கணனியும் கிறிஸ்தவமும் ஒரு ஒப்பீடு
Tue Aug 20, 2013 9:00 pm
தற்பொழுது கணனி இன்றியமையாத பொருள்
அதனுடன் கிருஸ்தவர் எப்படி பொருந்துகின்றனர்
உள்ளே.......
அதனுடன் கிருஸ்தவர் எப்படி பொருந்துகின்றனர்
உள்ளே.......
கணனியின் பாகங்கள் கிருஸ்தவம்
- பவர் சப்ளை (smps) பிதா
- பிராசசர் இயேசு
- மதர்போர்டு பரிசுத்தாவி
- ராம் சபை
- ஹார்டிஸ்க் மனிதன்
- கீபோட் சுவிஷேசம்
- மவுஸ் வேதாகமம்
- சிடி பிளாபி டிரைவ் சுவிஷேசம் இரட்சிப்பு ஆராதனை
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆத்துமா
- சாப்டுவேர் பிரசங்கங்கள்
- வைரஸ் சாத்தான்
- பிரின்டர் ஆவியின் கனிகள்
- ஸ்கேனர் இயேசுவை பிரதிபளிப்பது
- மானிட்டர் சமூகம்ஸ்பீக்கர் ஊழியம்
கணனி எப்படி இயங்குகின்றதோ அதேபோன்று தான் கிருஸ்தவமும் இயங்குகிறது
கணனிக்கு மிகமிக அவசியமான ஒன்று(SMPS) பவர் சப்ளை இது இல்லாவிட்டால் கணனி இயங்கவே முடியாது அவ்வாறாக இருப்பவர் பிதா
பிராசசர் இது கணனியின் அனைத்துபகுதியையும் கட்டுபடுத்தும் மிகவும் முக்கிய பகுதி, அனைத்தையும் இயக்குவது இதுதான் இப்படியாக இருப்பவர் இயேசு
மதர்போர்டு அனைத்து செயல்பாடுகளும் இதன் மூலமாக தான் நடத்தப்படுகிறது அல்லது பரிமாற்றம் செய்யபப்படுகிறது இதுவும் அவசியமான ஒன்று இப்படியாக செயல்படுபவர் பரிசுத்தாவி
ராம் இது தேவைக்கு எற்ப மாறி இருக்கும் 128, 512 தற்பெழுது இன்னும் அதிகமாக உள்ளது இது கணனியின் தற்காலிக நினைவகம் காபி பெஸ்ட் செய்யபடுவது இதன் மூலமாகதான் இப்படி இருப்பது சபைகள்
கணனியில் மிகவும் முக்கிய பகுதி ஹார்டிஸ்க் இதில்தான் நாம் அனைவரும் தகவல்களை சேமித்து வைக்கிறோம்மனிதனும் அந்த நிலையில்தான் செயல்படுகிறான்
கீபோர்ட் மூலமாக அனைத்து தகவலும் தட்டச்சு செய்யப்படுகிறது அது போன்று மனிதனுக்கு சுவிஷேசம் மூலம் இரட்சிப்பின் தகவல் உள்செல்கிறது
மவுஸ் என்பது கம்பியூட்டரில் சுட்டுவதற்காக பயன்படுத்தபடுகிறது அது போன்று மனிதனின் அவல நிலைகளை சுட்டிகாட்டுகிறது வேதாகமம்
சிடி பிளாபி டிரைவ் இவை கம்பியூட்டரில் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தபடுகிறது இது போன்று சுவிசேசம் இரட்சிப்பு ஆராதனை விசுவாசம்... இவை மனிதனுக்கு ஆத்தும வளர்ச்சிபரிமாற்றத்தை தருகிறது
ஆப்பரேட்டிங் சிஸ்டம் வின்டோஸ் 3.1 தொடங்கி 95 98 ME 2000 XP தற்பொழுது வின்டோஸ் வெஸ்ரா வரை வந்துள்ளது இது தவிர லினக்ஸ் மாக்.. போன்றவைகளும் உள்ளது இதன் மூலமாக தான் கம்பியூட்டரை பயன்படுத்த முடியும் இது மனிதனின் ஆத்துமா மற்றும் ஆத்தும வளர்ச்சியை குறிக்கும்
சாப்டுவேர் நம் தேவைக்கு ஏற்ப உபயோகபடுத்தபடும் மென்பெருட்கள் இவை நமது தகவல்களை மெருகூட்டகூடியது இவ்வாறு நம் ஆத்தும வளர்ச்சிக்கு தேவைக்கு ஏற்ப பிரசங்கங்கள் நமக்கு அளிக்கபடுகிறது
வைரஸ் இது நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து தகவலையும் அழிக்கும் சில வைரஸ் ஹார்டிஸ்கை தாக்கி முற்றிலும் தகவல் இல்லாதவாறு செய்து விடும் அதனால் ஆண்டிவைரஸ் பயன்படுத்த வேண்டும் அதுவும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேன்டும் இதே போன்று தான் சாத்தான் நம்மை முற்றிலும் அழித்துவிடா வன்னம் காக்க ஜெபம் என்னும் ஆன்டிவைரஸ்சை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்
பிரின்டர் நமது தகவல்களை அப்படியே வெளிபடுத்தி காட்டகூடியவை இதை போன்று நமது வாழ்வில் உள்ளஆவியின் கனிகள் பிறருக்கு வெளிபடுத்தபடவேண்டும்
ஸ்கேனர் நாம் கொடுக்கும் தகவல்களை அதாவது புகைபடம் அல்லது கடிதங்கள் அப்படியே எடுத்து காட்டுவது அல்லது பிரதிபளிப்பது இவ்வாறு நாமும் இயேசுவின் அன்பை, குணங்களை பிரதிபளிக்க வேண்டும்
மானிட்டர் (cpu)கம்பியூட்டரில் நடைபெறும் அனைத்தையும் நமது கண்களுக்கு பிரதிபளிக்க கூடியது இவ்வாறு நாம் கிருஸ்துவுடன் வாழும் வாழ்க்கையை சமூகத்தின் மூலம் பிரதிபளிக்கபடும்
ஸ்பீக்கர் நாம் வைத்துள்ள (mp3 or more..)தகவல்களை ஒலியின் முலம் வெளிபடுத்தும் இவ்வாறு நாமும் நாம் பெற்ற இன்பம் இயேசுவை பெருக இவ்வையகம் என்று ஊழியம்செய்து வெளிபடுத்த வேன்டும்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum