அதிரவைக்கும் கூகுள் சாதனம்
Mon Sep 16, 2013 7:31 pm
மீண்டும் ஒருமுறை உலகையே அதிரவைத்துள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமல்லாது அப்பிள் நிறுவனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவும் இது அமைந்துள்ளது. தற்போது பலரது வீட்டில் உள்ள TV க்களில் இன்ரர் நெட் வசதி இருப்பது இல்லை. எனவே ஒரு இணையத்தில் இருக்கும் புது சினிமாப் படத்தை நாம் பார்க்கவேண்டும் என்றால் லாப்-டொப் பில் அல்லது கணணியில் தான் பார்க்கவேண்டி உள்ளது. அதனை TV ல் பார்க்க நாம் HDMI எனப்படும் கேபிளை, லாப் -டொப்பில் பொருத்தி பின்னர் அதன் மறு முனையை TV ல் பொருத்தினால் தான் புது சினிமாப் படங்களை நாம் TV ல் பார்க்க முடியும். ஆனால் தற்போது இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கிட்டிவிட்டது. காரணம் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள சாதனம் தான்.
கூகுள் வெளியிட்டுள்ள இச் சாதனத்தின் விலை வெறும் 35 டாலர்கள் தான்(20 பவுண்டுகள்). இச் சிறிய சாதனத்தை உங்கள் TV யில் உள்ள HDMI இடத்தில் பொருத்தினால் போதும். உங்கள் வீட்டில் உள்ள இன்ரர் நெட் ரூட்டருடன் அது இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். அதனூடாக நீங்கள் உங்கள் TV ஐ ஒரு இன்ரர் நெட் TV ஆக மாற்ற முடியும். உங்கள் மோபைல் போனில் உள்ள வீடியோக்களை TV இல் போடமுடியும். லாப் டோப் , கமரா, ஐபோன் போன்ற சாதனங்களில் உள்ள அனைத்து வீடியோக்களையும் நீங்கள் இச் சாதனமூடாக TV ல் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாது இனி வருங்காலங்களில் உருவாகவுள்ள இனரர் நெட் TVக்களையும் இதனூடாகப் பார்க்க முடியும். குறிப்பாக இன்னும் சில வருடங்களில் சட்டலைட் TV என்பது இல்லாமல் போய்விடும் என்று கூறுகிறார்கள். வியஜ் TV, கலைஞர் TV, ஜெயா TV, போன்ற சட்டலைட் TV க்களின் மவுசு குறைந்து இன்ரர் நெட் ஊடாக ஒளிபரப்பாகிம் TV தான் உலகை ஆட்டிப்படைக்கும் என்கிறார்கள்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சுமார் 90 சதவீதமான வீடுகளில் அதிவேக இனரர் நெட் வசதிகள் இருக்கும். அதனூடாக அவர்கள் எந்த ஒரு TV ஐயும் பார்க்க முடியும். இதன் ஒரு அங்கமாகவே இது நாள் வரை சட்டலைட் ஊடாக இயங்கிவந்த, ஸ்கை (SKY) தொலைக் காட்சி தற்போது இன்ரர் நெட் ஊடாகவும் தனது ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது. இவர்கள் வெளியிடும் பாக்ஸ் £9.99 க்கு விற்பனையாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாக்ஸை வாங்கி அதனில் உங்கள் ரூட்டரில் இருந்து வரும் இன்ரர் நெட் கேபிளை இணைத்து, பின்னர் பாக்ஸில் உள்ள HDMI கேபிளை உங்கள் TV ல் இணைத்தால் போதும். ரிமோர்ட் கன்ரோலர் மூலம் பல தொலைக்காட்சிகளை நீங்கள் பார்க்க முடியும்.
https://www.youtube.com/watch?v=cKG5HDyTW8o
நன்றி: ரசிகன் இயற்கை ரசிகன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum