மேத்தி வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா
Wed Aug 28, 2013 8:47 am
தேவையானவை:
ஓட்ஸ்.......................................2 டம்ளர்
பெல்லாரி.................................2
பச்சை மிளகாய்......................3
இஞ்சி..........................................சின்ன துண்டு
காரட்.........................................1
பீன்ஸ்........................................8
பச்சை பட்டாணி.....................கைப்பிடி
தக்காளி.....................................1
முட்டை கோஸ்....................கைப்பிடி
காளான்...................................5
எந்தக் காயானாலும்...............கொஞ்சம்
வெந்தயக் கீரை..................... கைப்பிடி
எண்ணெய்...............................4 தேக்கரண்டி
கடுகு, சீரகம்.உ.பருப்பு............1 தேக்கரண்டி
உப்பு...........................................தேவையான அளவு
தண்ணீர்....................................2 டம்ளர்.
செய்முறை:
பெல்லாரியை நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும். ப.மிளகாயை கீறி வைக்கவும். இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். எல்லாக் காய்களையும் 1 /4 சைசில் வெட்டவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் நறுக்கிய காய்களை (கீரை வெங்காயம் தவிர) போட்டு கொஞ்சம் உப்பு + தேக்கரண்டி நீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு சத்தம் வந்ததும் இறக்கி, அதிலுள்ள ஆவியை உடனே வெளியேற்றவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் ஓட்ஸைப் போட்டு எண்ணெய் விடாமல் லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அதனை தனியே வைக்கவும். மீண்டும் அடுப்பில் பெரிய கடாய்/பெரிய குக்கர் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம்_உ.பருப்பு போட்டு சிவந்ததும், நறுக்கிய வெங்காயம் + ப.மிளகாய் + இஞ்சி போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வெந்த காய்கள்+ கீரை +உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் 2 டம்ளர் நீர் ஊற்றி கொதித்ததும், அதில் வறுத்த ஓட்ஸைப் போட்டு கிளறவும். பின் தீயைக் குறைத்து அடுப்பில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
சுவையான ஓட்ஸ் வெஜிடபிள்,மேத்தி உப்புமா ரெடி. இதற்கு தக்காளி சட்னி படு சூப்பராக இருக்கும்.
இந்த ஓட்ஸ் உப்புமாவில் ஏராளமான சத்துப்பொருட்கள் உள்ளன. எனவே. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.
நன்றி: ஆரோக்கிய வாழ்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum