இருசக்கர வாகனப் பயன்பாட்டாளர்களே...
Thu Sep 05, 2013 10:54 pm
நாம் அனைவரும் இருசக்கர வாகனப் பயன்பாட்டாளர்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் நாம் வாகன எரிபொருள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதால் பெட்ரோல் செலவை 15% முதல் 25% குறைக்கலாம். எரிபொருள் நுகர்வு 3% குறைந்தாலே 16000 கோடி சேமிப்பாகும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார். இந்நடைமுறைகள் யாவும் பல்லாண்டுகளாக எனக்குப் பயன் தந்தவை. உங்களுக்கும் உதவக்கூடும். உங்கள் வழியாக நாட்டுக்கும் பயனபடட்டும்.
1. புதிய வண்டி என்றால் முதல் 1500 கிலோமீட்டர்களை 40கிமீ வேகத்திற்குள் ஓட்டுங்கள். பிறகு எப்பொழுதும் 35 முதல் 55 கிமீ வேகத்திற்குள்ளாக மட்டுமே ஓட்ட வேண்டும்.
2. பழைய வண்டி என்றால் உடனடியாகத் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கழுவி, கிரீஸ் போன்ற உயவுப்பொருள்களைச் சக்கரச் சங்கிலிகளுக்குப் பூசுங்கள். அது தொய்வில்லாமல் உரிய அழுத்தத்தில் இருமுனைகளிலும் பொருந்தியிருக்கட்டும்.
3. ஏர்பில்டர் எனப்படும் காற்றுச் சல்லடையை உடனே மாற்றுங்கள். காற்றை உறிஞ்சி எரிகலவை செய்ய அனுப்பித் தருவது அதன் வேலை. அது தூசுபடிந்து இருந்தால் எரிகலவையில் பெட்ரோல் அதிகரித்து தேவையில்லாமல் வீணாகும். ஏர்பில்டரின் விலை மிகவும் குறைவுதான் (எண்பது ரூபாய்க்குள் இருக்கும்).
4. சக்கரங்களின் காற்றழுத்தத்தைத் தினமும் சோதித்தபின் வண்டியை எடுங்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவே காற்றழுத்தம் இருக்கட்டும். முன் சக்கரத்திற்கு 28ம் பின்சக்கரத்திற்கு 38ம் இருக்கலாம். காற்றளவு சரியாக இருந்தாலே வண்டி இலகுவாகப் பாயும். நம்மூர்ச் சாலைகள் வழுவழுப்பானவை அல்ல என்பதால் காற்றழுத்த மிகை எந்த ஆபத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை (ஈரச்சாலைகளில் மட்டும் தவிர்க்க வேண்டும்).
5. நீங்கள் வழக்கமாகப் பயணம் செய்யும் சாலைகளைக் கவனித்து வைத்திருங்கள். மேடுகளில் முடுக்கியை முறுக்கி வண்டியைச் செலுத்தியபின், அடுத்து வரும் இறக்கத்தில் வண்டியை முறுக்காமல் ‘பள்ளத்தை நோக்கிப் பாயும் வேகத்தைப்’ பயன்படுத்திச் செல்லுங்கள். இதை நெடுஞ்சாலைகளில் செய்தால் பலன் பிரமாதமாக இருக்கும். சாலைகளின் இயல்பு என்பது ஒரு மேடு, அடுத்தொரு சரிவு, சரிவின் முடிவில் ஒரு பாலம், மீண்டும் மேடு என்பதுதான்.
6. அதிகாலை நேரங்களில் பெட்ரோல் நிரப்புங்கள். அப்போதுதான் சாவடியின் கொள்கலனில் வெப்பத்தால் விரிவடையாத பெட்ரோல் இருக்கும். அது ஒப்பீட்டளவில் சற்றே அடர்த்தி மிகுந்தது.
7. நீங்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என்றால் நூறு மீட்டர்களுக்கு முன்னேயே வண்டியின் இயக்கத்தை சொஸ்தப்படுத்துங்கள். வரவேண்டிய இடம் வந்து சேரும்வரை முறுக்கிக்கொண்டு வந்து அழுத்தி நிறுத்தாதீர்கள்.
8. இருசக்கர வாகனத்தில் சட்டப்படி இருவர் செல்லலாம் என்றாலும் அது ஒருவர் மட்டுமே செல்வதற்குத்தான் உகந்தது. இருவர் என்றால் அதன் செயல்திறன் கடுமையாகவே பாதிக்கும். முடிந்தவரை தனியொருவராகவே பயணிக்கவும்.
9. பெட்ரோல் போடும்போது, வழியில் ஒருவரோடு நின்று பேசும்போது, சாலை சமிக்ஞை விளக்குக்காகக் காத்திருக்கும்போது இஞ்சினை அணைத்துவிடுங்கள்.
10. வண்டியை உரிய கால இடைவெளியில் பழுது நீக்குங்கள். பழுது நீக்குபவர் நம்பிக்கைக்குரியவராக, நீங்கள் கோரும் பணிகளைச் செய்து தரத் தயங்காதவராக இருக்கட்டும்.
மேற்சொன்ன எதுவுமே பொருட்செலவு மிகுந்த செயல்கள் அல்ல. நம் அக்கறை சார்ந்த செயல்களே. இவற்றைப் பின்பற்றிப் பாருங்கள். வண்டியின் எரிபொருள் செலவில் நல்ல சேமிப்பைக் காண்பீர்கள். வண்டியின் மைலேஜ் 25% வரை அதிகரிக்கும். நண்பர்களுக்கும் இம்முறைகளை அறிவுறுத்துங்கள் !
-கவிஞர் மகுடேசுவரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum