கிறிஸ்தவனே உன் கண்கள் கான்பது என்ன?
Sat Aug 17, 2013 8:18 am
கிறிஸ்தவனே உன் கண்கள் கான்பது என்ன? உன் மனதை கவர்ந்தது எது? இது உனக்கு கடைசி தருணமாகவும் இருக்கலாம் ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு.
நேரடியாகவே விஷயத்துக்கு வருகிறேன். இப்போது Facebook இலோ அல்லது இணையத்தளமொன்றிலோ இருந்து இந்த கட்டுரையை வாசிக்கும் சகோதரா, சகோதரி கணணியில் நீ பயன்படுத்தும் Crome இலோ அல்லது firefox இலோ, அல்லது வேறெந்த தேடுகருவியிலோ நீ Open செய்துவைத்திருக்கும் Tabs களை இப்போது ஒரு முறை பார்.
கிறிஸ்தவ தளங்களையும், அறிவுக்கு தேவையானவைகளையும் மட்டுமா Open பண்ணியிருக்கிறாய்? அல்லது அத்தோடு கூட (Phornography Sitas) நிர்வாணப்பட தளங்களையும் Open பண்ணியிருக்கிறாயா? அல்லது இதற்கு முன் பார்த்தாயா?
சகோதரா நீ அப்படிப்பட்ட படங்களையும், கட்டுரைகளையும், தளங்களையும் பார்க்கிறவனாயிருந்தால் – நீ பாவத்தின் வலையில் சிக்குன்டாய். சாத்தான் போட்ட தூண்டிலை விழுங்கி விட்டாய் (ஆபகூக். 01.15)
நீ யாரானாலும்சரி போக்குச் சொல்ல உனக்கு இடமில்லை……….. (ரோமா்.02.01)
இப்பொழுதே ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு (வெளி 3.19)
இல்லாவிட்டால் நீ பாவம் செய்கிறவனாயிருப்பாய் உன் பாவம் உன்னை தொடர்ந்து பிடிக்கும். (எண் 32.23)
மனந்திரும்பாவிட்டால் உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்திரல் கெட்டுப்போய் அழிந்து போவாய். (உபா 28.20)
ஆபாசப் படங்களை நீ பார்க்கிறவனாயிருந்தால் ஒன்றை விளங்கிக்கொள் நீ அதை பார்க்கும் போது உன் கண்ணை, சரீரத்தை அசுசிப்படுத்துகிறாய்.
உன் சரீரம் தேவனுடைய ஆலயம் (1கொரி 03.16)
ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தால் அவனை தேவன் கெடுப்பார். நீயே இந்த ஆலயம். (1கொரி 03.17)
அதுமட்டுமல்ல ஒரு பெண்ணை இச்சையோடு நீ பார்ப்பதே அவளோடு விபச்சாரம் செய்ததற்கு சமம். (மத்05.28) இது யேசு கூறிய வாக்கு.
எனவே நண்பனே, நண்பியே மனந்திரும்பு. ஆபாசப் படங்களை பார்ப்பதும், சுயபுணர்ச்சி செய்வதும் தேவனுக்க முன்பாக அருவருப்பு.
சுயபுணர்ச்சிக்காரா் தேவனுடைய ராட்சியத்தை சுதந்தரிக்க முடியாது. (1கொரி 06.09)
“நான் இந்த பாவத்திற்கு அடிமையாகி விட்டேன் என்னால் இந்த பாவத்தை விட முடியவில்லை” என்று சொல்கிறவனே/ளே கேள். உன்னை பாவம் செய் தூண்டுபவன் பிசாசு.
பிசாசுக்கு எதிர்த்து நின்றால் அவன் உன்னை விட்டு ஓடிப்போவான். (யாக் 04.07).
உன்னை ஒன்று கேட்கிறேன். நீ பிசாசுக்கு எதிர்த்து நின்றதுண்டா?
பாவத்துக்க விரோதமாய் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீ இன்னும் எதிர்த்த நிற்கவில்லையே. (எபி 12.04)
உன் கண்கள் பாவத்தை இச்சித்து, பார்க்க துடிக்கும் போது நான் பார்க்க மாட்டேன் என்று பிடிவாதமாய் அந்த இச்சைக்கு எதிர்த்து போராடிப் பார்த்திருக்கின்றாயா?
இல்லாவிட்டால் இனிமேல் போராடிப்பார்.
நான் இந்தப் பாவத்தை விடவேண்டுமென்று தேவனிடம் உதவி கேட்டு உபவாசத்துடன் தேவனுடைய பாதத்தில் விழுந்து அழுது புலம்பி ஜெபித்திருக்கின்றாயா?
இல்லாவிட்டால் இனிமேல் அப்படிச் செய்துபார்.
நீ கண்களின் இச்சை எனும் பாவத்தை வெல்ல கர்த்தர் உனக்கு உதவி செய்வார்
இயேசுக் கிறிஸ்துவால் விலை கொடுத்து வாங்கப்பட்டாய். ஆகையால் தேவனுக்கு உரியவையான உனது சரீரத்தாலும் உனது ஆவியினாலும் தேவனை மட்டுமே மகிமைப்படுத்து. (1கொரி- 06.20)
நண்பனே, நண்பியே. உனக்கு இவ்வளவு சொல்லும் நானும் ஆகாதவனாய் பேகாதபடிக்கு எனது சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறேன். (1கொரி- 09.27).
நன்றி: ஹை கிறிஸ்டியன்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum