தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
நீங்க என்ன ஜாதி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

நீங்க என்ன ஜாதி? Empty நீங்க என்ன ஜாதி?

Tue Aug 20, 2013 12:23 pm
உங்களைப் பார்த்து யாராவது நீங்க என்ன ஜாதி? என்று கேட்டால் உங்கள் ரெஸ்பான்ஸ் என்னவாக இருக்கும்? உடனே முறைத்துப் பார்ப்பீர்கள்தானே! 

உங்க பகுதியில் எப்படியோ எனக்கு தெரியாது. ஜாதிச் சண்டைகளுகு பெயர்போன தென் தமிழகத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயமாக யாராவது உங்களைப் பார்த்து இக்க்கேள்வியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருப்பார். 

நானும் ஒரு தென் தமிழக கிறிஸ்தவன் என்பதால்தான் இந்தக் கட்டுரை……….

இதை எழுதுவது என் கடமை

வாசிப்பது உங்கள் பொறுமை. 

விசயத்தை தெரிந்து கொள்ள உடனே உள்ள வாங்க

நீங்கள் தென் தமிழகத்தில் உள்ள ஒரு காரியத்தை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, நல்ல ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்பதுதான் எனது முழு அவா. 

ஆகவே தயவு செய்து பொறுமையுடன் இரசித்து ருசித்து வாசிக்கும்படியாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

எங்க ஊர்ப்பக்கங்களில் ஒருவரை முதலில் சந்திக்கும் போது பெரும்பாலும் எல்லாரும் அறிந்து கொள்ளவிரும்புகிற காரியம் அவர் என்ன ஜாதி என்பதாகத்தான் இருக்கும். 

ஒருவேளை அவர்கள் வாயை திறந்து நேரடியாக கேட்காவிடினும் உள்மனதில் அதுதான் ஓடிக்கொண்டு இருக்கும். 

ஆகவே முதலில் பெயரைக் கேட்பார்கள். கேட்டபின்பு நைசாக ஊர்பெயரைக் கேட்பார்கள். அதிலேயே ஓரளவுக்கு என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். 

மேலும் சந்தேகம் இருக்குமெனில் அந்த ஊரில் நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். 

இப்படியாக எங்க மக்கள் ஜாதியைக் கண்டுபிடிப்பதில் பயங்கரமான புத்திசாலிகள். இன்னும் சில கரை கண்டவர்கள் இருக்கிறார்கள். 

அவர்கள் ஒருவரைப் பார்த்து அவரைன் பார்வை மற்றும் தோற்றத்தைவைத்தே அவர் என்ன ஜாதி என்பதை கணித்துவிடுவார்கள். 

இங்கேபோய் இதைச் சொல்வதற்கு என்ன அவசரம் வந்தது என்று நீங்கள் நினைக்கலாம். ...........இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வட தமிழகத்தில் சாதியை மையமாக வைத்து பாரம்பரிய கிறிஸ்தவ சபை ஒன்றில் நடந்த நிகழ்ச்சியினால் வேதனைப்பட்டவர்களில் நானுமொருவன். 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல கிறிஸ்துவுக்குள் இருப்பதுதான் முக்கியம், ஒருவர் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் என்ன சபையிலிருந்தாலும் நாமெல்லாரும் ஒரே சரீரமே என்பதை நான் முழுமையாக நம்புபவன். 

இதற்கு சபைப் பிரிவுகள் தடையாக இருக்கமுடியாது. ஆனால் ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருக்கும் படசத்தைல் பல காரியங்களை சபைப் பாரம்பரியங்கள் மற்றும் உலகப் பாரம்பரியங்களின் படி செய்ய முடியாதல்லவா? ஆம். 

எங்கள் ஊரில் உள்ள ஒரு பழக்கத்தை நான் முன்பு சொன்னேன். இப்போது ஆவிக்குரிய வட்டாரத்தில் காணும் மற்றொரு காரியத்தையும் கூறுகிறேன். 

முன்பு ஆவிக்குரிய சபைகளுக்கு செல்வதையே மற்ற கிறிஸ்தவர்கள் கூட வெறுத்தனர். ஒருவன் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்றால் அவனை மிகவும் கீழ்த்தரமானவனாக நினைப்பது ஒரு காலத்தில் இருந்தது. 

இன்றும் கூட சில இடங்களில் உள்ளது. ஆனால் இன்று ஆவிகுரிய சபைகளுக்கு செல்வது கிட்டதட்ட ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. 

எதுவும் சீர்கெட்டும்போது எல்லாமே தலைகீழாக மாறிவிடுமல்லவா. அதேபோலத்தான் இன்று ஆவிகுரிய சபைகளிலும் சாதி என்ற பேச்சு எழும்பி விட்டது. 

முன்பு பாரம்பரிய சபைகள் மட்டுமே சாதியின் அடிப்படையில் இருந்துவந்தன. இன்று ஆவிக்குரிய சபைக்கு செல்லும் ஒருவரை அவர் செல்லும் சபையைவைத்தே அவர் என்ன ஜாதி என்று கூறுமளவுக்கு நிலைமை மலிந்துவிட்டது. 

அதாவது பாஸ்டர் என்ன ஜாதி என்று பார்த்து செல்லுமளவுக்கு நிலைமை என்ன செய்ய? இதைக் குறிது எழுதுவதற்கே எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ஆனால் உண்மை எழுதுவது நன்மைக்கே! 

இதை எழுதுவதற்கு எனக்கு ஒன்றும் பெரிதாக தகுதியில்லை. 

ஏனெனில் நானும் ஒருகாலத்தில் குட்டையில் ஊறின மட்டையாக எங்க ஊர் மக்களில் ஒருவனாகவே இருந்துவந்தேன் என்பதை வெட்கத்துடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனால் வசனத்தின் வெளிச்சம் எனக்கு உண்டானபோதுதான் ஜாதியைக் குறீத்து ஒரு சரியான உணர்வு வந்து சாதியுணர்வு நீங்கிற்று. 

வேதம் ஜாதி குறித்து என்ன சொல்கிறது?

வேதாகமத்தில் பலவிதமான ஜாதிகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உண்மைதான். ஆனால் நாம் ஒருவிசயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். 

வேதாகம காலத்தில் ஒரு நாட்டு மக்களைக் குறிக்கும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பவர்களையே அவாறு குறிப்பிட்டனர். 

இன்று உள்ளதுபோலல்ல. ஆகவே யாராவது வேதாகமத்திலேயே ஆண்டவர் பல ஜாதிகளைக் குறீத்து எழுதிவைத்துள்ளார் அல்லவா? என்று யாராவது சொன்னால் உடனே நம்பிவிடாதீர்கள். 

இன்னும் சில ஜாதிப் பிரசங்கியார்கள் இப்படியாக சொல்வார்கள்," பாருங்க ஆபிரகாமே என்ன செய்தான்? தன் சொந்த இனத்தாரிடம் தன் மகனுக்கு பெண்கொள்ளும்படி எலயேசரை அனுப்பவில்லையா? 

ஆகவே ஜாக்கிரதையாயிருங்கள். அதுவும் திருமண காரியத்தில் ரொம்ப ஜாக்கிரதை என்பார்கள். உடனே ஏமாந்துவிடாதீர்கள். 

ஏனெனில் ஆபிரகாம் வாழ்ந்துவந்த பகுதி மக்கள் சபிக்கப்பட்டவர்கள் மாத்திரமல்ல கொடிய விக்கிரகவணக்க்த்தாராகவும் இருந்துவந்தனர். 

ஆகவே தான் ஆபிரகாம் தனக்கு நன்றாக தெரிந்த தன் குடும்பத்தினரிடம் தன் ஊழியக்காரனை அனுப்பினான். 

இன்று ஊழியக்காரர்களே ஜாதி பார்ப்பது மட்டுமல்லாது ஜாதியக்குறித்து முழக்கமான பிரசங்கங்கள் வேறு. கர்த்தாவே! எங்க மக்களை இரட்சியும்.

புதிய ஏற்பாடு ஜாதி குறித்து என்ன சொல்கிறது?

இயேசு ஜாதி பார்த்தாரா? அவர் ஜாதி பார்த்திருந்தால் நமக்கு அதாவது வேதாகமத்தின்படி புறஜாதிகளுக்கு எப்படி இரட்சிப்பு கிடைத்திருக்கும். 

தேவனின் பார்வையில் எல்லா மனிதரும் ஒரே ஜாதியே அது மனித ஜாதி. தேவன் நேசிப்பது மனிதனையே, அவன் எந்த ஜாதி என்று அவர் பார்ப்பதில்லை.

புதிதாக திருமணம் முடித்த ஒருவனிடம் தெற்கத்திப் பயல் ஒருவன் அண்ணே உங்க மனைவி என்ன ஜாதி என்று கேட்டான்? 

அதற்கு பதிலளித்த அந்த புதுமாப்பிள்ளை அடேய் அவள் பென் ஜாதி நான் ஆண் ஜாதி ஆகவே இப்போ அவள் என் பொஞ்சாதி ஆகவே உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ என்று பதிலளித்தானாம். 

அப்போஸ்தல கால சபையில் ஜாதியை( நாம் பார்க்கிற ஜாதி அல்ல, வேறு நாட்டு மக்கள்) மையமாக வைத்து பிரச்சனை வந்ததா? ஆம். வந்தது. 

வேதாகமத்தில் அதை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் 6ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனால் அதில் அப்போஸ்தலர்கள் தலையிடவில்லை, அதை விரும்பக் கூட செய்யவில்லை. 

அவர்களின் பதில் இன்று மட்டுமல்ல என்றுமே ஒவ்வொரு ஊழியனும் பின்பற்றவேண்டிய காரியமும் ஆகும் (அப்.6:2- 4).

மிகவும் இன வைராக்கியம் மிகுந்தவர்களும் மற்ற மக்களுடன் கலப்பதை தீட்டாக கருதின யூதமக்களுக்கு யூதரல்லாதவருடன் பேசுவது என்பதே மிகவும் கீழ்த்தரமானது ஆகும். 

அப்படிப்பட்ட யூதகுலத்தில் பிறந்து வளந்த பேதுருவுக்கு தேவன் காண்பித்த தரிசனம் என்ன்? 

இன்று அடிக்கடி தரிசனம் காண்பவர்கள் அதயே மேடைக்கு மேடை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தவறாது பேசுபவர்கள் இதை சற்று வாசித்து சிந்திக்கவேண்டும் (அப்.10). 

நாம் யாராக இருந்தாலும் யூதனானாலும் கிரேக்கனானாலும் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவனே. ஆகவே யாவரும் ஒன்றே. 

இன்னும் சொல்லப் போனால் யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை புது சிருஷ்டியே காரியம் என்று வேதம் கூறவில்லையா? 

இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள 1கொரிந்தியர் 12ம் அதிகாரத்தில் வரங்களைக் குறித்து சொல்கிற தேவன் அதைத் தொடர்ந்து உடனே கூறுகிற காரியமும் இதுதான். 

சற்று நிதானமாக உங்கள் வேதாகமத்தை எடுத்து அந்த அதிகாரத்தை வாசித்து தியானியுங்கள். மிகவும் பிரயஜனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நாமெல்லாரும் ஒரே ஜாதி என்றால் என்ன ஜாதி?

நாமெல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரம் என்பதினால் நமக்குள்ளே எவ்வித பிரிவினைகளும் இருக்கக் கூடாது. இருக்காது. 

நாமெல்லாரும் வசனத்தின்படி விசுவாசத்தினால் ஆபிரகாமின் சந்த்ததியினராகவும் இருக்கிறோம். 

நாம் இஸ்ரவேலர்கள். தயவு செய்து தவறாக நினைத்துவிடாதீர்கள். உள்ளத்தில் யூதனானவே யூதன் என்று ஒரு இடத்தில் அப்.பவுல் கூறினார். 

ஆம் நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். இஸ்ரவேல் என்றால் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று அர்த்தமாம். நாம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 

ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நாம் எந்த நாடு எந்த மொழி எந்த பகுதி எந்த சபைப் பிரிவு என்றாலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நாம் ஒரே சரீரம். நாம் பிரிந்திருக்க முடியாது.

ஜாதி யார் பார்ப்பார்?

ஒரு பிரசங்கியார் வேடிக்கையாக தன் பிரசங்கத்தில் பின்வருமாறு சொன்னார். இயேசு ஒரு இடத்தில் இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி வேறெவ்விதத்தினாலும் போகாது என்று சொன்னார் அல்லவா? 

ஆகவே இந்த ஜாதி என்பதெல்லாம் பிசாசுகளுக்குத்தான். இரட்சிக்கப்பட்ட நமக்கு அல்ல என்றார். இதற்கு மேல் இதைக் குறித்து நான் கூற விரும்புவதற்கொன்றுமில்லை. 

திருமணத்தின் போதாவது ஜாதி பார்க்கலாமா என்று கேட்டால் நான் பொதுவாக என் நண்பர்களிடம் கூறுகிற காரியம் என்னவெனில் திருமணத்தில் தேவ சித்தம்தான் முக்கியம். ஜாதி அல்ல. 

ஆகவே தேவ சித்தத்திற்கு தடையாக எந்தக் காரியத்தையும் வைக்காதீர்கள். தேவன் கண்டிப்பாக வேறுஜாதியைத்தான் நீ மணமுடிக்கவேண்டும் என்று சொல்ல மாட்டார். 

ஆனால் அதுவே அவரது சித்தமாக இருகும் போது நம் விருப்பமும் ஆசையும் அதை நம் வாழ்வில் நிறைவேறாமல் செய்துவிடும். விளைவு திருமண தோல்விகள். 

ஆகவே ஜாதியை மட்டுமல்ல - படிப்பு, அழகு, வரதட்சணை(வாங்கினால் வெட்கம்) குடும்ப அந்தஸ்து என எதையும் முன்வைக்காமல் ஆண்டவரே உம் சித்தமே என் பாக்கியம் என்று சொல்ல மட்டும் செய்யாமல் அதின்படி நடக்கவும் செய்யுங்கள். 

தேவன் நிச்சயமாக உங்களை ஏமாற்ற மாட்டார். நீங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிச் செய்வார்.அதுவே அவரது விருப்பமும் கூட. 

மறந்துவிடாதீற்கள் மறந்தும் இருந்துவிடாதீர்கள். மறக்காமல்........

கடிசியாக ஒருமுறை உங்களுக்கு ஒரு கேள்வி. நீங்க என்ன ஜாதி? (எல்லாம் பழக தோஷம்)

நான் யூத ஜாதி. அப்ப நீங்க



நன்றி: கிறிஸ்தவம்.காம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum