ஒளியினிடத்திற்கு...
Mon Jan 28, 2013 11:32 am
வாசிக்க | எபே 1 : 15-23
ஆதரவற்ற சிறுவன் ஒருவனின் திறமையை பாராட்டி வங்கியொன்று 'ஒரு கோடி' ரூபாய்
பரிசினை வழங்கியது. சிறுவன் என்பதால் பரிசுடன் ஒரு நிபந்தனையும்
விதிக்கப்பட்டது. அவனுக்கு 21 வயதாகும் போது தான் அந்த பரிசினை அவனால்
பெற்றுக் கொள்ள முடியும் என்பதே அந்த நிபந்தனை.
சிறுவனும் கல்வியில் தேர்ச்சி பெற்று 18 வயது நிரம்பிய இளைஞனானான். தனது
நாட்டின் மீது கொண்ட பற்றால் இராணுவத்தில் சேர்ந்து , இரண்டாம் உலகப்
போரில் பங்கு பெற்றான்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த போரில் அவனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனால் நினைவுத் திறனை இழந்து போனான்.
ஆகவே! இராணுவத்திலிருந்து அவன் வெளியேற்றப்பட்டான். தான் யார் எனபதே
அவனுக்கு தெரியாததால் மிகவும் வறுமையான வாழ்க்கையை நடத்தும் அவலத்திற்கு
ஆளானான். சாப்பாட்டிற்கு வழியின்றி மனிதர்களை சுமக்கும் ரிக்ஷா தொழிலை
செய்ய ஆரம்பித்தான்.
ஏறத்தாழ 10 ஆண்டுகள் கடந்து சென்றது. ஒரு
நாள் காலையில் சவாரிக்காக அழைந்து திரிந்து கொண்டிருக்கும் போது ஒரு
முதியவர் அவனை கண்டி அவனருகில் ஓடி வந்தார். அவனுக்கு அவரை அடையாளம்
தெரியவில்லை.
தன்னை அவனது ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக்
கொண்ட முதியவர், அவனது கடந்த காலத்தை எடுத்துரைத்தார். அவனது நினைவுகள்
எல்லாம் திரும்பியது.
அவசரமாக அந்த வங்கிக்கு அவனை அழைத்து சென்று, பரிசு பொருளையும் வாங்கி தந்து, அவனது வாழ்வில் ஒளி ஏற்றினார்.
----------------------------------------------------------------------
நினைக்க | இதுபோலவே 'இருளிலிருந்த' நம்மை அவரது ஆச்சரியமான ஒளியினடதுக்கு வரவழைக்கு நம்மை தேடி வந்த அன்பை நினைத்துப் பாருங்கள்.
-----------------------------------------------------------------------
சோதிக்க | நமது பிந்தைய நிலைமையையும், தேவன் நமது வாழ்வில் தந்த
இரட்சிப்பெனும் பரிசையும் அனுதினமும் போற்றுகிறோமா என்று சோதித்துப்
பாருங்கள்.
கதையில் வந்த இளைஞனை போலவே தங்கள் 'மன கண்கள்'
குருடானதால் இருளில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த நற்செதியை
பகிர்ந்திடுங்கள்.
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum