இயேசுவின் போதனைகளை கடைபிடித்தால் உலகில் போரை ஒழிக்கலாம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேச்சு
Sun Aug 18, 2013 5:24 pm
நமது தேச தலைவர்களுக்காக ஜெபியுங்கள்!
இயேசுவின் போதனைகளை கடைபிடித்தால் உலகில் போரை ஒழிக்கலாம் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேச்சு
பதிவு செய்த நாள் : Aug 17 | 09:55 pm
பெங்களூர்
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை கடைபிடித்தால் உலகில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.
ஹமீது அன்சாரி
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இயேசுவின் போதனைகள்
மனிதனின் சில அறியாமையான செயல்பாடுகள் உலக மக்களை பகைமை, வேற்றுமை, சண்டை சச்சரவுகளில் தள்ளி விடுகிறது.இயேசு கிறிஸ்துவின் எல்லையில்லாத அன்பு, இரக்கம், பரிவு பற்றிய போதனைகள் மனிதனை நல்வழிக்கு அழைத்து செல்கிறது.
போரை ஒழிக்கலாம்
இயேசு கிறிஸ்து என்ன கூறி உள்ளாரோ அதை நாம் பின்பற்றினோம் என்றால், உலகில் இருந்து போர், வேற்றுமை, பகைமை போன்றவற்றை எல்லாம் ஒழிக்க முடியும். உலகில் அமைதி நிலையாக நீடிக்கும். இது மனித சமுதாயம் செழித்தோங்கவும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.இந்தியாவில் கிறிஸ்தவ சமுதாயம், ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக செய்துள்ள சமுதாய பணிகள், கல்வி, பொது சுகாதாரம் போன்றவற்றில் ஆற்றியுள்ள சேவைகள் மகத்தானது. இதை மக்கள் ஒருபோதும் மறுக்க முடியாது.
நானும்...
நான் கூட சிம்லாவில் பள்ளிப்படிப்பையும், கொல்கத்தாவில் கல்லூரி படிப்பையும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களிலேயே முடித்தேன்.இவ்வாறு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கூறினார்.
Sent from http://bit.ly/itamil
நன்றி: முகநூல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum