ஹட்சன் டெய்லர்
Tue Aug 27, 2013 9:49 pm
சிறுவனான ஹட்சன்
இங்கிலாந்தில் 1832 ம் ஆண்டு 21ம் நாள் ஹட்சன் டெய்லர் பிறந்தார். தனது 14 வயது வரை வீட்டிலேயே கல்வி கற்றார். ஆவிக்குரிய குடும்பத்தில் வளர்க்கப்பட்டார். எல்லாம் முடிந்தது என்ற தலைப்பில் உள்ள ஒரு கைபிரதியை வாசித்து பாவ உணர்வடைந்து இயேசுவுக்காய் வாழ ஒப்புக்கொடுத்தார். அதன்பிறகு ஊழியத்தில் ஆர்வமிக்கவரான ஹட்சன் தேவன் தன்னை எந்த இடத்தில் ஊழியம் செய்ய அழைக்கிறார் என்று அறிய நீண்ட நேரம் ஜெபம் செய்தார். அப்போது அவருக்கு சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல வேண்டும் என்று தேவன் பேசுவதை உணர்ந்தார்.

மிஷனெரியாக ஆயத்தம்
ஹட்சன் டெய்லர் சீன நாட்டில் மிஷனெரி பயணம் செய்ய தன்னை எல்லாவிதத்திலும் தகுதிப்படுத்திக்கொண்டார். பாருடைய உதவியுமில்லாமல் சீன மொழியை கற்றார். 19வது வயதில் இலண்டன் சென்று மருத்துவ கல்லூரியில் படித்தார். எல்லா வேலைகளையும் தனியா செய்து பழகினார். எளிமையான உணவை உண்டார். இதன் மூலம் தன்னை ஒரு நல்ல சேவைக்காக ஆயத்தப்படுத்திக்கொண்டார்.
சீன பயணம்
1853ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹட்சன் சீனாவிற்கு பிரயாணத்தை துவக்கினார். சீனாவில் இறங்கியவுடன் சீன மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு கைபிரதிகளை கொடுத்தார். உள்நாட்டு சீன மக்கயை ஆதாயப்படுத்த அவர்களுடைய உடையில் அவர்களை போன்றே வாழ்க்கை முறையை மேற்கொண்டார். இவ்வாறு ஹட்சன் உழைத்ததால் சில மாதங்களில் முதல் ஆத்துமாவை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்தினார்.
சீனாவில் ஹட்சன் டெய்வர்.
முதலில் டசுங்கிங் என்றஇடத்தில் ஒரு மருத்துவமனையை நிறுவினார். அதன் மூலம் ஆயிரக்கணக்கான பேரை கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்த முடிந்தது. பின்னர் நிங்போ என்றஇடத்தில் மருத்துவமனையை நிறுவினார். இந்த இடத்தில் அவருக்கு ஒரு நோய் தாக்கியதால் இலண்டன் கொண்டு செல்லப்பட்டார். குணமடைந்த பின் தன்னுடைய சீன ஊழியத்தை குறித்து சொல்லி தன்னோடு 16 மிஷனெரிகளை கூட்டிக்கொண்டு மீண்டும் சீனா வந்தார். 20 ஆண்டுகள் கடுமையான ஊழியத்திற்கு பின் 59 ஆலயங்களை கட்டினார். 1700 ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தினார்.
முடிவுரை
ஹட்சன் டெய்லர் முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தினிமித்தம் இங்கிலாந்து சென்றார். அங்கு நீண்ட நாட்கள் தங்கியிருக்க மனமில்லாமல் 1905ம் ஆண்டு மீண்டும் சீனா வந்தார். வந்து இறங்கியவுடன் மரித்தார். அவர் மரிக்கும் போது 849 மிஷனெரிகள் சீனாவில் பணியாற்றினார்கள்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum