வெளிநாடுகளுக்கு சென்று இலவச கல்வி பற்றிய விபரம்
Fri Aug 23, 2013 7:19 am
வெளிநாடுகளுக்கு சென்று இலவச கல்வி கற்க வேண்டும் என்றால் 12 மாதங்களுக்கு முன்பாக திட்டமிட வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு உயர்கல்வி படிக்க அமெரிக்காவிற்கு செல்வது அதிகம். அவர்களில் 90 சதவீதம் பேருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. தற்போது ஸ்காலர்ஷிப் இல்லாமல் 90 சதவீதம் பேர் செல்கின்றனர்.
ஆண்டுக்கு இரண்டு லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்கு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதில் ஐம்பது சதவீதம் பேர் அமெரிக்கா செல்கின்றனர். மற்றவர்கள் பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா செல்கின்றனர். அமெரிக்காவில் 4 ஆயிரம், ஜப்பானில் 3, 700 பல்கலைகழகங்கள் உள்ளன. இந்தியாவில் 400 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன.
அமெரிக்காவிலுள்ள டாக்டர்களில் 40 சதவீதம் பேர், நாசா விஞ்ஞானிகளில் 40 சதவீதம் பேர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 30 சதவீதம் பேர் இந்தியர். இது எப்படி சாத்தியமாக முடிந்தது? உலகளவில் அங்கீகாரம் பெற விரும்பினால் வெளிநாட்டு கல்வி அதற்கு உதவியாக இருக்கும். இளநிலை படிக்க செல்வோர் எண்ணிக்கை குறைவு. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்காக அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு பெண்கள் வெளிநாடு செல்வது அரிது. இன்று பெண்களையும் வெளிநாடு சென்று படிக்க வைக்க பெற்றோர் முன்வந்துள்ளனர். வெளிநாடுகளில் படிப்பதன் மூலம் அந்த நாட்டு கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள முடியும். சிந்தனை திறன் அதிகரிக்கும். பல தரப்பினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். ஏராளமானவற்றை கற்று கொள்ளும் வாய்ப்புள்ளது.
பொதுவாக இன்ஜினியரிங், மருத்துவம் படிக்க வெளிநாடுகளுக்கு செல்வது அதிகம். அமெரிக்காவில் மருத்துவம் படிக்க ரூ.1.5 கோடி செலவாகும். அதனை வேலை செய்து திரும்ப பெற்று விடலாம். தற்போது நானோ தொழில்நுட்பம், மீடியா ஸ்டடீஸ், பிலிம் ஸ்டடீஸ், பேஷன் டிசைனிங் போன்ற படிப்புகளையும் படிக்க வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
ஏரோநாட்டிக்கல் இந்தியாவை காட்டிலும் மற்ற நாடுகளில் குறைவான கட்டணத்தில் கற்றுகொடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 20 மாணவர்களுக்கு 4 ஏர்கிராப்ட்டுகள் இருக்கும். இந்தியாவில் 100 பேருக்கு 3 ஏர்கிராப்ட் மட்டுமே உள்ள நிலையிருக்கிறது. வெளிநாடுகளில் கல்வி பயில நுழைவுத் தேர்வு, ஆங்கில மொழிதிறன் தேர்வு எழுத வேண்டும்.
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum