"திருநெல்வேலி குசும்பு"
Tue Sep 17, 2013 11:31 pm
"திருநெல்வேலி குசும்பு"
*********************
கட்டபொம்மன் திருநேவெலி க்காரன். உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. அப்படின்னா உன்மையா கட்டபொம்மன் எப்படி வசனம் பேசிருப்பாரு....
(கற்பனதான் - வீரத்தோட கோபத்தோட பேசுற வார்த்தைகள் இது எங்க ஊர்ல இது சாதாரண வார்த்தகள்தான் தப்பா நினைக்காதீங்க))
க.பொ.. : எல அங்க என்ன கூவ மாரி நிக்க.. எவம்ல நீ...
ஜாக்ஷன் : நான் ஜாக்ஷன் துரை.
க.பொ. : அது என்ன எழவோ.. ஆமா எதுக்குல வந்த.??
ஜாக்ஷன் : வரி.. வாங்கறதுக்கு....
க.பொ. : என்னது வரி வாங்க வந்தியா.. எலே சவத்து மூதி, வயக்காட்டுக்கு வந்தியா லே, வெள்ளாம பண்ணியா லே, எரும மாட்டு பயல நாலு மாடாவது மேச்சியால, இல்ல நாத்து நட்டியா லே, கள புடுங்கினாலே, இல்ல இங்கன சாணி பொறுக்கிட்டு அலயற பொண்டு புள்ளயளுக்கு மஞ்ச கிஞ்ச அறச்சி கொடுத்தியா லே, எல நீ யேன் ஆத்தா வயித்தலயா பொறந்த பொருக்கி பயல, எல நீ யேன் மாமனால, இல்ல மச்சானா எலே மானங்கெட்ட பெயல, நீ யேன் பங்காளியால, செத்த மூதி ராந்த கல்லு கூவ, பிச்சகார பயல யார்டல கேக்க வரி, எதுக்குல கேக்க கிஸ்தி, நான் உங்கிட்ட சிட்ட வட்டிக்கால துட்டு எடுத்துருக்கேன் எங்கிட்ட வந்து வட்டி கேக்க நாரப்பயல. உங்கப்பன்ட போய் கேளுல வட்டி, மரியாதயா இங்கிட்டு இருந்து ஓடிப்பொயிரு இல்ல கதவிடுக்குல வச்சி கோழி தலைய நசுக்குற மாரி நசுக்கிடுவேன் ரஸ்கல்..
#ஜாக்ஷன் : பின்னங்கால் பெடரில அடிக்க ஓடுறார்
Thanks : Seenu Sreenivasan
நன்றி: தமிழால் இணைவோம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum