“வாசஸ்தலம்”
Fri Sep 13, 2013 3:23 pm
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர். உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர். – யோபு 5:24
தேவன் இன்று உங்களுக்கு இரண்டு ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். ஒன்று சமாதானம், மற்றொன்று குறைவில்லாத வாழ்க்கை. இங்கே தேவன் உங்களுடைய “கூடாரம்” உங்களுடைய “வாசஸ்தலம்” என்று குறிப்பிடுகிறார். இது பூமிக்குரிய கூடாரமாகிய உங்களுடைய வீட்டைக் குறிக்கிறது. தேவன் தம்முடைய பிள்ளைகள் எப்பொழுதும் சமாதானமாய் தங்க வேண்டும் என்று விரும்புகிறார். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.(ஏசா 32:18) உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.(சங் 122:7) யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!(எண் 24:5) பிரியமானவர்களே, இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் சமாதானத்துடன் வாழவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். ஆனால் இன்றைக்கு அநேகருடைய குடும்பங்களில் சமாதானம் இல்லை. வெளியில் சென்று வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வரும் போது நிம்மதியை தேடி வருகிறார்கள். அனால் வீட்டிலும் சமாதானம் இல்லாதது கண்டு சோர்ந்து போகிறார்கள். நீங்கள் என்றைக்காவது ஏன் உங்கள் வீட்டில் பிரச்சனைகள், என் கணவன் மனைவிக்குள் சண்டைகள், ஏன் உங்கள் பிள்ளைகளினால் சமாதானம் இல்லை என்பதை சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா? தேவனை மையமாக கொண்டு உங்கள் குடும்பவாழ்க்கை இருக்குமானால் நிச்சயமாக சமாதனமுள்ள ஒரு வாழ்க்கை உங்கள் வாழ்க்கையில் இருக்கும். தேவனுடைய அன்பு உங்களில் காணப்படாமல் இருப்பதே, கணவன், மனைவிக்கும், உங்கள் வீட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கும் காரணம். நீங்கள் ஒருவேளை நன்றாக ஜெபிக்கிறவர்களாக இருக்கலாம், ஊழியத்திற்காக கொடுத்த உதவி செய்யும் குணம் இருக்கலாம், பரிசுத்தத்தை விரும்பி வாழ்கிறவர்களாக இருக்கலாம். ஆனால் தேவனுடைய அன்பு உங்களில் காணப்படாவிட்டால் நீங்கள் சிறிய காரியங்களுக்கும், தேவையற்ற காரியங்களுக்கும் கோப்படுகிறவர்களாக இருப்பிர்கள். விட்டு கொடுக்கும் குணம் காணப்படாது. எளிதில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கோபப்படுவீர்கள். உங்களுக்கு யாரும் அறிவுரை சொன்னாலும் பிடிக்காது. மற்றவர்கள் நன்மையானவைகளை சொன்னாலும், அவர்கள் சொல்லுவது நன்மைக்க என்று உங்களுக்கு தெரிந்தாலும் அதை ஏற்றக்கொள்ள மாட்டீர்கள்.
பிரியமானவர்களே, தேவனுடைய அன்பு உங்களில் காணப்படுமானால் அந்த அன்பு சகலத்தையும் தாங்கும், சகிக்கும். நிச்சயமாய் உங்கள் கூடாரத்தில் சமாதானம் இருக்கும்ஃ அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.(1கொரி 13:4-7) உங்கள் கூடாரத்தில் குறைவு காணப்படக்கூடாது என்றால் தேவன் மேல் உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.(சங் 34:10) நம்முடைய வாழ்க்கையில் நாம் விரும்பும் காரியங்கள் நிறைவேறவில்லை என்றால் உடனே நாம் சோர்ந்து போகிறோம். நம்முடைய மனம் திருப்தியில்லாததை உணருகிறோம். தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது, கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.(சங் 55:22) உங்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள் சின்னதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் தேவனிடத்திற்கு முதலில் கொண்டுவந்து ஸ்தோத்திரம் செலுத்துங்கள். அப்பொழுது நிச்சயமாய் திருப்த்தியடைவீர்கள். ஐந்து அப்பம் இரண்டு மீன்களை இயேசுவிடம் கொண்டுவந்த போது, அவர் அந்த ஜந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள் என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது. இதைபோல நீங்களும் உங்கள் காரியங்கள், ஆசீர்வாதங்கள் எதுவாக இருந்தாலும் முதலில் அதை தேவ சமுகத்திற்கு கொண்டு வந்த ஸ்தோத்திரம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு குறைவும் இருக்காது.
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. - சங்கீதம் 91:9-10

Permissions in this forum:
You cannot reply to topics in this forum