மேரி கியுரி
Thu Jan 24, 2013 9:25 am
மேரி க்யூரி! - இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரிய பெண்மணி. நமக்கு ஏற்படும் பல நோய்களைக் கண்டறிந்து அவற்றைக்
குணப்படுத்துவதற்கு உதவும் ‘ரேடியம்’ என்ற மாபெரும் விஷயத்தையே கண்டுபிடித்தவர்.
ஆனால்இந்தப் பெண் விஞ்ஞானி இந்தச் சாதனையை அடைவதற்காக தன் உடல் நலன்,
குழந்தைகள், காதல் என்று எத்தனை விஷயங்களை இழக்க வேண்டி வந்தது
என்பதெல்லாம் ஒரு உருக்கமான சோகக் கதை!
ஒன்பது வயதானபோது அவரது
தாய் இறந்துவிட்டார். மனிதர்களின் நோயைத் தீர்க்கும் விதத்தில் தான் ஏதாவது
செய்தாக வேண்டும் என்று அப்போதுதான்
மேரியின் மனதில் ஒரு உறுதி ஏற்பட்டது.
கியூரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் ஆய்வு கூடத்தில் ரேடியம் என்ற ஒரு பொருளைக் கண்டுபிடித்தார்.
மனைவி மேரி செய்த இந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக ரேடியத்தை தன் தோலின்
மீதே ஊற்றிக் கொண்டார் கணவர் பியரி. இதனால் அவர் கையில் கட்டி ஏற்பட்டது.
அப்படி செய்த ஆராய்ச்சியின் மூலமாக ‘தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத
கட்டிகளுக்கு’ சிகிச்சை செய்ய ரேடியத்தை பயன்படுத்த முடியும் என்று
கண்டுபிடித்தார் மேரி. ‘கியூரி தெரபி’ என்றே இதற்குப் பெயரிட்டார்கள்
இந்தத் தம்பதியர்.
அணுவின் மர்மங்களை மேலும் அறிய கணவரும்
மனைவியும் முயற்சித்தார்கள். இதன் விளைவாக ‘குவாண்டம் மெக்கானிக்ஸ்’ என்ற
புதிய கோட்பாடு உருவானது.
அறிவியலின் மிகப்பெரிய திருப்புமுனை
இது. அந்த வருடம் தான் மேரி தம்பதிக்கு ஒரு அதிர்ஷ்ட வருடம்! இந்தக் கண்டு
பிடிப்புக்காக உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு கணவன்_மனைவி என
இருவருக்குமே கிடைத்தது!...
கதிரியக்க சாம்பிள்களைத் தொடர்ந்து
கையாண்டதால் அந்த தம்பதியர் விரல்களின் நுனி கறுத்து இறுகிப் போனது. உடல்
இளைத்தது. மகள் ஐரனே பிறந்த பிறகு உருவான அடுத்த குழந்தையும்
குறைப்பிரசவத்தில் இறந்து போனது. இந்தக் குடும்பக் கவலைகள், அவர்கள் நோபல்
பரிசு பெற்ற சந்தோஷத்தையே மழுங்கடித்தது.
கதிரியக்கத்தால் உடல்
ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளால் நோபல் பரிசைக்கூட நேரில் சென்று வாங்க
முடியாத நிலை ஏற்பட்டது! கணவர் பியரியின் உடல்நிலையோ வேகமாக சீரழிந்துக்
கொண்டிருந்தது. பியரியின் பார்வை திடீரென மோசமடைய, கவனக் குறைவால் ஒரு
குதிரை வண்டியின் முன் விழுந்தார். குதிரையும், வண்டியும் அவர் மேல் ஏற,
உடனடியாக இறந்துவிட்டார்.
மேரியால் இந்தத் துக்கத்தைத் தாங்க
முடியவில்லை. இறந்தது அன்பான கணவன் மட்டுமல்ல, ஆராய்ச்சியிலும் கூடவே வந்த
துணையும் ஆயிற்றே! தனியாக ஆராய்ச்சியினை தொடர்ந்தார். கதிரியக்கம் தொடர்பான
தொடர் ஆராய்ச்சிகளின் காரணமாக, மேரிக்கு கண்களில் கேடராக்ட், காதில்
எப்போதும் ஒலி, தோலில் மாற்றம் போன்ற பல பாதிப்புகள் இருந்து
கொண்டேயிருந்தன. ஆனால் மேரி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
ஓய்வில்லாமல் மக்கள் நலனுக்காக தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி க்யூரி, கடைசியில் புற்று நோயால் இறந்தார்.
---------------------------------------------------------------------------
மேரி கியூரி தனது ஆராய்ச்சிக்கு தன்னையே சோதனை பொருளாக அமைத்துக் கொண்டார்.
கிறிஸ்துவும் மனுகுல மீட்புக்காக, மனித சாயலை தெரிந்து கொண்டார். மனிதனின்
எல்லா சுக-துக்கங்களையும் கடந்து சென்றார். சோதனைகளை சகித்தார். சிலுவை
சுமந்தார். கல்வாரியில் தம்மை தாமே ஒப்புக் கொடுத்தார்.
கிறிஸ்துவின் அடியவர்களாகிய நாமும் அவர் வார்த்தையின் படி நமது சிலுவை
எடுத்து அவரை பின்பற்ற அழைக்கபட்டிருக்கிறோம். இந்த சிலுவை பாதையில் வரும்
எல்லா சோதனைகளை சகிக்கவும், வெற்றி கொள்ளவுமே நாம் தெரிந்து
கொள்ளபட்டுள்ளோம்.
வேதத்தின் மகத்துவங்களை அனுதினம் தியானிக்கும் நாம், அதை பின்பற்றுவதில் நம்மையே சோதனை பொருளாக நிறுத்த தீர்மானிப்போம்.
[ யாக்கோபு 1 : 12 | சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன்
உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு
வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். ]
நன்றி: கதம்பம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum