் டி.ஜி.எஸ். தினகரன்
Thu Nov 27, 2014 8:41 pm
தாங்கொண்ணா வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் வாழ்க்கைப் பாதைக்கு முட்டுக்கட்டையானதால், ‘உயர்வுக்கு வழி ஏதுமில்லை, ஆதரிப்பார் ஒருவருமில்லை’ எனத் தீர்மானித்து, 1955 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11 ம் தேதியன்று, இளைஞனாயிருந்த சகோதரர். தினகரன் தன்னுடைய வாழ்க்கையின் எல்லைக்கு வரத்தீர்மானித்தார்.
‘வாழ்க்கையின் முடிவே என் துயரங்களின் முடிவு!’ என்றெண்ணி அருகிலிருக்கும் இரயில்பாதையை நோக்கிச் சென்றார்.
‘எப்போது துரித இரயில் வரும்? எப்போது நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளுவேன்?’ என்று கண்கள் நிறைந்த கண்ணீரோடும், மனம் நிறைந்த திகிலோடும், துரித இரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக, காவல் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த தன்னுடைய சித்தப்பாவைச் சந்திக்க நேர்ந்தது தேவத் தீர்மானமே!
தெய்வபக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், சகோதரருடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது.
சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை போன்றவை அவருடைய மனதில் வெள்ளமெனப் பாய்ந்தோடின. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு ஜெபித்தபோது தேவபிரசன்னத்தினால் நிரப்பப்பட்டார்.
“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கும் முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரேமியா 1:5).
ஆம்! நம் அன்பிற்குரிய சகோதரர் பிறக்கும் முன்னரே ஆண்டவருக்கென்று உத்தம ஊழியனாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆகவே, தேவன் அவரைக் குறித்த நேரத்தில் மரண இருளின் பள்ளத்தாக்கினின்று தூக்கியெடுத்தார்.
பின்னாளில் திரள் கூட்ட மக்களுக்கு ஆண்டவரின் அன்பை எடுத்துரைக்கும் பேறு பெற்றார்.
இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கை தோல்விகளால் தடம்புரண்டு போயிருக்கலாம்.
கவலைபடாதீர்கள்! உங்களை நேசிக்கும் ஒரு ஆண்டவர் இருக்கிறார், உங்களை குறித்து அநாதி தீர்மானம் அவரிடம் உண்டு. உங்களை அவர் உயர்த்துவார், சமாதானத்தை அருளுவார்.
அவர் தான் இயேசு கிறிஸ்து.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum