எப்படி ஜெபிக்கக்கூடாது? -R. ஸ்டான்லி
Mon Aug 19, 2013 11:47 am
1. கடவுளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
2. பிசாசைப் பழிசாட்டக்கூடாது.”சில சமயங்களில் பதிலானது “சரி” என்றிருக்கும்; பல தடவைகள் “கிடையாது” என்றிருக்கும்; அடிக்கடி, “காத்திரு” என்றிருக்கும்; இன்னும் பல சமயங்களில் ஆண்டவர் “மவுனம்” சாதித்து விடுவார்! இவைகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை அறிவோர் பாக்கியவான்கள்!”
3. பிதாவானவரை மறந்துவிடக்கூடாது.”நமது தோல்விகளுக்கான தார்மீகப் பொறுப்பை நாமே எடுத்துக் கொள்ள வேண்டுமென்று திருமறை போதிக்கிறது.”
4. மத்தியஸ்தர்களைத் தேடக்கூடாது.”ஆண்டவராகிய இயேசுவை நோக்கி ஜெபிப்பதே இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் திருமறை நெடுகவே போதிப்பது அதுவல்ல. எல்லாரும் செய்வது என்ன என்பதைவிட வேதம் போதிப்பது என்ன என்பதே முக்கியம்.”
5. பகையைப் பேணிவைக்கக்கூடாது.”இயேசுவை நமக்குக் கொண்டுவந்த மரியாளை ரோமன் கத்தோலிக்கர் வணங்குகிறார்கள்; இயேசுவிடம் நம்மைக் கொண்டுவரும் பிரசங்கிமாரைப் புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் கதாநாயகராய் வணங்குகிறார்கள். இருதிறத்தாரும் முழுக்க முழுக்க மனந்திரும்பி வேதத்திற்குத் திரும்பிவரவேண்டும். ஆண்டவர் “உங்கள்” ஜெபங்களுக்குப் பதில் தராவிட்டால், யாரும் உங்களுக்காய் அவரிடம் சிபாரிசு செய்யமுடியாது! “எந்தப் பிரச்னையானாலும் உடனே எங்களுக்கு எழுதுங்கள்; நாங்கள் உங்களுக்காய் ஜெபிப்போம்!”— இதெல்லாம் மேய்ப்பனின் குரல் அல்ல, அந்நியரின் சத்தம்! (யோ 10:5)”
6. தன்னலமாய் இருக்கக்கூடாது.”விசுவாசத்தோடும் மனவுறுதியோடும் ஜெபத்தில் ஆண்டவரைக் கிட்டிச்சேர சுத்த மனச்சாட்சி இன்றியமையாதது (1 யோ 3:20-22).”
7. உலகச் சிந்தையாய் இருக்கக்கூடாது.”ஏழை எளியவர், நெருக்கப்பட்டோர், திக்கற்றோர், விதவைகள் போன்றோர்மீது இறைமக்களுக்குக் கரிசனையில்லாதிருக்கும்போது அவர்கள் எவ்வளவுதான் ஜெபித்தாலும் அது ஆண்டவருக்கு உகந்ததல்ல (ஏசா1:15,16). துதிப்பதற்காகத் தங்கள் கைகளை ஆண் டவருக்கு நேராக மக்கள் எளிதாய் உயர்த்திவிடுகிறார்கள்; ஆனால் தங்களது உடைமைகளை இல்லாதோராடு பகிர்ந்து கொள்ளும்படித் தங்கள் கைகளை நீட்டவோ “மறந்து” விடுகிறார்கள் (எபி 13:15,16). இரண்டையுமே தமக்குப் பிரியமான பலிகள் என்றழைக்கிறார்
தேவன்.”
8. அதிகமாய்ப் பேசக்கூடாது.”கர்த்தருடைய ஜெபத்தைக் கவனிப்போம். அதிலுள்ள ஏழு விண்ணப்பங்களில் ஒன்றேயொன்றுதான் உடலுக்கானது: “அன்றன்றுள்ள ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” இந்த ஜெபத்திலுள்ள முதல் மூன்று விண்ணப்பங்களும் தேவனுடைய காரியங்களுக்கு அடுத்தவை; இறுதியான மூன்றும் நமது “ஆன்மீகத்”தேவைகளுக்கடுத்தவை. இந்த விகிதம் நமது ஜெபத்தில் காக்கப்படவேண்டும். நாமோ நமது பொருளாதார மற்றும் உடல் ரீதியான தேவைகளுக்கே அதிகக் கவனம் செலுத்துகிறோம் என்பதை மறுக்கமுடியாது.”
9. இயல்பற்ற விதத்தில் செயல்படக்கூடாது.”ஜெபத்தில் ஆண்டவருக்குப் பிரசங்கம்பண்ணக் கூடாது! “கர்த்தாவே, சொல்லும்; அடியேன் கேட்கிறேன்” என்றான் சின்ன சாமுவேல் (1 சாமு 3:9). நாமோ,“கர்த்தாவே, கேளும்; அடியேன் பேசுகிறேன்” என்கிறோம்.”
10. ஜெபிப்பதைக் குறித்துப் பெருமையடையக்கூடாது.”ஜெபத்தில் அதிக சத்தம் அதிக வல்லமை என்று தவறாய் எண்ணியுள்ளோம். சொல்லப்போனால், சரக்கு இல்லையென்றால்தான் சத்தம் அதிகமாயிருக்கும்! ஆவியில் ஜெபிப்பதென்றால் கத்தி ஜெபிப்பது என்ற பொய்யை நாம் நம்பி விடக்கூடாது. நாம் “ஆவியோடு” மட்டுமல்ல, “கருத்தோடும்” (உண்மையோடும்) கர்த்தரைத் தொழுதுகொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம்.”
”ஜெபத்தைப்பற்றி உபதேசிக்கும்போது ஆண்டவர் கொடுத்த முதல் எச்சரிப்பே ஜெபிப்பதைத் தம்பட்டம் அடிக்கக்கூடாது என்பதே (மத் 6:5,6). “ஜெபத்தின் இரகசியமே இரகசிய ஜெபம்தான்” என்றார் ஜெபவீரன் E.M பவுண்ட்ஸ் (1835-1913).”
நன்றி: இரட்சிப்பின் வழி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum