உடைந்த ஓடு
Sat Sep 14, 2013 7:21 am
உடைந்த ஓடு
~~~~~~~~~~
“அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்” என்று ஏசா 30:14 இல் ஒரு வசனம் பரிசுத்த வீதாகமத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கால தலைமுறையினர் பலருக்கு அவ்வசனம் புரியாது. ஆகவே, அக்கால சூழலை ஆராயும் போது இதன் பொருள் நன்கு விளங்கும்.
வேதாகம காலத்தில் பாலஸ்தீனிய மக்கள் மன்பாண்டங்களையே பெரிதும் பயன்படுத்தி வந்தனர். அவைகள் கைதவறி கீழே விழிந்து உடைந்து போவதுண்டு.
வறுமையில் வாடும் இஸ்ரேலியப் பெண்கள் உடைந்துபோன மண்பாண்டத்தின் ஓடுகளில் மிகவும் பெரிதான இரண்டு துண்டுகளை எடுத்துக் கொள்வர். ஒன்றை தண்ணீர் துரவண்டையிலும், மற்றொன்றை வீட்டில் அடுப்படியிலும் வைப்பர்.
துரவண்டை வைக்கப்பட்ட ஓடு அங்கு தண்ணீர் அருந்த வரும் களைப்படைந்த யாத்ரிகர்களுக்கு குழியில் கிடக்கும் நீரை மொண்டு குடிக்க உதவும்.
அடுப்படியில் வைக்கபப்டும் ஓடு வீட்டிற்கு நெருப்பு எடுக்கவரும் அயலவருக்கு நெருப்பை எடுத்துக்கொடுக்க உதவும்.
தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படாத காலத்தில் இப்படிதான் வீட்டுக்கு வீடு நெருப்பை பரிமாறிக்கொள்வர்.
உடைந்த மண் துண்டங்களை “மூளிஓடு” என்று நம்மூரில் இழிவாகச் சொல்வர்.
இஸ்ரவேல் மக்களின் கீழ்படியாமையைச் சொல்ல இப்படி ஓர் எளிய உவமையைச் சொன்னார். |
கீழ்படியாதோருக்கு உடைந்த ஓடு கூடக் கிடையாமல் போய்விடும் என்று சொல்கிறார்.
மேலும் பல வார்த்தைகளோடு வரும் நாட்களில் சந்திப்போம். அதுவரை கீழ்படிதலை குறித்து கொஞ்சம் சிந்தியுங்களேன்.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum