20 ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்கள்
Thu Aug 22, 2013 3:29 pm
புகைப்படங்களின் சிறப்புகளையும் , புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் உலக புகைப்பட நாள் இன்று .
உலகின் வரலாற்றையே மாற்றிய பங்கு பல புகைப்படங்களுக்கு உண்டு. 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்கள் இவை.
படம் 1 : சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த படம் .அந்த குழந்தை இறந்தவுடன் அதனை உண்ண காத்திருக்கும் பறவை என எடுக்கப்பட்ட புகைப்படம் உலகையே உலுக்கியது. இந்த படத்தை எடுத்த Kevin Carter மன அழுத்தத்தால் மூன்று மாதத்தில் தற்கொலை செய்துகொண்டார் .
படம் 2 : வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின்(Phan Thị Kim Phúc) புகைப்படம் . வியட்நாம் போரின் போது பாதிக்கபட்ட சிறுமியின் உடை எரிந்த பின் அவர் ஆடையின்றி ஓடிவரும் காட்சி Nick Ut என்பவரால் எடுக்கப்பட்டது. அமெரிக்க பத்திரிகைகளிலேயே வெளிவந்த புகைப்படம் இது .
படம் 3 : சீனர்களின் பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன்(Tank Man) என்பவரின் புகைப்படம் . சீன அரசுக்கு எதிராக நிகழ்ந்த தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் போராட்டத்தில் போராட்டக்காரர்களை ஒடுக்க வந்த சீனப் பீரங்கியை தனியொருவராக நின்று வழி மறித்தார். இந்த புகைப்படம் அடுத்த நாள் சீன பத்திரிகைகளின் வந்தது.
Via தேடல்Ewow
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|