இந்திரநீலம் என்றால் என்ன?
Sat Sep 14, 2013 7:22 am
“கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்”
எசேக்கியல் பத்தாம் அதிகாரம் முதலாம் வசனத்தில் மேற்கானும்படி படிக்கிறோம்.
இந்திரநீலம் என்றால் என்ன?
சிவப்பும், ஊதாவும் கலந்த ஒரு நிறமே இந்திரநீலம் என்பதாகும்.
கானான் நாட்டில் மட்டுமே இந்திரநீலம் தயாரிக்கப்பட்டு வந்தது. தீரு, சீதோன் என்னும் இடங்களில் கடலில் கிடைக்கும் ‘மூர்க்ஸ்’ எனும் ஒருவகை கிழிக்கல் பூச்சியிலிருந்தே இந்திரநீலம் தயாரிக்கப்பட்டது.
நம் நாட்டில் உள்ள முத்துச் சிப்பியின் பூச்சிகளை போன்றது.
தமிழ்நாட்டின் தென்கடலில் கிடைக்கும் முத்துக்களின் சிறப்பினால் தூத்துக்குடியை ‘முத்துநகர்’ என்று அழைத்தோம். அப்படியே கானான் ‘இந்திரநீல நாடு’ என்று அழைக்கப்பட்டது.
‘மூர்க்ஸ்’ எனும் பூச்சியின் நிறம், உடலமைப்பு எல்லாம் நம் நாட்டு நத்தையை போலவே இருக்கும் சிப்பியிலிருந்து பூச்சியை எடுத்து வெயிலில் போட்டவுடன் உடல் இந்திர நீலமாக மாறிவிடுகிறது.
இதிலிருந்து தான் இந்திர நீலச் சாயத்தை தயாரிக்கிறார்கள். அதிக விலையாவதால் ராஜாக்களும், பிரபுக்களுமே விலை கொடுத்து வாங்க முடியும்.
ஆம்! இதுபோலவே வேதாகமத்தின் ஒவ்வொரு சொற்களுக்கும் அபூர்வமான அர்த்தம் உண்டு. வரும் நாட்களில் இதுபோன்ற நாம் அறியாத ஒரு வார்த்தையோடு சந்திப்போம். அறிந்துகொள்வோம்.!
நன்றி: கதம்பம்
- கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?
- வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன? உபயோகமான தகவல்கள்
- நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
- ஈமெயிலில் CC, BCC என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum