கறிவேப்பிலை தைலம்
Fri Jan 31, 2014 1:33 am
கறிவேப்பிலை தைலம் இதோ….
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது..
அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ….
கறிவேப்பிலை – 200 கிராம்பச்சை கொத்தமல்லி – 50 கிராம்சீரகம் – 50 கிராம்நல்லெண்ணை – 600 கிராம்பசுவின் பால் – 200 மில்லிகறிவேப்பிலையை காம்புகள் நீக்கிநன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலைஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்துகுளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum