கருத்துள்ள தொழுகை
Mon Jan 28, 2013 5:23 am
ஆதி
12:8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே
இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும்
இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,
கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
ஆராதனை (அ) தொழுகை தேவன்
நமக்கு தந்ததில் சிறந்ததை அவருக்கு தந்துவிடுவது. அவர் உங்களுக்கு
தந்திருக்கும் எதையும் கண்ணியமான முறையில் அவருக்கே பயன்படுத்துங்கள்.
பயன்படுத்தாது சேமித்து வைக்கப்படும் ஆசீர்வாதம், மீதியாய் வைக்கப்பட்ட
மன்னா பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது போல் மாறிடும். (யாத் 16:20)
தேவன் தரும் ஆவிக்குரிய அனுபவங்களும், ஆசீர்வாதங்களும் சுயநலவாதிகளுக்கு அல்ல.
மேலுள்ள வசனத்தில், பெத்தேல் எனபது தேவனோடுள்ள ஐக்கியம்.
ஆயி- உலகத்திற்கு அடையாளம்.
ஆபிராம் "இவ்விரண்டிற்கும் இடையில்" கூடாராம் போட்டான். தேவனோடு ஒருவன்
கொண்டுள்ள ஐக்கியத்தில் அளவை பொறுத்தே தேவனுக்காக அவன் செய்யும் பணியும்
அமையப்பெரும்.
தேவ ராஜ்யத்தில் ,
"அவசர தொழுகைகாரன்;
அரிதாக பயன்படுபவன் . "
"காத்திருந்து தொழுபவன்;
சரித்திரம் படைக்கும் வேலைக்காரன். "
அரிதாக பயன்படுபவன் . "
"காத்திருந்து தொழுபவன்;
சரித்திரம் படைக்கும் வேலைக்காரன். "
ஆகவே உங்கள் கூடாரத்தை தேவ சமூகத்தை நோக்கி, உலகிற்கு வெளியே அமைத்திடுங்கள்.
தேவ-தொழுகை, (பெத்தேல்),
காத்திருத்தல் (கூடாரம்),
தேவ பணி (ஆயி)
என இம்மூன்றையும் வரிசைபடுத்தி, ஒருங்கே செய்திடுங்கள்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum