பளிங்குப் படிக்கக் கண்ணாடியில் (crystal of nanostructured glass) தகவலைச் சேமித்தல்
Sun Aug 18, 2013 9:51 am
பிரித்தானியா சௌத்தம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் (University of Southampton) சார்ந்த அறிவியலாளர்கள் நானோக் கட்டமைப்புகளால் உருவான பளிங்குப் படிக்கக் கண்ணாடியில் (crystal of nanostructured glass) தகவலைச் சேமிக்கவும் பின்னர் வாசிக்கவும் முடிந்ததாக அறிக்கை விட்டுள்ளனர். மில்லியன் கணக்கிலான ஆண்டுகள் அழியாமல் இருக்கக்கூடிய இந்தப் படிகவட்டுகள் ஆயிரம் பாகை செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை நான்கடுக்கு நீலக்கதிர் வட்டுகளின் (ப்ளூ ரே) கொள்ளளவு 128 ஜிகாபைட்டுக்கள் மட்டுமே. அதேவேளை, வெப்பத்துணை காந்தப் பதிவி [heat-assisted magnetic recording hard drive (HAMR)] எனப்படும் வெப்ப லேசர் கதிர் மூலம் தகவலைப் பதியக்கூடிய வன்வட்டுகளின் கொள்ளளவு 20 டெராபைட்டுக்கள், ஆனால் இன்னமும் இந்தத் தொழில்நுட்பம் விற்பனைக்கு வரவில்லை. வன்வட்டு, குறுவட்டு, இறுவட்டு, நீலக்கதிர் வட்டு எனும் தகவல் சேமிப்பு வட்டுகளையெல்லாம் விஞ்சும் படிகவட்டுகளின் உருவாக்கத்துக்குரிய அத்திவாரம் போடப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 360 டெராபைட்.
எப்படி இந்தத் தொழில்நுட்பம் வேலை செய்கின்றது?
இந்தக் குவார்ட்ஸ் படிக முறை ஐந்து பரிமாண தகவல் சேமிப்பு என அழைக்கப்படுகின்றது. ஒரு குவார்ட்ஸ் கண்ணாடியின் உள்ளே நானோக் கட்டமைப்புப் புள்ளிகள் அமைந்துள்ள அடுக்குகளில் மிகவும் குறுகியதும் செறிவானதுமான ஒளித் துடிப்புகளை உருவாக்கும் ஃபெம்டோ செக்கன்ட் லேசர்கள் (1 ஃபெம்டோ செக்கன் = 10−15 செக்கன்கள்) தகவல் கோப்புகளை குறியீட்டுவடிவாக மாற்றுகின்றன. இந்த அடுக்குகள் தமக்கிடையே மிகவும் நெருங்கிய இடைவெளியில் (5 மைக்ரோ மீட்டர்கள்) அமைந்துள்ளன.
கண்ணாடியில் ஒளி ஊடுருவும்போது இந்த ஒளித் துடிப்பலைகள் புள்ளிகளின் முனைவாக்கத்தையும் ஒளிவிலகலையும் மாற்றுகின்றன. பின்னர் அந்தப் புள்ளிகளில் குறியீட்டுவடிவில் சேமிக்கப்பட்ட தகவல்கள் குறுவட்டு, இறுவட்டுகளை வாசிக்கப் பயன்படுத்தப்படும் லேசர் ஸ்கான் முறைமூலம் வாசிக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இவற்றில் மீண்டும் பதிவு செய்யலாமா என்பது தெரியவில்லை. இல்லையெனின் இந்தப் படிகவட்டுகளில் ஒருமுறை மட்டுமே தகவல்களைச் சேமிக்க முடியும். சேமித்த தகவல்களை அழிக்கமுடியுமா என்பதும் ஆய்வாளர்களால் கூறப்படவில்லை. அவர்கள் 300 கிலோபைட் உள்ள உரைக் கோப்பொன்றை (text file) வெற்றிகரமாகச் சேமித்து, பின்னர் தகவலைப் பெற்றுக்கொண்டு உள்ளனர்.
அறிவியல் புனை படங்களில் ஏற்கனவே பளிங்குகளில் தகவல் சேமிப்பு பற்றி வந்துள்ளது. இதனால் இந்த நுட்பத்தை “சூப்பர்மான் நினைவியப் படிகம் (Superman memory crystal)” என்று அழைக்கின்றனர். மில்லியன் ஆண்டுகளின் பின்னர் மனிதகுலம் அழிந்தாலும் இந்த நானோப் படிகவட்டுகள் அழியாது எமது தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் என்று நம்பப்படுகின்றது.
எனவே இத்தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால் உங்களது பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கும் அவர்களின் சந்ததிக்கும் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்கலாம். இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னர் வரலாறுகள் திரிபடைவதெல்லாம் இந்தத் தொழில்நுட்பம் மூலம் இல்லாது போய்விடும் என்று நம்புவோம்.
மேலதிக இணைப்புகள்:
நன்றி: பல்கலைக்கழகம்.காம்

- http://itcomputersupportnewyork.com/ITCSNYITechBlog/
- http://rt.com/news/5d-nanostructured-glass-optical-memory-941/
- http://inhabitat.com/revolutionary-superman-memory-crystals-can-store-data-virtually-forever/
- நன்றி: (https://www.facebook.com/mukkiyaseithikal )
நன்றி: பல்கலைக்கழகம்.காம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum