நாணல் - செடி
Sat Sep 14, 2013 7:42 am
மூன்று பக்கங்கலுள்ளதாய் நீண்டு,
வளர்ந்த தண்டுகளுடையதான செடி நாணல். இச்செடி பெரும்பாலும் எகிப்து தேசத்தில் காணப்படுகிறது.
எகிப்திலுள்ள சில நதிக்கரையில் அதிகம் வளர்ந்திருக்கும். (யோபு 8: 11 சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ?)
Papyrus என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இச்செடி பண்டைய எகிப்தில் பாய், பாதணிகள், பெட்டிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்பட்டுள்ளது. பூர்வ காலங்களில் இந்த தண்டிலிருந்து எடுக்கும் பொருளைப் பக்குவப்படுத்தி எழுது கருவிகளை உண்டுபண்ணினர். நாணலில் இருந்து தான் தற்கால எழுது-தாள்கள் (பேப்பர்) உருவாக்கப்படுகிறது.
நாணல் செடி நையில் நதிக்கரையில் அதிகமாக அடர்ந்து வளர்ந்து இருப்பதால் பெண்கள் குளிப்பதற்கு நன்கு மறைவான இடமாக இருந்தது.
மோசேயின் தாயும் குழந்தையாகிய மோசேயை பார்வோனின் கொடிய ஆணையிலிருந்து காப்பாற்ற அவ்விடத்தையே தெரிந்துகொண்டார்.
குழந்தை மோசேயைப் பாதுகாத்துக்கொண்டதும் ஒரு நாணல் பெட்டியே. ( யாத் 2:3-5)
பழங்காலங்களில், மனிதர்களை சுமந்து செல்லும் படகுகளும் நாணலில் தான் செய்யப்பட்டது. (ஏசாயா 18:2 கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ!)
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum